உங்கள் ராசிக்கு 8-ல் சனியும் 12-ல் குருவும் உலவுவது சிறப்பாகாது. ராகு, கேது ஆகியோரது சஞ்சாரமும் இந்த வருடம் முழுவதும் சாதகமாக இல்லாததால் எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. மனத்தில் சலனத்தை உண்டுபண்ணக்கூடிய சம்பவங்கள் நிகழும். உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். மதிப்பும் அந்தஸ்தும் குறையும். எண்ணங்கள் ஈடேறக் குறுக்கீடுகளும் தடைகளும் உண்டாகும். அதிகம் உழைத்தாலும் அதற்கான பயன் கிடைப்பது அரிதாகும். பொருள் கொடுக்கல்-வாங்கல் இனங்களில் விழிப்புத் தேவை. சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். குடும்பநலனில் கவனம் தேவை. பிற மொழி, மத, இனக்காரர்களால் சங்கடங்களுக்கு ஆளாக நேரலாம். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியமாகும். பயணத்தின்போது பாதுகாப்பு தேவை. மருத்துவச் செலவுகள் ஏற்படும். மே 10-ஆம் தேதி முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரையிலும் 12-ல் உள்ள குரு வக்கிர நிலையில் உலவுவதால் நலம் உண்டாகும். பொருள் வரவு கூடும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு உண்டாகும். செப்டம்பர் 8 முதல் குரு வக்கிரநிவர்த்தி பெறுவதால் பிரச்னைகள் சூழும். டிசம்பர் 9-ஆம் தேதி முதல் குரு ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதும் சிறப்பாகாது. விரும்பத்தகாத இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை உண்டாகும். அலைச்சல் கூடும். மனக்கிலேசம் ஏற்படும். ஜனன கால ஜாதகம் வலுத்திருக்குமானால் கெடுபலன்கள் பெருமளவு குறையும். இறைவழிபாட்டிலும் கிரக வழிபாட்டிலும் ஈடுபடுவது நல்லது.
ஜனவரி மாதத்தில் கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மாதர்களது நிலை உயரும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். மாதப் பின்பகுதியில் மனத்திற்குச் சலனத்தைத் தரக்கூடிய சம்பவம் ஒன்று நிகழும். மதிப்பும் அந்தஸ்தும் குறையும். உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். வீண் விவகாரங்களில் ஈடுபடலாகாது. புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம்.
பிப்ரவரி மாதத்தில் இயந்திரப் பணியாளர்களுக்கும் இஞ்சினீயர்களுக்கும் வரவேற்பு கூடும். கலைஞர்கள் தொடர்ந்து நலம் பெறுவார்கள். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். சுபச் செலவுகள் கூடும். குடும்ப நலனில் கவனம் தேவை. பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புடன் இருப்பது நல்லது.
மார்ச் மாதத்தில் செல்வாக்கும் மதிப்பும் உயரும். நல்ல எண்ணங்கள் உருவாகும். மற்றையோர் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். மாதப் பின்பகுதியில் அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும்.
ஏப்ரல் மாதத்தில் உடன் பிறந்தவர்களால் நலம் உண்டாகும். தகவல் தொடர்புத் துறைகள் ஆக்கம் தரும். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம், போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும். பொறியியல் துறை லாபம் தரும். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம்.
மே மாதத்தில் கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். கணவன் மனைவியரிடையே சிறுசிறு சலசலப்புக்கள் ஏற்படும். கூட்டாளிகளிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. பயணத்தின்போது விழிப்புத் தேவை. கெட்டவர்களின் தொடர்பைத் தவிர்ப்பது அவசியமாகும்.
ஜூன் மாதத்தில் மக்களால் அளவோடு நலம் உண்டாகும். ஸ்பெகுலேஷன் இனங்கள் லாபம் தரும். முக்கியமான ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். மற்றையோரிடம் கோபப்படாமல் சுமுகமாகப் பழகுவதன் மூலம் அவர்களது அதிருப்திக்கு ஆளாகாமல் தப்பலாம். எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம்.
ஜூலை மாதத்தில் எதிர்ப்புக்கள் கூடும். மனத்தில் நிம்மதி குறையும். உடல் நலம் பாதிக்கும். உடன் பிறந்தவர்களாலும், தந்தையாலும், வேலையாட்களாலும் சங்கடங்கள் சூழும். ஜாதக பலம் இல்லாதவர்களுக்குக் கண்டம் ஏற்படும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது.
ஆகஸ்ட் மாதத்தில் சோதனைகள் மேலும் கூடும். யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. மனத்தில் நிம்மதி குறையும். உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். பொருள்வரவு குறைந்து செலவுகள் கூடும். கைப்பொருளை இழக்கவும் நேரலாம். எதிர்ப்புக்களின் கரம் வலுத்திருக்கும் நேரமிது என்பதால் விழிப்புத் தேவை.
செப்டம்பர் மாதத்தில் தெய்வப் பணிகளிலும் தருமப் பணிகளிலும் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி காணலாம். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். தொலைதூரத் தொடர்பு ஓரளவு பயன்படும். புதிய பொருட்கள் சேரும்.
அக்டோபர் மாதத்தில் செய்து வரும் தொழிலில் ஓரளவு வளர்ச்சி காணலாம். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். மாதப் பின்பகுதியில் அரசுப் பணிகள் ஆக்கம் தரும். வியாபாரிகள், மாணவர்கள், கணிதத்துறையாளர்கள் ஆகியோர் வளர்ச்சி காண்பார்கள். கடுமையாக உழைப்பவர்களுக்குப் பயன் கூடுதலாகக் கிடைக்கும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். எதிர்ப்புக்கள் குறையும்.
நவம்பர் மாதத்தில் சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். எதிரிகள் விலகிப் போவார்கள். சுப காரியச் செலவுகள் கூடும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். வியாபாரம் பெருகும். பிற மொழி, மதக்காரர்களிடம் விழிப்புத் தேவை. உழைப்புக்குப் பின்வாங்கலாகாது.
டிசம்பர் மாதத்தில் முக்கியமான ஓரிரு காரியங்கள் நிறைவேறும். கலைத்துறை ஊக்கம் தரும். இயந்திரப்பணியாளர்களும் இஞ்சினீயர்களும் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். மாதப் பின்பகுதியில் செலவுகள் கூடும். சிக்கன நடவடிக்கை தேவை. உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். வீண்வம்பு வேண்டாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.
திசைகள்: வடக்கு, தென்கிழக்கு.
பரிகாரம்: நவக்கிரகங்களையும் வழிபடவும். கோளறு திருப்பதிகம் பாராயணம் செய்யவும். ஊனமுள்ளவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் நலம் பெறலாம். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களையும், குடும்பப் பெரியவர்களையும் வணங்கி அவர்களது வாழ்த்துக்களைப் பெறவும். |