• தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்
  • முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல்
  • தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்
  • வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு
  • பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா
  • ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ
  • ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
  • கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது
  • மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி
  • குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார்
  • தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா
  • கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
22 May, 2013
  • Bookmark
  • Print
இது, சேலம் சடுகுடு...
போஸ் மைதான கலகலப்பு!

மீபத்தில் சேலம் போஸ் மைதானத்தில் பகல் - இரவு ஆட்டமாக ஐந்து நாட்கள் நடந்த கபடிப் போட்டிகளின் விறுவிறுப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்குச் சற்றும் குறைவு இல்லாதது. பல்வேறு சவால்களுக்கு இடையே இதைச் சாதித்து இருக்கிறது சேலம் ஸ்போர்ட்ஸ் அகாடமி.

 

இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள், போட்டியைக் காணவந்து இருந்த பல மாநில ரசிகர்கள், பானிபூரி, கப்பக் கிழங்கு, ஆந்திரா மீல்ஸ், ஹைதராபாத் பிரியாணி, கம்பங்கூழ் என மாநிலத்துக்கு ஒவ்வொன்றாக அணிவகுத்து இருந்தக்  கடைகள் என, சேலம் பழைய பஸ் நிலையம் பகுதி அன்று மினி பாரத விலாஸாகவே மாறி இருந்தது.

போட்டியின் ஒருங்கிணைப்பாளரான சேலம் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் செயலாளர் தமிழ்ச்செல்வனிடம் பேசினேன். ''இந்தியன் நேவி டெல்லி, ஏர் இந்தியா மும்பை, உத்தரப் பிரதேசப் போலீஸ், மும்பை மேற்கு ரயில்வே, கொல்கத்தா வடக்கு ரயில்வே, பெங்களூர் விஜயா வங்கி, ஹைதராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே, தமிழ்நாடு போலீஸ் அணி என மொத்தம் 18 ஆண்கள் அணிகளும், கொல்கொத்தா வட கிழக்கு ரயில்வே, மாடர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் புனே, கர்நாடகா போலீஸ், கேரளா ஸ்போட்ஸ் கிளப், தமிழ்நாடு போலீஸ் சென்னை உட்பட 20 பெண்கள் அணிகளும் போட்டியில் கலந்துகொண்டன. அர்ஜுனா விருதைப் பெற்ற தேஜ் அஸ்வின்பாய் இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடினார்.    

போட்டிகள் அனைத்தும் லீக் மற்றும் நாக்-அவுட் விதிமுறைப்படி நடந்தன. இறுதிப் போட்டியில் ஆண்கள் அணியில் இந்தியன் நேவி டெல்லியும், பெங்களூர் விஜயா வங்கி அணியும் மோதின. இதில் 46-16 என்ற புள்ளிகள் எடுத்து இந்தியன் நேவி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. பெண்களுக்கான இறுதிப் போட்டியில் சவுத் சென்ட்ரல் ரயில்வே ஹைதராபாத் அணி யும், மும்பை மேற்கு ரயில்வே அணியும் மோதின. இதில் 10-9 புள்ளிகள் பெற்று ஹைதராபாத் அணி த்ரில் வெற்றியைப் பெற்றது'' என்றார்.

சேலம் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைவர் காசிவிஸ்வநாதன், ''நாங்கள் 1984-ல் தேவாரம் கபடி குழு ஆரம்பித்து இந்தியாவின் தலை சிறந்த அணிகளை அழைத்து வந்து கபடிப் போட்டிகளை நடத்தினோம். பல்வேறு காரணங்களால் போட்டிகளைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. இப்போது தமிழ்நாடே வியக்கும் அளவுக்கு பிரமாண்டமாக நடத்தி இருக்கிறோம். இனி ஆண்டு தோறும் கபடி ரசிகர்களுக்கான விருந்து தொடரும்.'' என்றார் அமர்க்களமாக.

ஒருகாலத்தில் தமிழகத்திலேயே அதிகக் கபடிக் குழுக்கள் சேலம் மாவட்டத்தில்தான் இருந்திருக்கின்றன. சேலத்தில் இருந்து விஸ்வநாதன், ராஜ்குமார், குணசேகரன் ஆகியோர் உலக அளவிலான போட்டிகளிலும் தமிழ்ச்செல்வன், கென்னடி, ராஜா, போலீஸ் குணசேகரன் உட்பட 25-க்கும் மேற்பட்டோர் தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள்!

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன், எம்.விஜயகுமார்

COMMENT(S):

Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 04 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook