• ஐபிஎல் 6: அரையிறுதி, இறுதி போட்டிக்கு தடை விதிக்க கோரி வழக்கு
  • திரைப்படமாகிறது ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்
  • ஶ்ரீசாந்த் லேப்டாப்பில் பாலிவுட் டைரக்டர் அனுப்பிய மாடல் அழகிகளின் படங்கள்
  • இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து
  • இலங்கை படையினரால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 26 பேர் விடுதலை
  • தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாது: கர்நாடக காங்கிரஸ் தலைவர் திட்டவட்ட அறிவிப்பு
  • இந்தியாவுடன் நட்புறவு பலமாக உள்ளது: சீன பிரதமர் லீ கெகியாங்
  • நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது வழக்கு பதிவு
  • நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைது?
  • பி.இ. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று கடைசி தினம்
21 May, 2013
கல்லூரி விழாவில் கலாட்டா !
பிரகாஷ்ராஜின் அனுபவம்
நா.இள அறவாழி
படங்கள்: எஸ்.தேவராஜன்

புதுச்சேரி மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், சிறப்பு விருந்தினர் பிரகாஷ்ராஜ். கலகலப்பும் கருத்து மழையாக அதகளப்படுத்திவிட்டார் 'செல்லம்’!

 ''எல்லாரும் என்னைப் புகழ்ந்து பேசுறாங்க. இதுக்குஎல்லாம் நான் தகுதியான ஆளானு தெரியலை. ஆனா ரொம்பப் பெருமையா இருக்கு. இன்ஜினீயரிங் காலேஜ் நிகழ்ச்சிக்கு என்னைப் பேசச் சொல்லி கூப்பிடறாங்கனு கொஞ்சம் பயந்தேன். என்ன பேசறதுனு தெரியலை. ஏன்னா நான் பி.காம். செகன்ட் இயரோட படிப்பை நிறுத்திட்டேன். இருந்தாலும் இளைஞர்களோட பேசற துக்கு இளமையா நம்மை உணர்ந்தாலே போதும்னு நினைச்சிக்கிட்டு வந்துட்டேன்.

எல்லாரும் சொல்றாங்க இளைஞர்களுக்குப் பொறுப்பில்லைனு. அது சுத்தப் பொய். நான் சொல்றேன் இந்தியாவில் இருக்கிற இளைஞர்கள் எல்லாரும் பொறுப்பானவங்கதான். எனக்கும் 16 வயசுல ஒரு பொண்ணு இருக்கு. இப்ப இருக்கிற பசங்களுக்கு செல்போன், இன்டர்நெட்னு நிறைய வசதிகள் வந்துடுச்சு. எல்லா விஷயங்களையும் அப்டேட் பண்ணி வெச்சிருக்காங்க. எல்லா விஷயத்திலும் பொறுப்பாவும் தெளிவாவும் இருக்காங்க.

என்னோட சின்ன வயசுல நான் எந்த ஒரு குறிக்கோளுமே இல்லாம சுற்றி இருக்கேன். வாழ்க்கையில் வழிகாட்ட யாருமே இல்லை. இப்ப உங்களுக்கு இருக்கும் தேர்ந்து எடுக்கும் சுதந்திரம், அப்ப எங்களுக் குக் கிடையாது.

ஒரு சின்ன சம்பவத்தை உங்களோட பகிர்ந்துகொள்ள ஆசைப்படறேன். அப்ப எல்லாம் ரொம்ப ஜாலியா, கேர்லெஸ்ஸா இருந்தேன். காலேஜுக்கே சரியாப் போக மாட்டேன். அதனால ஆண்டு விழா நாடகத்துல எனக்குப் பதிலா வேற ஒரு பையனை நடிக்கவெச்சிட்டு இருந்தார் என்னோட ஆசிரியர். எனக்கு நல்லாவே தெரியும், அந்தப் பையனுக்கு நடிப்பு வராதுனு. கண்டிப்பா என்னை என் ஆசிரியர் நடிக்கத் திரும்பக் கூப்பிடுவாருனு நினைச்சேன். 15 நாள் ஆச்சு. என்னைக் கூப்பிடவே இல்லை. விழா அன்னைக்கு நானும் என் நண்பனும் சேர்ந்து செம ரகளை பண்ணிட்டோம். விழா முடிஞ்ச உடனே சார்கிட்ட போயி, 'ஏன் என்னை நாடகத்துல நடிக்கவைக்கலை?’னு கேட்டேன். அவர் பொறுமையா, 'நீ நல்ல நடிகன்னு தெரியும். ஆனா, உன்கிட்ட ஒழுக்கம் இல்லை’னு சொன்னார். அவர் சொன்னது என்னை ரொம்ப யோசிக்கவெச்சுது. சடார்னு அவர் கால்ல விழுந்துட்டு சொன்னேன், 'இன்னிக்கு உங்க மூலமா நான் ஒரு பாடத்தைக் கத்துக்கிட்டேன்’னு.

ஒரு கருத்துக்கணிப்பு சொல்லுது, 2020-ல் இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை சரிபாதியா இருக்கும்னு. அதனால உங்களுக்கு நிறைய பொறுப்பு இருக்கு. உங்களுடைய ஓட்டை சரியாப் போடுங்க. யாருக்கும் வித்துடாதீங்க. சரியான காரணங்களுக்காகக் கோபப்படுங்க. நியாயத்துக்காகப் போராடுங்க. நீங்க படிச்ச கல்லூரியை மறந்துடாதீங்க. யாரையாவது படிக்கவைங்க. இப்படி ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்தீங்கன்னா வாழ்க்கை நல்லா இருக்கும். நிறைய கருத்துக்களாப் பேசிக்கிட்டே இருக்கேன். அடுத்து டான்ஸ் எல்லாம் இருக்குபோல. நல்லா என்ஜாய் பண்ணுங்க'' என்று  பிரகாஷ்ராஜ் பேச்சை முடிக்க, அரங்கம் எங்கும் அப்ளாஸ்தான்!

COMMENT(S): 1

பிரகாஷ், நேரத்துக்கு ஷூட்டிங்க்குக்கு போவதும் ஒழுக்கம்தான், செய்ரீங்களா?

Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 18 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook