• மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கோரி சோனியாவை சந்தித்தார் டி.ஆர். பாலு
  • கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு
  • மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கோரி அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
  • சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்
  • பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று சட்டப்பேரவையில் தமது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்
  • புதுக்கோட்டை அருகே மினி வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து: 7 குழந்தைகள் பலி
  • பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டுப் பிரிவுக்கான முடிவை வெளியிட தடை
  • செங்கல்பட்டிலிருந்து 5 இலங்கை தமிழர்கள் திருச்சி முகாமிற்கு அதிரடி மாற்றம்
19 June, 2013
  • Bookmark
  • Print
நூற்றாண்டு நாயகனின் மண்ணில்...

மிழையே மறந்துவரும் இன்றைய தமிழர்களுக்குத் தமிழ் அறிஞர்களை மறப்பது அவ்வளவு கடினமா என்ன? அப்படி கால ஓட்டத்தில் தமிழனின் நினைவு அடுக்குகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டு இருப்பவர் மு.வ. எனப்படும் டாக்டர் மு.வரதராசனார். அவருக்கு இந்த ஆண்டு... நூற்றாண்டு!

 

'மறந்துகொண்டே இருப்பது மக்களின் இயல்பு. நினைவூட்டிக் கொண்டே இருப்பது சமூக அக்கறை உள்ளவர்களின் கடமை’ என்ற வகையில் மு.வ. பிறந்த வேலூர் மாவட்டம் வேலம் கிராமத்தில் கால்பதித்தேன்.

''எங்கள் மண்ணில் பிறந்த மு.வ. தன்னுடைய தொடக்கக் கல்வியை வேலத்திலும் வாலாஜாவிலும் பயின்றார். பிறகு திருப்பத்தூர் சென்று தன்னுடைய உயர்நிலைக் கல்வியைப் படித்து முடித்தார். படிப்பு முடிந்ததும் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்று ஆண்டுகள் எழுத்தராகப் பணியாற்றினார்.

அதன்பின் வேலத்துக்கே வந்து மேற்கொண்டு படித்த மு.வ., 'வித்துவான்’ தேர்வில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து மேல்நிலைப் படிப்பில் மாநிலத்திலேயே முதலாவது மாணவராகத் தேர்ச்சி பெற்றார். இதற்காக, திருப்பனந்தாள் மடத்தின் சார்பில் 1,000 ரூபாய் பரிசும் பெற்றார்'' என்று பெருமை பொங்கப் பேசுகிறார் அவருடைய சமகாலத்தவரான ஓய்வுபெற்ற தமிழாசிரியர் மு.கலைச்செல்வன்.

''சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியில் இணைந்து, பேராசிரியர் ஆகித் தமிழ்த் துறைத் தலைவராக உயர்வு பெற்றார். 1971-ம் ஆண்டில் தமிழக அரசு மு.வ-வை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் செய்தது. இயற்கையை ரசிப்பதில் மிகுந்த ஆர்வம்கொண்ட மு.வ., இயற்கை மருத்துவம்குறித்து நிறைய படிப்பார்.

வேலத்தின் அருகில் உள்ள கூசு மலை, தட்ட மலை போன்ற மலைப் பகுதிகள், மலையோரம் உள்ள ஊத்து ஓடை, அரசங்குளத்து குளக்கரை போன்ற இயற்கையான பகுதிகளில் அமர்ந்து நாவல், சிறுகதை என தன்னுடைய இலக்கியப் படைப்புகள் பலவற்றைப் படைத்து தமிழ்கூறு நல்லுலகுக்குத் தந்தார். மு.வ-வின் திருக்குறள் உரை தமிழர்களுக்குக் கிடைத்த விலைமதிக்க முடியாத விளக்கு. அவருடைய படைப்புகளில் வரும் கதாபாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூட்டி இருப்பார். அந்தப் பெயர்களை பலர் மிகவும் ரசித்து தங்கள் குழந்தைகளுக்குப் பெயராகவும் சூட்டி மகிழ்ந்தனர்.

20 நூற்றாண்டின் இணையற்ற தமிழறிஞரான மு.வ-வுக்குப் புகழ்சேர்க்கும் விதமாகத் தமிழக அரசு வேலத்தில் உள்ள மு.வ-வின் வீட்டை நினைவுச் சின்னமாக்கி, அவருக்குச் சிலை அமைத்து, உயர்நிலைப் பள்ளிக்கு மு.வ-வின் பெயரைச் சூட்டினால் சிறப்பாக இருக்கும்!'' என்று நெகிழ்ந்தார் மு.கலைச்செல்வன்.

- ரியாஸ்

COMMENT(S):

Only Subscriber Can Post Comments
ஆனந்த விகடன்
< 23 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook