'# திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் காடுவெட்டி குரு: பழிவாங்கும் நடவடிக்கை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் # நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு: சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு # 3வது அணியில் விரிசல்: ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியில் இருந்து சமாஜ்வாதி கட்சி வெளியேற சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல் # அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தயார்: காங்கிரஸ் # மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் அணுசக்தி ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படும்: அத்வானி பேட்டி # ராமேஸ்வர மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் #'


துலாம் உழைப்பால் உயர்வு
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
சனி, கேது ஆகியோரது சஞ்சாரம் இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக இருப்பதால் உழைப்புக்குரிய பயனைப் பெறுவீர்கள். சோர்வுக்கு இடம் தராமல் பாடுபடுவது நல்லது. சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு கூடும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் லாபம் கூடும். குரு பலம் இல்லாததாலும், ராகு பலம் குறைந்திருப்பதாலும் விசேடமான ஆதாயத்தை எதிலும் பெற இயலாது. மற்றையோரால் ஏமாற்றப்பட நேரலாம். மக்கள் நலனில் கவனம் தேவை. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. யாருக்கும் ஜாமீன் தரலாகாது. கெட்ட எண்ணங்களுக்கும் கெட்ட பழக்கவழக்கங்களுக்கும் இடம் தரவேண்டாம். குறுக்கு வழிகளில் செல்ல நினைத்தால் சங்கடப்பட வேண்டிவரும்; எச்சரிக்கை. பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது அவசியமாகும். சுப காரியங்கள் நிகழத் தாமதம் உண்டாகும். செய்தொழிலில் முழுக்கவனம் தேவை. சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். உங்களுடைய நலனிலும் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களால் அனுகூலமிராது. நெருங்கிய உறவினரை இழக்க நேரலாம். மே 10 முதல் செப்டம்பர் 8 வரையிலும் குரு வக்கிர நிலையில் சஞ்சரிப்பதால் நலம் புரிவார். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணவும், குடும்பத்தில் சுப காரியம் நிகழவும், அதிர்ஷ்ட வாய்ப்புக்களைப் பெறவும் இந்தக்காலகட்டம் சாதகமானதாக அமையும். ஜனன கால ஜாதகம் வலுத்திருக்குமானால் சங்கடங்கள் குறையவும் சுப பலன்கள் கூடவும் வாய்ப்புண்டாகும்.

ஜனவரி மாதத்தில் குடும்பத்தில் குதூகலம் கூடும். புதிய பொருட்கள் சேரும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற இனங்கள் லாபம் தரும். மக்கள் நலனில் கவனம் தேவை.

பிப்ரவரி மாதத்தில் உடன் பிறந்தவர்களால் நலம் கூடப் பெறலாம். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். புதிய பொருட்கள் சேரும். மாதப் பின்பகுதியில் மக்கள் நலம் பாதிக்கும். மனத்தில் ஏதேனும் குழப்பம் உண்டாகும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். ஸ்பெகுலேஷன் துறைகளால் அதிகம் ஆதாயமிராது.

மார்ச் மாதத்தில் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். மாதப் பின்பகுதியில் அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இனங்கள் லாபம் தரும்.

ஏப்ரல் மாதத்தில் எதிர்ப்புக்கள் குறையும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். செலவுகள் கூடும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. திரவப் பொருட்கள் லாபம் தரும்.

மே மாதத்தில் வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். மாணவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலை உருவாகும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். கடல் வாணிபம் செய்பவர்களுக்கு ஆதாயம் கூடும். 10-ஆம் தேதி முதல் குரு வக்கிர நிலை பெறுவதால் பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

ஜூன் மாதத்தில் திடீர்ப் பொருள்வரவைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். செய்தொழிலில் வளர்ச்சி காணலாம். பொறியியல் துறை லாபம் தரும். அலைச்சல் கூடும் என்றாலும் அதற்கான பயன் கிடைக்கும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். புனிதப்பணிகளில் ஈடுபாடு கூடும்.

ஜூலை மாதத்தில் சுப காரியங்கள் நிகழும். தெய்வ தரிசனம், சாது தரிசனம் ஆகியவை கிட்டும். பொருள் வரவு கூடும். இயந்திரப் பணியாளர்கள், இஞ்சினீயர்கள் ஆகியோர் வளர்ச்சி காண்பார்கள். மருத்துவர்களது எண்ணம் ஈடேறும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும்.

ஆகஸ்ட் மாதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். மனத்திற்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். பெரியவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். மக்களால் அளவோடு நலம் உண்டாகும். 9-ஆம் தேதி முதல் செவ்வாய் 12-ஆமிடம் மாறுவதால் வீண் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை. கூட்டாளிகளிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. எதிலும் வேகம் கூடாது. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். பயணத்தின்போது பாதுகாப்புத் தேவை.

செப்டம்பர் மாதத்தில் பொருள் வரவைக் காட்டிலும் செலவுகள் கூடும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. 19-ஆம் தேதி முதல் சுக்கிரன் வலுப்பெறுவதால் பொருள் சேர்க்கை கூடும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைத்துறை ஊக்கம் தரும். மாதர்களது எண்ணம் ஈடேறும். எக்காரியத்திலும் பதற்றம் கூடாது.

அக்டோபர் மாதத்தில் குடும்பத்தில் குதூகலம் கூடும். மனத்தில் உற்சாகம் பெருகும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். புதிய பொருள் சேரும். அரசியல், நிர்வாகம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.

நவம்பர் மாதத்தில் நல்ல தகவல் வந்து சேரும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். சொத்துக்கள் சேரும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். 19-ஆம் தேதி முதல் வியாபாரிகளுக்கு லாபம் கூடும். மாணவர்களது திறமை பளிச்சிடும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

டிசம்பர் மாதத்தில் நிலபுலங்கள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். 8-ஆம் தேதி முதல் வியாபாரிகள் விழிப்புடன் இருப்பது நல்லது. 9-ஆம் தேதி முதல் செய்தொழிலில் வளர்ச்சி காணலாம். 15-ஆம் தேதி முதல் அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். முக்கியப் பொறுப்புக்களும் பதவிகளும் கிடைக்கும். 19-ஆம் தேதி முதல் எதிர்ப்புக்கள் விலகி, வாழ்வில் வெற்றி வாய்ப்புக்கள் கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 7, 8.

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, மேற்கு.

பரிகாரம்: ராகுவுக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. துர்க்கைக்குரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடுங்கள். குருபலம் இல்லாததால் வியாழக்கிழமைகளில் குருமூர்த்திக்கும், தட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது. குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை வழிபடுவதன் மூலமும் நலம் உண்டாகும்.

 


 

Contact Us