குரு, சனி ஆகிய முக்கியக் கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எதிரிகள் விலகிப்போவார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். பொருளாதார நிலை உயரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். வெற்றி வாய்ப்புக்கள் கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காணலாம். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிட்டும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு உதவுவார்கள். தெய்வப் பணிகள் நிறைவேறும். கூட்டுத் தொழில் லாபம் தரும். மாணவர்களது நிலை உயரும். மே 3-ஆம் தேதி முதல் ராகு 8-ஆமிடத்திற்கும், கேது 2-ஆமிடத்திற்கும் மாறுவது சிறப்பாகாது. இதனால் சிறுசிறு இடையூறுகள் அவ்வப்போது ஏற்படும். பயணத்தின்போது விழிப்புத் தேவை. சிறு கண்டம் உண்டாகும். குடும்ப நலனில் கவனம் செலுத்திவருவது நல்லது. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். மே 10-ஆம் தேதி முதல் குரு வக்கிரம் பெறுவதால் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை. செப்டம்பர் 8 முதல் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதால் நல்ல திருப்பத்தைக் காணலாம். டிசம்பர் 9-ஆம் தேதி முதல் குரு 8-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. வாழ்க்கைத்துணைவராலும், மக்களாலும் பிரச்னைகள் சூழும். செய்தொழிலில் கவனம் தேவை.
ஜனவரி மாதத்தில் முக்கியப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு உதவுவார்கள். செய்தொழிலில் வளர்ச்சி காண வழிபிறக்கும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் சோதனையான நேரமிது.
பிப்ரவரி மாதத்தில் நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். உடன் பிறந்தவர்களாலும், மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் உண்டாகும். இயந்திரப் பணியாளர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் வெற்றி வாய்ப்புக்கள் கூடும். தந்தை நலனில் கவனம் தேவை. அரசு விவகாரங்களில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும்.
மார்ச் மாதத்தில் பொருளாதார நிலை உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். சுப காரியங்கள் நிகழும். மாதப் பின்பகுதியில் புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். தந்தை நலம் சீர்பெறும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி காணலாம். கலைஞர்கள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள்.
ஏப்ரல் மாதத்தில் செய்தொழிலில் அபிவிருத்தி காணலாம். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிட்டும். மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் நலம் கூடும். பொருளாதார நிலை திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். முக்கியப் பொறுப்புக்கள் கிடைக்கும். நல்லவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். சுப காரியங்கள் நிகழும். மன மகிழ்ச்சி கூடும்.
மே மாதத்தில் குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். பயணத்தால் சிறு சங்கடம் உண்டாகும். வீண்வம்பு வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். கண், வாய், முகம் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். பணம் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது.
ஜூன் மாதத்தில் பொருள் வரவைக் காட்டிலும் செலவுகள் கூடும். தேவைகளைச் சமாளிக்கக் கடன்படவும் நேரலாம். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். தொழிலாளர்களுக்கு அனுகூலமான போக்குத் தென்படும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். 21-ஆம் தேதி முதல் இயந்திரப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும்.
ஜூலை மாதத்தில் செல்வாக்கும் மதிப்பும் உயரும். உடல் நலம் சீர்பெறும். பொருள் வரவு கூடும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களிலும், போட்டிப் பந்தயங்களிலும், விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புக்கள் ஏற்படும்.
ஆகஸ்ட் மாதத்தில் கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் வந்து சேரும். வியாபாரிகள் 7-ஆம் தேதி முதல் விழிப்புடன் இருப்பது நல்லது. 9-ஆம் தேதி முதல் செவ்வாய் 4-ஆமிடம் மாறுவதால் உடல் நலனில் கவனம் தேவை. தாய் நலம் பாதிக்கும். மாதப் பின்பகுதியில் பெற்றோருக்கும் மக்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். 24-ஆம் தேதி முதல் புதன் வலுப்பெறுவதால் மாணவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் செழிப்பான சூழ்நிலை உருவாகும். சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற இனங்கள் ஆக்கம் தரும்.
செப்டம்பர் மாதத்தில் 8-ஆம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதால் பொருள் வரவு கூடும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். புதிய பொருள் சேரும். நல்லவர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். 19-ஆம் தேதி முதல் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் உண்டாகும். மனத்தில் உற்சாகம் கூடும். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள்.
அக்டோபர் மாதத்தில் தொழிலாளர்களுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பணவரவு கூடும். சுப காரியங்கள் நிகழும். மாத முன்பகுதியில் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். 13-ஆம் தேதி முதல் கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். நூதன நட்பு கூடாது.
நவம்பர் மாதத்தில் வெற்றி வாய்ப்புக்கள் கூடும். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். பண வரவு அதிகரிக்கும். எதிரிகள் விலகிப் போவார்கள். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
டிசம்பர் மாதத்தில் நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். பிரச்னைகள் விலகும். அரசியல், நிர்வாகம், பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். 9-ஆம் தேதி முதல் குரு 8-ஆமிடம் மாறுவதால் செய்தொழிலில் அபிவிருத்தி காண அரும்பாடுபடவேண்டிவரும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை. மாதப் பின்பகுதியில் வாழ்க்கைத்துணைநலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7, 8.
திசைகள்: வடகிழக்கு, வடமேற்கு, மேற்கு.
பரிகாரம்: மே 3-ஆம் தேதி முதல் சர்ப்ப சாந்தி செய்வது நல்லது. ராகுவுக்காகத் துர்க்கையையும், கேதுவுக்காக விநாயகரையும் வழிபடவும். |