சினிமா விமர்சனம் : அம்புலி 3D ஒரு கிராமத்தையே வேட்டையாடிப் பசி தீர்க்கும் மனித மிருகமே... அம்புலி! பூமாடந்திபுரம் என்ற கிராம மக்கள், இரவு நேரத் தில் அருகில் இருக்கும்சோளக் காட்டுக்குள் செல்ல மாட்டார்கள். கோட்டை கட்டித் தடுத்தும் குறுக்கு வழியில் சென்ற பலர் உயிரை விடுகி றார்கள். காரணம், அந்தக் காட்டுக்குள் இருக்கும் அம்புலி. அந்த அம்புலி யார்... அம்புலியிடம் இருந்து கிராமத்தினர் தப்பித்தார்களா என்பது மீதிக் கதை! நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் ஒரு 3டி படம். ஸ்டீரியோகிராஃபி 3டி தொழில்நுட்பத்துக்காக மெனக்கெட்டு இருக்கும் ஒளிப்பதிவாளர் சதீஷ§க்கும் இரட்டை இயக்குநர்கள் ஹரி சங்கர்- ஹரீஷ் நாராயணனுக்கும் பாராட் டுக்கள். படத்தின் ஆரம்பத்தில் வரும் அந்த சோளக் காட்டுக் காட்சி மிரட்டல் ரகம். படத்தில் கதை இல்லை, அநேக இடங்களில் லாஜிக் இல்லை. ஆனால், கதை நடக்கும் காலம், இரவு நேர 3டி எஃபெக்ட், திகிலூட்டும் பின்னணி இசை ஆகியவை. . .
ஒரு நல்ல முயற்சி. இன்னும் கொஞ்சம் ஊக்குவிப்பாக விமரிசித்திருக்கலாம். ஆமா, அது என்ன சார், "காதலில் சொதப்புவது எப்படி"க்கெல்லாம் விமரிசனம் போடறீங்க? "உடும்பன்"னு ஒரு படம், இன்றைய கல்வி நிறுவனங்களுக்கு சவுக்கு சொடுக்குவது போல் வந்திருப்பது கண்ணிற்கு தெரியவில்லையா?
COMMENT(S): 6
மனோஜ் நைட் ஷ்யாமளனின் தி வில்லேஜ் படத்தின் தழுவல் போல தெரிகிறது.
அது என்ன.. ஏற்கனவே மனோஜ் ஷியாமலன் இந்த படத்தை எடுக்கல?
Jeapers and creapers version II?
"Super 8"ல இருந்து சுட்ட மாதிரி தெரியுதேன்னா....
அம்புலி..ஓகே காட்டு புலி எங்கே