'# எந்த விதமான மிரட்டலுக்கும் பயப்படமாட்டேன்: மதுரையில் நடைபெறவுள்ள அ.தி.மு.க. பொதுக்கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும்: ஜெயலலிதா பேட்டி# தமிழகத்தில் பா.ம.க. தலைமையில் 3வது அணி அமைக்க தயாராக இருக்கிறோம்: ராமதாஸ் பேச்சு # மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறார் சோனியா காந்தி # மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் காவி பயங்கரவாதம் பேச்சுக்கு வி.ஹெச்.பி. கண்டனம் # பாட்னா: கடத்தப்பட்ட 4 போலீசாரில் ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டதாக மாவோயிஸ்ட்கள் தகவல் # பாகிஸ்தான் சிறையில் இருந்து 100 இந்திய மீனவர்கள் விடுதலை # சூதாட்டம் எதிரொலி: பாகிஸ்தான் வீரர்கள் 3 பேர் திடீர் நீக்கம் # '
அதிகம் கேட்கப்படும் கேள்விகள்

விகடன் இ-புக் ஸ்டோருக்கு வருக!

நமது புத்தகம் படிக்கும் வழக்கத்தை தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே வருகின்றன. எளிமைப்படுத்திக் கொண்டே வருகின்றன. இணையம் அதிகம் புழக்கத்துக்கு வந்தபின், புத்தகத்தை ஆன்லைனில் படித்துக்கொள்வதும், டவுன்லோட் செய்து கணினியில் வைத்துப் படித்துக்கொள்வதும் இன்று பெருகிவருகிறது. இ-புக் வடிவில் புத்தகத்தைப் படித்துக்கொள்வது இன்று இணையத் தொடர்புள்ள எவருக்கும் எளிதான வழியாக இருக்கிறது.

விகடன் பிரசுர நூல்களை இனி நீங்கள் இ-புக் வடிவில் படித்துப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

1. விகடன் இ-புக்கை எப்படி வேலை செய்கிறது?

விகடன் இ-புக், விண்டோஸின் இண்டர்நெட் எக்ஸ்புளோரைச் சார்ந்து வேலை செய்கிறது. ஃபயர்ஃபாக்ஸோ (Firefox), வேறு உலாவிகளோ (Browsers) உபயோகிப்பவர்களுக்கு இப்போதைக்கு இது வேலை செய்யாது.

2. எப்படி விகடன் இ-புக் வாங்குவது?

விரிவான விளக்கம்பெற இங்கே சொடுக்கவும்.

3. விகடன் இ-புக்கை வாசிக்க ஏதேனும் குறிப்பிட்ட எழுத்துரு Font) வேண்டுமா?

விகடன் இ-புக்குகள், யூனிகோட் தர எழுத்துருக்களைப் பயன்படுத்துகின்றன. பொதுவாக எல்லா விண்டோஸ் கணினிகளிலும் (விண்டோஸ் 95, 98 தவிர) லதா என்ற யூனிகோட் எழுத்துரு இருக்கும். அதனால், நீங்கள் எந்த ஒரு எழுத்துருவையும் டவுன்லோட் செய்யாமலேயே படிக்கலாம்.

எழுத்துரு பிரச்னை இருக்குமானால், இந்தச் சுட்டியில் இருந்து யூனிகோட் எழுத்துருக்களை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். இதை உங்கள் விண்டோஸ் ஃபாண்ட் போல்டரில் சேமித்துக்கொண்டு, மீண்டும் விகடன் இ-புக்கைத் திறந்து படிக்கவும்.

4. விகடன் இ-புக்கை, நண்பர்களுக்கு இரவல் கொடுக்க முடியுமா?

நீங்கள் வாங்கும் இ-புக்கை உங்கள் கணினியில் மட்டுமே படிக்க முடியும். பத்து இலக்க கீ மூலம், இந்த இ-புக் உங்கள் பிரத்யேக பிரதியாகிவிடுகிறது. நண்பர்களுக்கு இந்த இ-புக்கை அனுப்பி வைக்க முடியும். ஆனால், அதைப் படிக்க அவர்களும் விகடனில் பணம் செலுத்தி மீண்டுமொரு கீ வாங்கிக்கொண்டால்தான் படிக்க முடியும்.

5. விகடன் இ-புக்கை பிரிண்ட் எடுக்க முடியுமா?

பிரிண்ட் எடுக்க முடியாது.

மேலும் உதவிகள் வேண்டுவோர் :pubonline@vikatan.com இமெயில் அனுப்பவும்.