ராசிநாதன் குரு 10-ல் இருந்தாலும், 2, 4, 6-ஆம் இடங்களையும், செவ்வாய், சனி, கேது ஆகியோரையும் பார்ப்பது சிறப்பாகும். இதனால் குடும்பநலம் சீராகவே இருந்துவரும். புதிய சொத்துக்கள் சேரும். மாணவர்களது நிலை உயரும். எதிரிகள் கட்டுக்குள் அடங்கியிருப்பார்கள். பிரச்னைகள் குறையும். உழைப்பு வீண்போகாது. பக்தி மார்க்கத்திலும் ஞானமார்க்கத்திலும் ஈடுபாடு கூடும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். 4-ல் செவ்வாயும் 12-ல் ராகுவும் இருப்பதால் பயணத்தால் சங்கடங்களுக்கு ஆளாக நேரலாம். வீண் செலவுகள் ஏற்படும். மே 3-ஆம் தேதி முதல் ராகு 11-ஆமிடம் மாறுவதால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் நலம் தரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். மே 10-ஆம் தேதி முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை குரு வக்கிர நிலையில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். மக்கள் நலம் சீர்பெறும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். மதிப்பு உயரும். டிசம்பர் 9-ஆம் தேதி முதல் குரு 11-ஆமிடம் மாறுவது விசேடமாகும். இதனால் முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும். மன மகிழ்ச்சி கூடும். 5-ல் உள்ள கேதுவைக் குரு பார்க்கும் நிலை அமைவதால் மக்களால் அனுகூலம் உண்டாகும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். மந்திர, தந்திர, யந்த்ர சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். அறநிலையங்களில் தொழில் புரிபவர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும்.
ஜனவரி மாதத்தில் சொத்துக்கள் சேரும். காரியத்தில் வெற்றி கிட்டும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். எதிரிகள் விலகிப் போவார்கள். மக்களால் சிறுசங்கடம் உண்டாகும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. கைப்பொருளைப் பத்திரப் படுத்தி வைத்துக் கொள்வது அவசியமாகும். பயணத்தின்போது விழிப்புத் தேவை.
பிப்ரவரி மாதத்தில் எதிர்ப்புக்கள் விலகும். காரியானுகூலம் உண்டாகும். 12-ஆம் தேதி முதல் கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். 13-ஆம் தேதி முதல் வீண் செலவுகள் கூடும். உடல் நலனில் கவனம் தேவை. கால், கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். மாணவர்களது நிலை உயரும்.
மார்ச் மாதத்தில் நிலபுலங்களால் ஆதாயம் கிடைத்து வரும். புதிய சொத்துக்களும் சேரும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். 10-ஆம் தேதி முதல் வியாபாரிகள் விழிப்புடன் இருப்பது அவசியம். உடல் நலனில் கவனம் தேவைப்படும். பயணத்தின்போது விழிப்புத் தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. பெரியவர்களின் மனம் புண்படும் காரியங்களில் ஈடுபடலாகாது.
ஏப்ரல் மாதத்தில் கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். மாதப் பின்பகுதியில் வியாபாரிகள் மந்தநிலை விலகப் பெறுவார்கள். மாணவர்களது எண்ணம் ஈடேறும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். சொத்துக்களால் வருவாய் கூடும்.
மே மாதத்தில் ராகு 11-ஆமிடம் மாறுவதால் வீண் செலவுகள் குறையும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். 5-ல் செவ்வாயும், கேதுவும் இணைவதால் தீய பழக்கவழக்கங்களுக்கு இடம் தரலாகாது. மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். 10-ஆம் தேதி முதல் குரு வக்கிரம் பெறுவதால் பொருளாதார நிலை உயரும். நற்பணிகளில் ஈடுபாடு கூடும். 14-ஆம் தேதி முதல் சூரியன் 3-ஆமிடம் மாறுவதால் அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும்.
ஜூன் மாதத்தில் நிர்வாகத்திறமை கூடும். கலைஞர்களது நிலை உயரும். உடன் பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். தகவல் தொடர்பு இனங்களில் வளர்ச்சி காணலாம். மக்கள் நலனில் கவனம் தேவை. தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சனி பலத்தால் தொடர்ந்து நன்மைகள் உண்டாகும். மாதப் பின்பகுதியில் வெற்றி வாய்ப்புக்கள் கூடும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். இயந்திரப் பணியாளர்கள் 21-ஆம் தேதி முதல் ஏற்றம் பெறுவார்கள்.
ஜூலை மாதத்தில் வியாபாரம் சிறக்கும். மாணவர்களது திறமை கூடும். புதிய பொருட்கள் சேரும். அறிவாற்றல் பளிச்சிடும். இயந்திரப் பணியாளர்கள், இஞ்சினீயர்கள் ஆகியோர் வளர்ச்சி காண்பார்கள். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி காணலாம். பயணத்தால் நலம் உண்டாகும்.
ஆகஸ்ட் மாதத்தில் எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். இயந்திரப் பணியாளர்களுக்கு வெற்றி கிட்டும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் சங்கடங்கள் சூழும். வாழ்க்கைத்துணைவரின் நலனில் கவனம் தேவை. செலவுகள் கூடும். 24-ஆம் தேதி முதல் நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். கணிதத்துறை ஆக்கம் தரும்.
செப்டம்பர் மாதத்தில் அரசுப்பணிகள் ஓரளவு பயன்படும். எதிர்ப்புக்கள் குறையும். மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் சிறுசிறு சங்கடங்கள் உண்டாகும். ஸ்பெகுலேஷன் துறைகளால் அதிகம் ஆதாயமிராது. யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகவேண்டாம். 19-ஆம் தேதி முதல் கலைஞர்களுக்கு மந்தநிலை விலகும்.
அக்டோபர் மாதத்தில் உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். நல்ல தகவல் வந்து சேரும். கலைஞர்களும் மாதர்களும் சுபிட்சம் காண்பார்கள். பொருள் சேரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். இயந்திரப் பணியாளர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். மக்கள் நலனில் கவனம் தேவை. தீய பழக்கவழக்கங்களுக்கு இடம் தரலாகாது.
நவம்பர் மாதத்தில் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு ஆக்கம் தரும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். சொத்துக்கள் சேரும். வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள். 7-ஆம் தேதி முதல் கலைஞர்களும் மாதர்களும் சங்கடங்களுக்கு ஆளாக நேரலாம். அரசுப் பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. மக்களால் மன அமைதி குறையும்.
டிசம்பர் மாதத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். மனத்தில் உற்சாகம் நிறைந்திருக்கும். மக்கள் நலம் சீர்பெறும். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேற வாய்ப்பு உண்டாகும். செய்தொழிலில் அபிவிருத்தி காணலாம். உடன் பிறந்தவர்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் உண்டாகும். எதிரிகள் விலகிப்போவார்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 7, 8, 9 மே 3-ஆம் தேதி முதல் எண் 4-ம் நலம் தரும்.
திசைகள்: வடகிழக்கு, வடமேற்கு, தெற்கு.
பரிகாரம்: 12-ல் உலவும் ராகுவுக்குப் பிரீதி செய்யுங்கள். செவ்வாய், வெள்ளி ராகு காலங்களில் துர்க்கையை வழிபடுவது நல்லது. துர்க்கைக்குரிய ஸ்லோகங்களைப் பாராயணம் செய்யலாம். திருநாகேஸ்வரம், திருகாளஹஸ்தி ஆகிய தலங்களுக்குச் சென்று வருவதும் நல்லது.
|