'# கொலை முயற்சி வழக்கில் காடுவெட்டி குரு கைது: பழி வாங்கும் செயல்: டாக்டர் ராமதாஸ் கண்டனம் # என்.எல்.சி. ஊழியர்கள் போனஸ் விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி # அணுசக்தி ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்றுவோம்: மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்பு # இடையூறுகளை சந்தித்தாலும் சேதுசமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேறும்: முதலமைச்சர் கருணாநிதி # அணுசக்தி ஒப்பந்த பிரச்னையில் மத்திய அரசுக்கு இடதுசாரிகட்சிகள் 7ம் தேதிவரை கெடு # ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து போராட்டம் #'


ரிஷபம் எலக்ட்ரானிக் இனங்களால் ஆதாயம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
உங்கள் ராசிக்கு 8-ல் குருவும், 4-ல் சனியும் கேதுவும் இருப்பது விசேடமாகாது. முக்கியக் கிரகங்கள் அனுகூலமாக இல்லாததால் எதிலும் யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். அலைச்சலும் உழைப்பும் கூடும். உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் கூடும். பக்குவமாகச் சமாளிப்பது அவசியமாகும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை. செய்து வரும் தொழில் எதுவானாலும் முழு அக்கறை செலுத்துவது அவசியமாகும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. பெண்களுக்குப் பிரச்னைகள் கூடும். மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். தந்தையால் மனவருத்தம் உண்டாகும். மே 3-ஆம் தேதி முதல் கேது 3-ஆமிடம் மாறுவதால் தாய் நலம் சீர்பெறும். சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். மே 10-ஆம் தேதி முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரையிலும் குரு வக்கிர நிலையில் உலவுவதால் சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். பண வரவு சற்று அதிகரிக்கும். டிசம்பர் 9-ஆம் தேதி முதல் குரு 9-ஆமிடம் மாறுவதால் தொலைதூரத் தொடர்பு பயன்படும். மக்கள் நலம் சீர்பெறும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பிரச்னைகள் விலகி, வாழ்வில் முன்னேற நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். எலக்ட்ரானிக் இனங்களால் ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணத்திட்டம் ஈடேறும்.

ஜனவரி மாதத்தில் மதிப்புக்கும் அந்தஸ்துக்கும் குறைவிராது. வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். நூதனமானவர்கள் உதவுவார்கள். மாணவர்களுக்கு அளவோடு நலம் உண்டாகும். உஷ்ணாதிக்கத்தால் உடல் நலம் பாதிக்கும். பெற்றோர் நலனிலும் மக்கள் நலனிலும் கவனம் தேவைப்படும். கலைஞர்கள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும்.

பிப்ரவரி மாதத்தில் தொலைதூரத் தொடர்பு பயன்படும். கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள், மாதர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். மாதப் பின்பகுதியில் புதிய பொருட்கள் சேரும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். மக்களுக்கும் பெற்றோருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

மார்ச் மாதத்தில் நற்பணிகளில் கலந்து கொள்வீர்கள். தொலைதூரப் பயணம் ஆக்கம் தரும். 10-ஆம் தேதி முதல் வியாபாரிகளுக்குச் செழிப்பான சூழ்நிலை உருவாகும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் இனங்கள் லாபம் தரும். நிறுவன, நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

ஏப்ரல் மாதத்தில் மனத்திற்கினிய சம்பவங்கள் நிகழும். வாழ்க்கை வசதிகள் கூடும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். எதிரிகள் குறைவார்கள். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் மன உற்சாகம் நிறைந்திருக்கும். மாதப் பின்பகுதியில் உடல் நலனில் கவனம் தேவை.

மே மாதத்தில் எதிர்ப்புக்கள் விலகும். மனத்தில் துணிவு கூடும். புதிய சொத்துக்கள் சேரும். நண்பர்கள் உதவுவார்கள். 10-ஆம் தேதி முதல் பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும்.

ஜூன் மாதத்தில் மதிப்பு உயரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து உபசாரங்களில் ஈடுபாடு கூடும். துணிச்சலான காரியங்களில் ஈடுபடவும், அவற்றில் வெற்றி பெறவும் வாய்ப்புக் கூடிவரும். மாதர்கள் நலம் கூடப் பெறுவார்கள். சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். தந்தை நலனில் கவனம் தேவை.

ஜூலை மாதத்தில் குடும்பத்தில் குதூகலம் கூடும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும். திறமை வீண்போகாது. பக்தி மார்க்கத்தில் நாட்டம் உண்டாகும். பயணத்தால் சிறு சங்கடம் ஏற்படும். இயந்திரப் பணியாளர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களால் இடர்ப்பாடுகள் உண்டாகும். தாய்நலனில் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு 22-ஆம் தேதி வரையிலும் அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும்.

ஆகஸ்ட் மாதத்தில் சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். அரசாங்கப் பணிகள் ஆக்கம் தரும். 7-ஆம் தேதி முதல் வியாபாரிகளுக்கு மந்த நிலை விலகும். 9-ஆம் தேதி முதல் மக்களால் செலவுகள் ஏற்படும். 24-ஆம் தேதி முதல் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும்.

செப்டம்பர் மாதத்தில் வியாபாரிகளுக்கு லாபம் கூடும். மக்களால் ஓரிரு நன்மைகள் உண்டாகும். தெய்வப் பணிகள் நிறைவேறும். 19-ஆம் தேதி முதல் உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். மாதர்களும் கலைஞர்களும் விழிப்புடன் இருப்பது நல்லது. 25-ஆம் தேதி முதல் எதிர்ப்புக்கள் குறையும். இயந்திரப்பணிகள் லாபம் தரும்.

அக்டோபர் மாதத்தில் எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். மக்களால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். நிலபுலங்கள் சேரும்.

நவம்பர் மாதத்தில் பொறியியல் துறை லாபம் தரும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற இனங்களைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். 7-ஆம் தேதி முதல் கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்னைகள் விலகும். எதிர்பாராத பொருள் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் அமைதி காணலாம்.

டிசம்பர் மாதத்தில் எதிர்ப்புக்கள் கூடும். யாரிடத்திலும் பக்குவமாகப் பேசிப் பழகுவது நல்லது. தொலைதூரத் தொடர்பு பயன்படும். 9-ஆம் தேதி முதல் குரு 9-ஆமிடம் மாறுவதால் பொருளாதார நிலையில் அபிவிருத்தி காண வாய்ப்புக் கூடிவரும். சுப காரியங்கள் நிகழும். கலைத்துறை ஊக்கம் தரும். மக்கள் நலம் சீர்பெறும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். புதிய பொருள் சேரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5.

திசைகள்: தென்மேற்கு, வடக்கு.

பரிகாரம்: குரு, சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து வருவது நல்லது.

 


 

Contact Us