உங்கள் ராசிக்கு 2-ல் சனியும், 6-ல் குருவும் உலவுவது சிறப்பாகாது. ராகு, கேது ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இல்லாததால் எதிலும் முழுமையான வெற்றியைப் பெற இயலாமல் போகும். மதிப்பும் அந்தஸ்தும் குறையும். உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். குடும்பத்தில் பிரச்னைகள் சூழும். பொருளாதார நெருக்கடி உண்டாகும். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. வீண்வம்பு கூடாது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. கெட்டவர்களின் சகவாசம் கூடாது. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியமாகும். யாருக்கும் ஜாமீன் கொடுக்கலாகாது. பிற மொழி, மத, இனக்காரர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத்துணைவராலும், பங்குதாரர்களாலும் சங்கடங்கள் சூழும். மே 10-ஆம் தேதி முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை குரு வக்கிர நிலையில் உலவுவதால் பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். மக்கள் நலம் சீர்பெறும். டிசம்பர் 9-ஆம் தேதி முதல் குரு 7-ஆமிடம் மாறுவதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். கணவன் மனைவி உறவு நிலை சீர்பெறும். எதிர்ப்புக்கள் விலகும். பண நடமாட்டம் கூடும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். மக்களால் அனுகூலம் உண்டாகும்.
ஜனவரி மாதத்தில் கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். முக்கியப் பதவிகளும் பட்டங்களும் சிலருக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம், நிர்வாகம், அரசியல், பத்திரிகை, எழுத்து சம்பந்தப்பட்ட இனங்களைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். குடும்ப நலனில் கவனம் தேவை. நூதனமானவர்களிடம் நெருக்கம் கூடாது.
பிப்ரவரி மாதத்தில் சங்கடங்கள் கூடும். எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. வீண்வம்பு, வழக்குகளில் பிரவேசிக்கலாகாது. எதிர்ப்புக்கள் அதிகரிக்கும். பக்குவமாகச் சமாளிப்பது அவசியமாகும். ஜனன கால ஜாதகம் வலுத்திருக்குமானால் கவலைப்படத் தேவையில்லை. இறைவழிபாடு மன அமைதி தரும்.
மார்ச் மாதத்தில் 7-ஆம் தேதி முதல் கலைஞர்கள் ஓரளவு நலம் பெறுவார்கள். 10-ஆம் தேதி முதல் வியாபாரிகளுக்கு மந்த நிலை விலகும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை. குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.
ஏப்ரல் மாதத்தில் கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். மாதப் பின்பகுதியில் பண வரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள், நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்புக் கூடும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம்.
மே மாதத்தில் வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். 10-ஆம் தேதி முதல் பண வரவு அதிகரிக்கும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். 19-ஆம் தேதி முதல் கலைஞர்கள், மாதர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். குடும்ப நலனிலும், மக்கள் நலனிலும் கவனம் தேவை.
ஜூன் மாதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்து வரும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். வியாபாரம், கணிதம், எழுத்து, விஞ்ஞானம் போன்ற துறைகள் ஆக்கம் தரும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. யாரிடத்திலும் சுமுகமாகப் பழகுவது அவசியமாகும். வீண்வம்பு கூடாது.
ஜூலை மாதத்தில் குடும்ப நலம் சீராக இராது. சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரலாம். வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. கெட்டவர்களின் தொடர்பு கூடாது. எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். கலைஞர்கள் அளவோடு நலம் பெறுவார்கள்.
ஆகஸ்ட் மாதத்தில் பண வரவு கூடும். கலைத்துறையினருக்கு ஓரளவு அனுகூலம் உண்டாகும். சொத்துக்கள் சேரும். எதிர்ப்புக்கள் குறையும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வாய்ப்புக் கூடிவரும். குடும்ப நலனில் கவனம் செலுத்தி வருவது நல்லது. புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம்.
செப்டம்பர் மாதத்தில் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதால் பொருளாதாரப் பிரச்னைகள் ஏற்படும். சுப காரியங்கள் நிகழத் தாமதம் உண்டாகும். செவ்வாய் வலுத்திருப்பதால் எதிர்ப்புக்கள் விலகும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். சொத்துக்கள் சேரும். மாதப் பின்பகுதியில் அரசுப் பணிகள் ஆக்கம் தரும்.
அக்டோபர் மாதத்தில் புதிய பொருட்கள் சேரும். நிலபுலங்கள் லாபம் தரும். அரசுப் பணிகளில் அனுகூலமான போக்கைக் காணலாம். கலைஞர்களுக்கு சுபிட்சம் கூடும். மாதர்கள் நலம் கூடப் பெறுவார்கள். குடும்ப நலனில் கவனம் தேவை. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை. மக்களால் சிறுசங்கடம் உண்டாகும்.
நவம்பர் மாதத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். மக்களால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். வியாபாரம் பெருகும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இனங்கள் லாபம் தரும். பொருள் கொடுக்கல்-வாங்கல் இனங்களில் விழிப்புத் தேவை. 7-ஆம் தேதி முதல் கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்னைகள் சூழும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை.
டிசம்பர் மாதத்தில் அரசுப் பணிகள் ஆக்கம் தரும். 9-ஆம் தேதி முதல் குரு 7-ஆமிடம் மாறுவதால் எதிர்ப்புக்கள் விலகும். பண நடமாட்டம் கூடும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் வெற்றி காணலாம். கலைஞர்களும் மாதர்களும் விழிப்புடன் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6.
திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
பரிகாரம்: குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களுக்குப் பிரீதி செய்வது நல்லது. ஏழரைச் சனியின் காலமிது என்பதால் சனிக்கிழமை மாலை வேளையில் சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுங்கள். ராகுவுக்காகத் துர்க்கையையும், கேதுவுக்காக விநாயகரையும் வழிபடுவதன் மூலம் சங்கடங்கள் குறையும். |