• நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்
  • தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன்
  • திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
  • நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள்
  • ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
  • மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார்
  • பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு
  • சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல்
  • கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை
  • இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே
  • தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
23 May, 2013
ஆயுர்வேதம்... ஆன்மிகம்!
சோழனின் தீர்க்கதரிசனம்

பாரம்பரியச் சின்னங்களைப் பழுதுபடாமல்  பாதுகாப்பதே தொல்பொருள் ஆய்வுத் துறையின் பணி. ஆனால், அவற்றைப் பாதுகாப்பதோடு தங்கள் கடமை முடிந்தது எனக் கருதாமல் தொல்லியல் துறை மேற்கொண்ட ஒரு செயல் காஞ்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்திருக்கிறது.  

 காஞ்சி மாவட்டம், வாலாஜாபாத்துக்கு அடுத்து உள்ள திருமுக்கூடல் கிராமத்தில் இருக்கிறது   ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயில். கி.பி. 854-க்கும் 860-க்கும் இடைபட்ட காலத்தில் விஜயநிருபதுங்க விக்ரமவர்மன் என்ற பல்லவ மன்னரால் கட்டப்பட்டது இந்தக் கோயில். பின்னர் கி.பி.1063-1068க்கும் இடைபட்ட கால கட்டத்தில் இங்கு ஆட்சிபுரிந்த வீர ராஜேந்திர சோழன் இந்தக் கோயிலை ஆன்மிகப் பணிகளோடு முடக்கிவிடாமல் கல்வி, கலாசாரம், பண்பாடு, மற்றும் சுகாதாரக் கேந்திரமாக்கி இருக்கிறார். அவரின் ஆட்சிக் காலத்தில் கோயில் வளாகத்தில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, மாணவர் விடுதி, வேத பாடசாலை, 15 படுக்கைகள்கொண்ட இலவச மருத்துவமனை இயங்கிவந்ததாக கோயில் கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன.  

விசேஷ மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட 20 வகையான மருந்துகள் நோயாளிகளின் சிகிச்சைக்காகத் தரப்பட்ட தகவல் இதில் ஹைலைட். மூலிகைகள் தட்டுப்பாட்டினால் சிகிச்சைப் பாதிக்கக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுடன் கோயில் வளாகத்தை ஒட்டி ஒரு மூலிகைப் பண்ணையையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். அங்கு 14 அரிய வகை மூலிகைகள் வளர்க்கப்பட்டு, மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளன. கோயில் கல்வெட்டுகள் மூலம் இதை அறிந்துகொண்ட தொல்லியல் துறையினர், சோழன் அமைத்த மூலிகைப் பண்ணை இருந்த இடத்திலேயே தற்போது புதிதாக ஒரு மூலிகைப் பண்ணையையும் அமைத்து இருக்கிறார்கள். இதில் வல்லாரை, திப்பிலி, கண்டங்கத்திரி, கொடிவேலி, அருகம்புல், பதரி, நிலதுத்தி உள்ளிட்ட பல அரியவகை மூலிகைச் செடிகள் உள்ளன. தொல்பொருள்துறை மூலிகைத் தோட்டம் அமைத்திருப்பது இந்தியாவிலேயே இங்குதான் முதன்முறையாகும். இந்த மூலிகைத் தோட்டம் உருவானதில் பெரும்பங்கு வகித்த தொல்லியல் துறையின் சென்னை சரகக் கண்காணிப்பாளர் சத்யபாமாவைச் சந்தித்தேன்.

''இது எங்கள் கனவுத் திட்டம். பாலாறு, வேகவதியாறு, செய்யாறு என மூன்று ஆறுகள் இணையும் இடத்தில் அமைந்திருப்பதும் அழகிய சுவாமி சந்நிதியும் 55 வரிகளில் அரிய விஷயங்களைச் சொல்லும் கல்வெட்டும் திருமுக்கூடல் கோயிலின் சிறப்புகள். இதில் கல்வெட்டு முக்கியமானது. ஒரே வளாகத்தில் கல்லூரி, அதனுடன் இணைந்த மாணவ மாணவியர் விடுதி, மருத்துவமனை, மருந்தகம், உணவு விடுதி என்பதெல்லாம் இன்று சகஜமாக நாம் பார்க்கும் விஷயம். ஆனால், 11-ம் நூற்றாண்டிலேயே இந்த நிர்வாக முறை இருந்துவந்தது எங்களுக்கு ஆச்சர்யத்தைத் தந்தது.

இந்த அரிய விஷயத்தை இன்றைய சந்ததிகளுக்குத் தெரிவிக்க நினைத்தோம். கல்வெட்டுகளில் குறிப்பிட்டு இருப்பதைப் போல கல்லூரியையோ மருத்துவமனையையோப் புதுப்பிப்பது சாத்தியம் இல்லாத ஒன்று. ஆனால், மூலிகைத் தோட்டம் இருந்ததற்கு ஆதாரமாக இன்றும் கோயிலைச் சுற்றி சில அரிய மூலிகைகள் இருப்பதால் மூலிகைத் தோட்டம் அமைக்க முடிவு எடுத்தோம். ஆனால், கல்வெட்டில் கூறப்பட்டு இருந்த மூலிகைகளை அடையாளம் காண்பது சிரமமாக இருந்தது. மேலும், கல் வெட்டில் சில மருந்துகளின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. சித்த மருத்துவத் துறை, தோட்டக் கலைத் துறை உதவியுடன் அந்த மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட மூலிகைகளைக் கண்டறிந் தோம்.

இப்படிக் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கடினமான உழைப்புக்குப் பின் தோட்டத்தை அமைக்க முடிந்தது. சம்பிரதாயத்துக்கு மூலிகைகளைப் பயிரிடாமல் ஒவ்வொரு மூலிகையையும் தனித் தனிப் பகுதிகளில் பயிரிட்டு இருக்கிறோம். மேலும் பொது மக்களுக்குப் புரியும் வகையில் தனித் தனிப் பலகைகளில் மூலிகைகளின் பெயர், அவற்றில் இருந்து மருந்து தயாரிக்கும் முறை, அந்த மூலிகையால் தீரும் நோய்களைப்  பட்டியலிட்டு உள்ளோம். இத்துடன் எங்கள் வேலை முடியவில்லை. இந்தத் தோட்டத்தை மெருகூட்டும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறோம்!'' என்கிறார் கண்கள் மின்ன.  

பாராட்டப்பட வேண்டிய பணி!        

- எஸ்.கிருபாகரன்

படங்கள்: வீ.ஆனந்தஜோதி

COMMENT(S): 11

நல்ல காரியம்.தொடரட்டும் .

வாழ்த்துக்கள்!

வாழ்த்துக்கள். மிக சிறப்பான பணி. தொடரட்டும் இது

வாழ்த்துக்கள் மேடம். நல்ல செய்திகளை நாடறிய சொல்லும் விகடனுக்கும் நன்றி.

மிகுந்த நன்றி.. இவர்கள் போல் இன்னமும் பல சத்தியபாமாக்கள் வந்து தமிழகத்தை காக்க வேண்டுவோம். இவரும் நல்ல உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெற்று தொண்டுசெய்யவேண்டுவோம்.

அற்புதம்!

இப்படிப்பட்ட தொல்லியல் துறை சயனபெருமாள் கோவிலை எடுத்துக்கொள்வதையும் மக்கள் ஏன் எதிர்க்கவேண்டும்?

நல்ல் முயற்ச்சி.

நம் நாட்டு மூலிகைகளை நாமே அறிந்து கொள்ள சிரமப்பட வேண்டி உள்ளது. உங்களின் முயற்சி இளசமுதாயத்துக்கு ஒரு வழிகாட்டுதல்.

நல்ல காரியம்.தொடரட்டும் .

வாழ்த்துக்கள் சத்யபாம மேடம்! வருங்கால சந்ததியினருக்காக நீங்களும்,உங்கள் குழுவினரும் செய்துள்ள இப்பணி நிச்சயம் பலன் அளிக்கும்

Displaying 1 - 11 of 11
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 13 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook