• கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
18 May, 2013
சபாஷ் சர்வம்!
இது நம்ம ஊரு ஸ்பெஷல் - புதுச்சேரி

'கல்வி என்பது பள்ளிக்கூட வளாகத்திலோ, பாடப் புத்தகத்தின் பக்கங்களிலோ முடிந்துவிடுவது இல்லை’ என்பதை அழகாகவும் அழுத்தமாகவும் சொல்கிறது அந்தக் காட்சி.

விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில்தான் அந்தக் காட்சியைக் கண்டேன்.

ஓர் அறையில் பழைய நியூஸ் பேப்பரில் கிரீடம், பல விதமான பறவைகள், கப்பல் என விதவிதமான வடிவங்களை மாணவர்கள் உருவாக்கிக்கொண்டு இருக்கின்றனர். மற்றோர் அறையில் 'ஒன் டூ, திரீ ஃபோர்’ என ஓசை கேட்க எட்டிப்பார்த்தேன்.

'ஒன் டூ த்ரீ ஃபோர்’ என்று ஒருவர் சொல்லச் சொல்ல, நடனமாடிக்கொண்டு இருக்கின்றனர் மாணவிகள். மணிப்பூர் பழங்குடி மக்களின் நடனம் அது. மற்றோர் அறையில் மாணவர்கள் நீர் வண்ண ஓவியம் தீட்டிக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் வரைவதை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே வாசலில் ஒரே ஆரவாரம்!

திரும்பிப்பார்த்தால் பின்பக்க ஓட்டம், தொடர் ஓட்டம், சாக்குப் பை ஓட்டம் என விதவிதமான விளையாட்டுகள். மொத்தத்தில் மாணவர்களும் மாணவிகளும் உற்சாகத்தில் இருப்பதை உணர முடிந்தது. பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடனே தங்கள் வீட்டுக்குப் போய் முகம் கழுவிவிட்டு, அவர்கள் ஆஜர் ஆவது இங்கேதான். இவை எல்லாவற்றுக்கும் காரணம் சர்வம் இயக்கத்தினர்.

''பாண்டிச்சேரியில் இருக்கிற அரவிந்தர் ஆசிரமத்தோட கிளை நிறுவனம்தான் இந்த சர்வம் இயக்கம். கிராமப்புறத்தை முன்னேற்றணும், கிராமப்புற மாணவர்களின் தனித் திறமையை வெளிக் கொண்டுவரணும்கிற நோக்கத்துலதான் இதை ஆரம்பிச்சோம். இங்கே ஏழு கிராமங்களைத் தத்து எடுத்து மாணவர்களுக்குப் பயிற்சிகள் தர்றோம். ஆரம்பத் தில் இந்தப் பயிற்சி கொடுப்பதற்காக இந்தக் கிராமங்களுக்கு வந்தப்போ இங்க இருந்த மக்களுடைய நிலைமை ரொம்ப யோசிக்கவெச்சுது. அடிப்படை வசதிகள்கூடப் பூர்த்திசெய்யப்படாதச் சூழலில் இருந்துவரும் மாணவர்கள் நிம்மதியாகப் படிக்க முடியாது என்பதை உணர்ந்தோம். அதனால், வெறுமனே பயிற்சிகளோட நின்னுடாம, அவங்க கிராமங்களுக்கும் நிறைய உதவிகள் செய்தோம். குடிசை வீடுகளைக் கல்வீடா மாத்தித் தர்றது, சாலை வசதிகள் மாதிரியான அடிப்படைத் தேவைகளை நிறைவேத்தித் தந்தோம்.

பள்ளி நடக்கிற நேரத்துல நாங்க இது மாதிரியானப் பயிற்சிகள் கொடுக்கிறது கிடையாது. பள்ளி நாட்களில் காலையும் மாலையும் டியூஷன் மட்டும்தான் எடுக்கிறோம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில்தான் இந்தப் பயிற்சிகள். பயிற்சி நடக்கிற நேரங்களில் காலை  11 மணிக்குக் காய்கறிகள் கொண்டுசெய்யப்பட்ட பலகாரம், மோர் அல்லது லெமன் ஜூஸ் கொடுக்கிறோம். அதேபோன்று மாலையும் வழங்குவோம். மதியம் கண்டிப்பாகச் சாப்பாடும் உண்டு. இதனால், மாணவர்கள் உற்சாகமாகப் பயிற்சியினை மேற்கொள்கிறார்கள்.

இங்கு உள்ள ஆசிரியர்களுக்குத் தருவதற்கான சம்பளம் போன்ற விஷயங்களுக்குப் பல தொண்டு நிறுவனங்கள் உதவுகின்றன. மாணவர்களுக்குத் தனித் திறமைகள் வளரணும், கிராமப்புறச் சிறுவர்களும் மற்ற மாணவர்களைப் போல் எல்லா தரத்தினையும் அடையணும். இதுதான் சர்வம் இயக்கத்தின் நோக்கம்'' என்கிறார் சர்வம் இயக்கத்தின் இயக்குநர் சித்ரா.

எவ்வளவோ வற்புறுத்தியும் புகைப்படம் எடுக்க அவர் சம்மதிக்காதது ஒன்றே விளம்பரம் தேவைப்படாத அவரது சேவை உள்ளத்துக்கு உதாரணம்!

- பா.அற்புதராஜ்
படங்கள்: எஸ்.தேவராஜன்

COMMENT(S): 1

இந்த காலத்திலும் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்கும் ஒருவர். ஆச்சரியம் தான்.

Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 13 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook