உங்கள் ராசிக்கு 9-ல் குரு உலவுவது விசேடமாகும். இந்த ஆண்டு முழுவதும் ராகுவும் அனுகூலமாக சஞ்சரிக்கிறார். இதனால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்பெறும். தெய்வப் பணிகளிலும் தருமப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிகழும். பொருளாதார சுபிட்சம் உண்டாகும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். மக்களால் பெற்றோருக்குக்கும் பெற்றோரால் மக்களுக்கும் நலம் உண்டாகும். தொலைதூரத் தொடர்பு ஆக்கம் தரும். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும், உத்தியோகஸ்தர்களுக்கும் செழிப்புக் கூடும். 5-ல் சனியும் கேதுவும் இருப்பதால் தீய எண்ணங்களுக்கும் தீயவர்களின் தொடர்புக்கும் இடம் தரலாகாது. கெட்ட பழக்க வழக்கங்களைத் தவிர்ப்பது நல்லது. மே மாதம் 3-ஆம் தேதி முதல் கேது 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. இதனால் அலைச்சல் கூடும். தாய் நலம் பாதிக்கும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும். மே 10-ஆம் தேதி முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை குரு வக்கிர நிலையில் சஞ்சரிப்பதால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். தொழிலில் பிரச்னை உண்டாகும். செப்டம்பர் 8-ஆம் தேதிக்குப் பிறகு நிலைமை சீராகும். டிசம்பர் 9-ஆம் தேதி முதல் குரு 10-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. செய்தொழிலில் முழுக்கவனம் தேவை. எதிலும் அவசரம் கூடாது. விரும்பத்தகாத இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும்.
ஜனவரி மாதத்தில் புனிதப்பணிகளில் ஈடுபாடு கூடும். மக்களாலும், பெற்றோராலும் அனுகூலம் உண்டாகும். கலைஞர்கள், மாதர்கள் ஆகியோரது எண்ணம் ஈடேறும். தொலைதூரத் தொடர்பு ஆக்கம் தரும். வியாபாரம் பெருகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பொருளாதார சுபிட்சம் உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும்.
பிப்ரவரி மாதத்தில் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிரிகள் விலகிப் போவார்கள். வழக்கு விவகாரங்களில் வெற்றி காணலாம். நிலபுலங்கள் சேரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். சுப காரியங்கள் நிகழும். அரசாங்கத்தாரால் ஓரிரு காரியங்கள் நிறைவேறும். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள்.
மார்ச் மாதத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். எதிர்ப்புக்கள் விலகும். பொருளாதார நிலை திருப்தி தரும். சுப காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பயணத்தால் ஒரு எண்ணம் ஈடேறும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். மாதப் பின்பகுதியில் மக்களால் சிறு சங்கடம் உண்டாகும்.
ஏப்ரல் மாதத்தில் பொருள் வரவைக் காட்டிலும் செலவுகள் கூடும். சிக்கன நடவடிக்கை தேவை. அரசுப் பணிகளில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும். வியாபாரத்தில் வளர்ச்சி காண்பது அரிது. பயணம் பயன்படும். மாதப்பின்பகுதியில் முக்கியப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள்.
மே மாதத்தில் கேது 4-ல் உலவும் நிலை அமைவதால் உடல் நலனில் கவனம் தேவை. தாய் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டிவரும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். மக்களால் சிறுசிறு உபத்திரவங்கள் உண்டாகும். பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும். பயணத்தால் அனுகூலம் உண்டு என்றாலும் பாதுகாப்பும் தேவை.
ஜூன் மாதத்தில் பண வரவு கூடும். உடன் பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். தாயாராலும், நண்பர்களாலும், உறவினர்களாலும் சங்கடம் உண்டாகும். மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். மாதப் பின்பகுதியில் அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். 21-ஆம் தேதி முதல் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.
ஜூலை மாதத்தில் வியாபாரம் பெருகும். உடன் பிறந்தவர்களால் நலம் கூடும். நல்ல தகவல் வந்து சேரும். வாழ்க்கைத்துணைவராலும் மக்களாலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. உடல் நலனில் அக்கறை தேவைப்படும். தாய் நலனிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவது அவசியமாகும்.
ஆகஸ்ட் மாதத்தில் அலைச்சல் கூடும். உடல் சோர்வு உண்டாகும். தாய் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. 9-ஆம் தேதி முதல் எதிர்ப்புக்கள் விலகும். காரியத்தில் வெற்றி கிட்டும். பிரச்னைகள் குறையும். மாதப் பின்பகுதி விசேடமானதாக அமையும். முக்கியமான ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். மக்களுக்கும் பெற்றோருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். 24-ஆம் தேதி முதல் வியாபாரிகள் வெளிச்சமான பாதையைக் காண்பார்கள்.
செப்டம்பர் மாதத்தில் 8-ஆம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதால் பொருளாதார நிலை உயரும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கலைஞர்கள், மாதர்கள் ஆகியோர் விழிப்புடன் இருப்பது அவசியமாகும்.
அக்டோபர் மாதத்தில் சுப காரியங்கள் நிகழும். பொருளாதார நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். கணவன் மனைவியரிடையே அந்நியோன்யம் கூடும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். மக்களாலும் பெற்றோராலும் அளவோடு நலம் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களால் அதிகம் அனுகூலமிராது. தாய் நலனில் அக்கறை தேவை. வியாபாரம் சிறக்கும்.
நவம்பர் மாதத்தில் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை. உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். 7-ஆம் தேதி முதல் செல்வ வளம் கூடும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். மக்களால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படும். அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. வாழ்க்கைத்துணைவராலும் கூட்டாளிகளாலும் நலம் கூடும்.
டிசம்பர் மாதத்தில் செய்துவரும் தொழிலில் கவனம் தேவை. விரும்பத்தகாத இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். மாணவர்களது நிலை உயரும். 9-ஆம் தேதி முதல் குரு 10-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. மாதப்பின்பகுதியில் தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் முன்னேற்றம் தடைப்படும். தாய் நலனிலும் மக்கள் நலனிலும் அக்கறை தேவை.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 4, 6, 9.
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, தெற்கு, வடகிழக்கு.
பரிகாரம்: சனிக்கும் கேதுவுக்கும் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது அவசியமாகும்.
|