குரு, சனி ஆகியோரது பலம் சிறப்பாக இல்லை. ஜூன் மாதம் 20-ஆம் தேதி வரையிலும் செவ்வாய் அனுகூலமாக உலவுகிறார். மே 2-ஆம் தேதி வரையிலும் ராகுவும், பிறகு கேதுவும் நலம் புரிவார்கள். குரு 4-ல் இருந்தாலும் 8, 10, 12-ஆம் இடங்களையும், விரயச் சனியையும் பார்ப்பதால் அளவோடு அனுகூலம் உண்டாகும். பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். பயணத்தால் நலம் கூடும். இயந்திரப் பணியாளர்கள், இஞ்சினீயர்கள் ஆகியோர் வளர்ச்சி காண்பார்கள். மாணவர்களது திறமை வெளிப்படும். புதிய பொருட்களும் சொத்துக்களும் சேரும். கலைத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். மாதர்கள் நலம் கூடப் பெறுவார்கள். அரசாங்கத்தாரால் நலம் விளையும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். மக்களால் செலவுகள் கூடும். ஸ்பெகுலேஷன் துறைகளால் அதிகம் ஆதாயமிராது. குல தெய்வத்தை வழிபடுவது நல்லது. தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். மூத்த சகோதர, சகோதரிகளின் நலனில் அக்கறை தேவைப்படும். குழந்தைகளை விட்டுப் பிரிந்திருக்க நேரலாம். மே 10 முதல் செப்டம்பர் 8 வரை குரு வக்கிரநிலையில் உலவுவது சிறப்பாகாது. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை. மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 8 வரையிலும் எதிலும் விழிப்புத் தேவை. மனத்திற்குச் சலனத்தைத் தரக்கூடிய சம்பவங்கள் நிகழும். டிசம்பர் 7-ஆம் தேதி முதல் குரு 5-ஆமிடம் மாறுவதால் நல்ல திருப்பத்தைக் காணலாம். மக்கள் நலம் சீர்பெறும். பண நடமாட்டம் கூடும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் உருவாகும்.
ஜனவரி மாதத்தில் கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். புதிய சொத்துக்கள் சேரும். மாணவர்களது நிலை உயரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். எதிரிகள் அடங்கிப்போவார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். மக்கள் நலனில் கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
பிப்ரவரி மாதத்தில் மக்களால் செலவுகள் கூடும். குழந்தைகளை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிவரும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். புதிய பொருட்கள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும்.
மார்ச் மாதத்தில் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். காரியத்தில் வெற்றி கிட்டும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். புதிய சொத்துக்கள் சேரும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் இனங்களால் ஆதாயம் கூடும். உடல் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். கால், கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும்.
ஏப்ரல் மாதத்தில் இயந்திரப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். கணவன் மனைவி உறவு நிலை சாதாரணமாகவே காணப்படும். கலைஞர்கள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. மாதப் பின்பகுதியில் வியாபாரிகளுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும்.
மே மாதத்தில் தரும காரியங்களில் ஈடுபாடு கூடும். கடல் வாணிபம் லாபம் தரும். மக்கள் நலனில் கவனம் தேவை. பொறியியல் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆதாயம் கூடும். பொருள் கொடுக்கல்-வாங்கள் இனங்களில் விழிப்புத் தேவை. மற்றையோரால் ஏமாற்றப்பட நேரலாம். கெட்டவர்களின் தொடர்பு கூடாது.
ஜூன் மாதத்தில் தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வப் பணிகளிலும், தருமப் பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். பொறியியல் துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். திரவப் பொருட்கள் லாபம் தரும். மாதப் பின்பகுதியில் விரும்பத்தகாத இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதும் அவசியமாகும். வீண் வம்பு, வழக்குகளில் ஈடுபடலாகாது. வாழ்க்கைத்துணைவராலும், மக்களாலும் பிரச்னைகள் சூழும்.
ஜூலை மாதத்தில் வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். மாணவர்களது நிலை உயரும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். சிலருக்குப் பதவிச் சிறப்பு உண்டாகும். மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை.
ஆகஸ்ட் மாதத்தில் செலவுகளும் இழப்புக்களும் கூடும் நேரமிது. எதிலும் யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். மனத்திற்குச் சலனத்தைத் தரக்கூடிய சம்பவங்கள் நிகழும். பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. 24-ஆம் தேதி முதல் புதன் பலம் பெறுவதால் பிரச்னைகள் குறையும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற இனங்கள் ஆக்கம் தரும்.
செப்டம்பர் மாதத்தில் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதால் சங்கடங்கள் குறையும். பொருள் சேரும். 19-ஆம் தேதி முதல் குடும்பத்தில் குதூகலம் கூடும். கலைத்துறையினருக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். எக்காரியத்திலும் பதற்றம் கூடாது.
அக்டோபர் மாதத்தில் உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். மாதர்கள் நலம் கூடப் பெறுவார்கள். பண வரவு கூடும். வீண் செலவுகள் குறையும். மாதப் பின்பகுதியில் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம்.
நவம்பர் மாதத்தில் வெற்றி வாய்ப்புக்கள் கூடும். எதிரிகள் அடங்கிப்போவார்கள். போட்டிப் பந்தயங்களில் வெற்றி காணலாம். நிலபுலங்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். 19-ஆம் தேதி முதல் வியாபாரத்தில் முழுக்கவனம் தேவை. தொழில் ரீதியாகப் பிரச்னைகள் ஏற்படும்.
டிசம்பர் மாதத்தில் அரசுப் பணிகள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவுவார்கள். மக்கள் நலம் சீர்பெறும். பொருளாதார நிலை உயரும். எதிரிகள் விலகுவார்கள். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். மனத்தில் உற்சாகம் பெருகும். முக்கியமான எண்ணங்கள் ஈடேற வாய்ப்புக் கூடிவரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 5, 6.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.
பரிகாரம்: ஊனமுள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள். குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குங்கள். சனிக்கிழமை சாயங்காலத்தில் சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுங்கள். மே மாதம் வரை கேதுவுக்குப் பிரீதியாக விநாயகரையும், மே மாதம் முதல் ராகுவுக்குப் பிரீதியாக துர்க்கையையும் வழிபடுங்கள். |