'# கொலை முயற்சி வழக்கில் காடுவெட்டி குரு கைது: பழி வாங்கும் செயல்: டாக்டர் ராமதாஸ் கண்டனம் # என்.எல்.சி. ஊழியர்கள் போனஸ் விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி # அணுசக்தி ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்றுவோம்: மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்பு # இடையூறுகளை சந்தித்தாலும் சேதுசமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேறும்: முதலமைச்சர் கருணாநிதி # அணுசக்தி ஒப்பந்த பிரச்னையில் மத்திய அரசுக்கு இடதுசாரிகட்சிகள் 7ம் தேதிவரை கெடு # ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து போராட்டம் #'


தனுசு: பயணத்தால் நன்மை
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
குரு, சனி, செவ்வாய் ஆகிய முக்கியக் கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் விசேடமான நன்மைகளை ப் பெற இயலாமல் போகும். பொருளாதாரநிலையில் சரிவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி காண்பது அரிது. வீண்வம்பு வழக்குகளில் ஈடுபடலாகாது. யாருக்கும் வாக்கு கொடுக்கவேண்டாம். உடல் நலனில் கவனம் தேவை. எதிர்ப்புக்கள் கூடும். மனத்தில் ஏதேனும் சலனம் உண்டாகும். குரு ஜன்ம ராசியில் அமர்ந்து 5, 7, 9-ஆம் இடங்களையும், சனி, கேது ஆகியோரையும் பார்ப்பதால் மக்கள் நலம், வாழ்க்கைத்துணைநலம், தந்தை நலம் ஆகியவை கவனிப்பின்பேரில் சீராக இருந்துவரும். ராகு 3-ல் இருப்பதால் வெளிநாட்டவரால் அனுகூலம் உண்டாகும். பயணத்தால் ஒரு எண்ணம் ஈடேறும். மே 3-ஆம் தேதி முதல் ராகு 2-ஆம் இடத்திற்கும் கேது 8-ஆம் இடத்திற்கும் மாறுவதால் குடும்ப நலம் பாதிக்கும். விஷத்தாலும், விஷ ஜந்துக்களாலும் ஆபத்து உண்டாகும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது. மே 10-ஆம் தேதி முதல் குரு வக்கிரம் பெறுவதும் சிறப்பாகாது. செலவுகள் கூடும். மனக்குழப்பம் உண்டாகும். பேச்சில் தெளிவிராது. முன்னுக்குப் பின் முரணாகப் பேச நேரலாம். டிசம்பர் 9-ஆம் தேதி முதல் குரு 2-ஆமிடம் மாறுவதால் சங்கடங்கள் விலகும். பொருளாதார நிலை உயரும். நற்காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். மக்கள் நலம் சீர்பெறும். புதிய பொருட்கள் சேரும். ஜனன கால ஜாதகம் வலுத்திருக்குமானால் கவலைப்படத் தேவையில்லை.

ஜனவரி மாதத்தில் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். முக்கியமான ஓரிரு காரியங்கள் நிறைவேறும். தெய்வப் பணிகளிலும் தருமப் பணிகளிலும் பங்கேற்பீர்கள். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். கலைத்துறை ஊக்கம் தரும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம்.

பிப்ரவரி மாதத்தில் வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். பயணத்தால் ஒரு காரியம் நிறைவேறும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பண வரவு சற்று அதிகரிக்கும். தந்தை நலனில் கவனம் தேவை. 13-ஆம் தேதி முதல் அரசுப் பணிகள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள்.

மார்ச் மாதத்தில் குடும்பத்தில் குதூகலம் கூடும். விருந்து உபசாரங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பேச்சாற்றல் பளிச்சிடும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். மாதர்கள் நலம் பெறுவார்கள். வியாபாரம் பெருகும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். அரசுப் பணியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். உடன்பிறந்தவர்களால் நலம் உண்டாகும். நல்ல தகவல் வந்து சேரும். வாழ்க்கைத்துணைநலம் சிறக்கும்.

ஏப்ரல் மாதத்தில் நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். புதிய பொருட்களும் சொத்துக்களும் சேரும். மாணவர்களது நிலை உயரும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.

மே மாதத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். மக்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு ஏற்படும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கலைஞர்களது நிலை உயரும். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். குடும்ப நலனில் கவனம் தேவை. 2-ல் ராகுவும் 8-ல் செவ்வாய், கேது ஆகியோரும் இருப்பதால் பயணத்தின்போதும் இயந்திரங்களின் பக்கம் நெருங்கும்போதும் விழிப்புத் தேவை. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். மாதப் பின்பகுதியில் வாழ்க்கைத்துணைவரால் சங்கடம் உண்டாகும்.

ஜூன் மாதத்தில் அரசுப் பணிகள் ஆக்கம் தரும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். உடன் பிறந்தவர்களது நலனில் கவனம் தேவை. வீண்செலவுகளும் இழப்புக்களும் உண்டாகும். உடல் நலம் சீராக இராது. இரத்தம் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களது நலனில் கவனம் தேவை. எக்காரியத்திலும் வேகம் கூடாது. 21-ஆம் தேதி முதல் செவ்வாய் 9-ஆமிடம் மாறுவதால் பிரச்னைகள் விலகும்.

ஜூலை மாதத்தில் வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். மக்களாலும், தந்தையாலும் ஓரளவு நலம் உண்டாகும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்களில் வளர்ச்சி காணலாம்.

ஆகஸ்ட் மாதத்தில் பெற்றோர் நலனில் கவனம் தேவை. அரசுப் பணிகளில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது அவசியமாகும். இயந்திரப் பணியாளர்கள், இஞ்சினீயர்கள், ரியல் எஸ்டேட் இனங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் அனுகூலமான போக்குத் தென்படும். மாதப் பின்பகுதியில் வெற்றி வாய்ப்புக்கள் கூடும்.

செப்டம்பர் மாதத்தில் செய்தொழிலில் அபிவிருத்தி காணலாம். கணிதம், எழுத்து, பத்திரிகை, வியாபாரம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். இயந்திரப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். தந்தையால் அனுகூலம் உண்டாகும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். குடும்ப நலனில் கவனம் தேவை. நூதனமானவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.

அக்டோபர் மாதத்தில் வாழ்க்கை வசதிகள் கூடும். எதிர்ப்புக்கள் விலகும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். இயந்திரப் பணிகள் லாபம் தரும். கலைஞர்களது நிலை உயரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். பெரியவர்கள் உதவுவார்கள். வியாபாரம் சிறக்கும். கணவன் மனைவி உறவுநிலை திருப்தி தரும்.

நவம்பர் மாதத்தில் செலவுகள் கூடும். மக்களால் சிறு சங்கடம் உண்டாகும். கலைஞர்களுக்கு அனுகூலமான போக்குத் தென்படும். இடமாற்றம் ஏற்படும். 15-ஆம் தேதி முதல் அரசு விவகாரங்களில் விழிப்புத் தேவை. 19-ஆம் தேதி முதல் வியாபாரிகளுக்கு முன்னேற்றம் தடைப்படும். செய்தொழிலில் அதிகம் கவனம் தேவை.

டிசம்பர் மாதத்தில் குடும்பநலம் சீர்பெறும். பண வரவு கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். முக்கியமான ஓரிரு காரியங்கள் நிறைவேறும். கடன் குறையும். பிரச்னைகள் விலகும். செய்தொழிலில் வளர்ச்சி காணச் சந்தர்ப்பம் உருவாகும். மக்கள் நலம் சீர்பெறும். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 5, 6.

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.

பரிகாரம்: கேதுவுக்குப் பிரீதியாக விநாயகரை வழிபடவும். மே 3 முதல் ராகுவுக்குப் பிரீதியாக துர்க்கையை வழிபடவும். குரு வக்கிர நிலையில் உலவும் காலத்தில் குருவையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.

 


 

Contact Us