உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 10-ல் சனியும் உலவுவது விசேடமாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண வாய்ப்புக் கூடிவரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். பேச்சிலும் செயலிலும் திறமை வெளிப்படும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிகழும். அலைச்சலும் உழைப்பும் வீண்போகா. பெரியவர்களும் தனவந்தர்களும் உதவுவார்கள். தெய்வப் பணிகள் நிறைவேறும். புதிய முயற்சிகள் கைகூடும். உடன் பிறந்தவர்களால் மன வருத்தம் உண்டாகும். மே 3-ஆம் தேதி முதல் ராகு 3-ஆமிடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் ஆக்கம் தரும். மே 10 முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை குரு வக்கிர நிலையில் சஞ்சரிப்பதால் அதிகம் அனுகூலமிராது. சிறுசிறு சங்கடங்கள் ஏற்படும். அதன்பிறகு நிலைமையில் வளர்ச்சி காணலாம். டிசம்பர் 9-ஆம் தேதி முதல் குரு 3-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும். மக்கள் நலனில் அக்கறை தேவைப்படும். மற்றையோரால் ஏமாற்றப்பட நேரலாம். செய்தொழிலில் முழுக்கவனம் தேவை. மறதியால் பாதிக்கப்பட நேரலாம். மாணவர்கள் படிப்பில் அதிகம் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
ஜனவரி மாதத்தில் பொருள்வரவு கூடும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் வந்து சேரும். கலைத்துறை ஊக்கம் தரும். பயணத்தின்போது விழிப்புத் தேவை. அரசாங்கத்தாரால் நலம் உண்டாகும். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கவனம் தேவை.
பிப்ரவரி மாதத்தில் குடும்ப நலம் திருப்தி தரும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்து வரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். வியாபாரிகள் விழிப்புடன் இருப்பது நல்லது. மாதப்பின்பகுதியில் அலைச்சல் அதிகரிக்கும். உடல் சோர்வு உண்டாகும். எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. கலைத்துறையினருக்கும், அலுவலகப் பணியாளர்களுக்கும் வெற்றி வாய்ப்புக்கள் கூடும்.
மார்ச் மாதத்தில் பொருளாதார நிலை சீராகவே இருந்துவரும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் விழிப்புத் தேவை. சொத்துக்கள் சம்பந்தப்பட்ட காரியங்கள் நிறைவேறும். மாதப் பின்பகுதியில் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் மன மகிழ்ச்சி கூடும்.
ஏப்ரல் மாதத்தில் வாழ்க்கைத்துணைவரால் நலம் கூடும். மனத்திற்கினிய சம்பவங்கள் நிகழும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். மாதப் பின்பகுதியில் புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். அரசுப் பணிகள் நிறைவேறும். செய்தொழிலில் அபிவிருத்தி காணலாம். வியாபாரம் பெருகும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்களில் வளர்ச்சி காணலாம். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம், ஆன்மிகம் போன்ற இனங்கள் ஆக்கம் தரும். 4-ல் ராகுவும் 8-ல் செவ்வாயும் இருப்பதால் எதிலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடவும். நிலபுலங்கள் விஷயத்தில் விழிப்புத் தேவை. வாகனத்தில் செல்லும்போது பாதுகாப்பு அவசியமாகும்.
மே மாதத்தில் ராகு 3-ஆமிடம் மாறுவதால் அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். தந்தை நலனில் கவனம் தேவைப்படும். செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காணலாம். 10-ஆம் தேதி முதல் குரு வக்கிரம் பெறுவதால் சிறுசிறு பிரச்னைகள் தலைதூக்கும். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். வாழ்க்கைத்துணை நலனிலும் அக்கறை தேவை.
ஜூன் மாதத்தில் அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். பயணத்தின்மூலம் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கும் மாதர்களுக்கும் நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காணலாம். மாதப் பின்பகுதியில் தந்தை நலனில் கவனம் தேவை. அரசாங்கத்தாரால் சங்கடம் உண்டாகும்.
ஜூலை மாதத்தில் வியாபாரிகளுக்கு லாபம் கூடும். மாணவர்களது நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். இயந்திரப் பணியாளர்களும் இஞ்சினீயர்களும் வளர்ச்சி காண்பார்கள். சொத்துக்கள் சேரும். செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காணலாம். எதிர்ப்புக்கள் விலகும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
ஆகஸ்ட் மாதத்தில் செய்தொழிலில் அபிவிருத்தி காணலாம். வியாபாரம் பெருகும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். நிலபுலங்கள் லாபம் தரும். மாதப் பின்பகுதியில் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிட்டும். 24-ஆம் தேதி முதல் ஆதாயம் கூடும்.
செப்டம்பர் மாதத்தில் பொருளாதார நிலை உயரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் வந்து சேரும். தொழிலில் வளர்ச்சி காணலாம். எதிர்ப்புக்கள் விலகும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். பிரச்னைகள் எளிதில் தீரும். மன மகிழ்ச்சி கூடும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோர் உதவுவார்கள். நற்காரியங்கள் நிகழும்.
அக்டோபர் மாதத்தில் கலைஞர்களது நிலை உயரும். மாதர்கள் நலம் கூடப் பெறுவார்கள். பயணம் பயன்படும். வெளிநாட்டுத் தொடர்பு வலுக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். இடமாற்றம் உண்டாகும். மாதப் பின்பகுதியில் அரசு விவகாரங்களில் விழிப்புத் தேவை. தந்தையால் மன வருத்தம் ஏற்படும். உடன் பிறந்தவர்களது நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும்.
நவம்பர் மாதத்தில் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். கலைத்துறை ஊக்கம் தரும். கணவன் மனைவி உறவி நிலை திருப்தி தரும். மாதப் பின்பகுதியில் முக்கியமானவர்களது தொடர்பு பயன்படும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். இயந்திரப் பணிகள் லாபம் தரும்.
டிசம்பர் மாதத்தில் உஷ்ணாதிக்கம் கூடும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். பயணத்தால் ஒரு எண்ணம் நிறைவேறும். 8-ஆம் தேதி முதல் வியாபாரிகளுக்கு லாபம் கூடும். குடும்ப நலம் சிறக்கும். 9-ஆம் தேதி முதல் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை. மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 7, 8. மே மாதம் முதல் எண் 4-ம் நலம் தரும்.
திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு.
பரிகாரம்: ராகு, செவ்வாய் ஆகியோருக்குப் பிரீதி செய்வது நல்லது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையையும், முருகனையும் வழிபடவும். |