'# கொலை முயற்சி வழக்கில் காடுவெட்டி குரு கைது: பழி வாங்கும் செயல்: டாக்டர் ராமதாஸ் கண்டனம் # என்.எல்.சி. ஊழியர்கள் போனஸ் விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி # அணுசக்தி ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்றுவோம்: மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்பு # இடையூறுகளை சந்தித்தாலும் சேதுசமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேறும்: முதலமைச்சர் கருணாநிதி # அணுசக்தி ஒப்பந்த பிரச்னையில் மத்திய அரசுக்கு இடதுசாரிகட்சிகள் 7ம் தேதிவரை கெடு # ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து போராட்டம் #'


சிம்மம் மன மகிழ்ச்சி
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

உங்கள் ராசிக்கு 5-ல் குரு உலவுவது விசேடமாகும். சனி ஜன்ம ராசியில் உலவுவதால் உடல் நலம் பாதிக்கும். எதிரிகளால் சங்கடம் உண்டாகும். என்றாலும் சனி குருவின் பார்வையைப் பெறுவதால் அதிகம் சங்கடங்களைத் தர மாட்டார். இதனால் உங்கள் சுய பலம் கூடும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல் நலம் சீராக இருந்து வரும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். மன மகிழ்ச்சி கூடும். எதிர்ப்புக்கள் விலகும். குரு 9, 11-ஆம் இடங்களைப் பார்ப்பதால் மக்களாலும் பெற்றோராலும் அனுகூலம் உண்டாகும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். பொருளாதார நிலை திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். சுப காரியங்கள் நிகழும். தெய்வப் பணிகளிலும் தருமப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். மே 3-ஆம் தேதி முதல் ராகு 6-ஆமிடம் மாறுவதால் வெளிநாட்டுத் தொடர்பு வலுப்பெறும். கேது 12-ஆமிடம் மாறுவதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மே 10-ஆம் தேதி முதல் குரு வக்கிர நிலை பெற்றாலும் சுப பலன்கள் கூடவே செய்யும். சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். டிசம்பர் 9-ஆம் தேதி முதல் குரு 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. இதனால் மக்கள் நலம் பாதிக்கும். பொருளாதார நிலையில் சரிவு உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் குறையும். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். மறதியால் அவதிப்பட நேரலாம். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக வேண்டிவரும். சுப காரியங்கள் நிகழத் தாமதம் உண்டாகும். ஜனன கால ஜாதகம் வலுத்திருக்குமானால கவலைப்படத் தேவையில்லை.

ஜனவரி மாதத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். பெற்றோரால் மக்களுக்கும் மக்களால் பெற்றோருக்கும் அனுகூலம் உண்டாகும். புதிய பொருள் சேரும்.

பிப்ரவரி மாதத்தில் மன உற்சாகம் கூடும். திடீர்ப் பொருள் வரவு உண்டாகும். சுப காரியங்கள் நிகழும். எதிர்ப்புக்கள் விலகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். இயந்திரப் பணிகள் ஆதாயம் கொண்டுவரும். பெற்றோராலும் மக்களாலும் அனுகூலம் உண்டாகும். நூதனமானவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம்.

மார்ச் மாதத்தில் மக்கள் நலம் சீராகவே இருந்து வரும். பொருளாதார நிலை உயரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. கலைஞர்களும் மாதர்களும் விழிப்புடன் இருப்பது நல்லது. கெட்டவர்களின் தொடர்பு கூடாது. நேரான பாதையில் செல்வது அவசியமாகும்.

ஏப்ரல் மாதத்தில் உடல் நலனில் கவனம் தேவைப்படும். உஷ்ணாதிக்கத்திற்கு இடம் தரலாகாது. பொறியியல் துறை லாபம் தரும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். 14-ஆம் தேதி முதல் முக்கியப் பொறுப்புக்களும் பதவிகளும் வந்து சேரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.

மே மாதத்தில் வியாபாரம் சிறக்கும். தெய்வப் பணிகளிலும் தருமப் பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். மக்களாலும் பெற்றோராலும் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். நிலபுலங்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. உடன் பிறந்தவர்களின் நலனில் கவனம் தேவைப்படும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. செய்தொழிலில் அபிவிருத்தி காணலாம். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிட்டும்.

ஜூன் மாதத்தில் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வீண் செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. பயணத்தால் அனுகூலம் உண்டு என்றாலும் பாதுகாப்பும் தேவை.

ஜூலை மாதத்தில் மாணவர்களும் மாதர்களும் நலம் கூடப் பெறுவார்கள். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். இயந்திரப் பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. உடலில் காயம் பட நேரலாம். கெட்ட எண்ணங்களுக்கும் கெட்டவர்களின் தொடர்புக்கும் இடம் தரலாகாது.

ஆகஸ்ட் மாதத்தில் பொருள் வரவைக் காட்டிலும் செலவுகள் கூடும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. பெற்றோருக்கும் மக்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. மாதப் பின்பகுதியில் முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். அரசியல் ஈடுபாடு பயன்படும். 24-ஆம் தேதி முதல் பண வரவு கூடும். குடும்ப நலம் சிறக்கும். வியாபாரம் பெருகும். பொருள் திரட்டுவதில் ஆர்வம் கூடும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

செப்டம்பர் மாதத்தில் பொருளாதார நிலை உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். எதிரிகள் விலகிப் போவார்கள். மக்களாலும், பெற்றோராலும் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் வந்து சேரும். 19-ஆம் தேதி முதல் கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். 25-ஆம் தேதி முதல் வெற்றி வாய்ப்புக்கள் கூடும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும்.

அக்டோபர் மாதத்தில் நில புலங்கள் லாபம் தரும். புதிய சொத்துக்களும் சேரும். கலைத்துறை ஊக்கம் தரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். வியாபாரம் பெருகும். குடும்ப நலம் திருப்தி தரும். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற இனங்கள் லாபம் தரும். உழைப்பு வீண்போகாது.

நவம்பர் மாதத்தில் நண்பர்கள் உதவுவார்கள். நிலபுலங்களின் சேர்க்கையோ, அல்லது அவற்றால் ஆதாயமோ கிடைத்து வரும். மக்களால் மன மகிழ்ச்சி கூடும். சுப காரியங்கள் நிகழும். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிர்ப்புக்கள் விலகும். பெற்றோரால் அனுகூலம் உண்டாகும். காரியத்தில் வெற்றி காணலாம்.

டிசம்பர் மாதத்தில் வாழ்க்கைத்துணைநலம் கவனிக்கப்படவேண்டிவரும். செய்தொழிலில் முழுக்கவனம் தேவை. பெண்களுக்குப் பிரச்னைகள் சூழும். மக்கள் நலம் சீராக இராது. பொருளாதார நிலையில் வளர்ச்சி காண்பது அரிது. குருவும் சனியும் சஷ்டாஷ்டகமாக இருப்பதால் சோதனைகள் கூடும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.
ஜாதகபலம் கூடியிருக்குமானால் கவலைப்படத் தேவையில்லை.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 6, 9.

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, வடக்கு, தென்கிழக்கு, தெற்கு.

பரிகாரம்: ராகு, கேது, சனி ஆகிய கிரகங்களுக்குப் பிரீதி செய்வது நல்லது. துர்க்கையையும், விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடுங்கள். காளஹஸ்தி, திருநள்ளாறு ஆகிய திருத்தலங்களுக்குச் சென்று வருவது நல்லது.

 


 

Contact Us