• வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு
  • லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம்
  • சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்
  • மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
  • பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா
  • கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார்
  • காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி
  • புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
  • சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ.
19 June, 2013
  • Bookmark
  • Print
கார்... கவனம்... கண்டுபிடிப்புகள்!
இது நம்ம ஊரு ஸ்பெஷல் - திருவண்ணாமலை

ல்லூரி வாழ்க்கை என்றாலே கலாய்த்தல், கலாட்டா என்று இல்லாமல் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிச் சாதித்து இருக்கிறார்கள் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி மாணவர்கள்.

''நான்,  வீரமணி, வேலாயுதம், நிரஞ்சன் நால்வரும் இணைந்துதான்  'ஜி.பி.எஸ். கோ பைலட்’ என்ற புதிய கருவியைக் கண்டுபிடித்து உள்ளோம்'' என்று தொடங்கினார் ஐ.டி. மாணவர் வாசுதேவன்.

''பைலட்னு பெயர் இருக்கிறதால விமானம் மாதிரி பறக்கும்னு நினைக்காதீங்க. கோ பைலட்னா நம்மோடு இருக்கிற இன்னொரு டிரைவர். நாம் வேகமாகப் போகும்போது எல்லாம் நம்மைக் கட்டுப்படுத்திக்கிட்டே இருப்பார். இதுதான் கோ-பைலட்டுக்கான  அர்த்தம். 10 செ.மீ-க்குள்ள நம்ம கார் முன்னாடி எது வந்தாலும் கார் பிரேக், தானா வேலை செய்ய ஆரம்பிச்சுடும். ஹார்ட் அட்டாக் வந்து டிரைவர் செயல் இழந்துபோகும்போது, ஹார்ட் பல்ஸ் சென்சார் வேலை செய்து, இன்டிகேட்டரை இயங்கவைக்கும். இது மட்டும் இல்லாம, செல்போன்ல  பேசிக்கிட்டே வண்டி ஓட்டினா, நம் கவனம் டிரைவிங்ல இருந்து திரும்பிடும். இதைத் தடுக்கவும் ஹெட் மூவ்மென்ட் சென்சாரை இணைச்சிருக்கோம். ரொம்ப நேரம் தலை ஒரு பக்கம் சாய்ந்து இருந்தா, வண்டியோட வேகம் குறைய ஆரம்பிச்சிடும். அதே மாதிரி வேகத்தடை வந்தால் வேகம் குறையறதுக்கான தொழில்நுட்பமும் இதில் உண்டு'' என்கிறார்.

இவர்கள் கண்டுபிடிப்புக்குக் கொஞ்சமும் சளைத்தது இல்லை கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்களின் கண்டுபிடிப்பு.

''காரில் பெட்ரோலைத் தானாக லாக் செய்கிற மாதிரியான சாதனத்தை நாங்க உருவாக்கி இருக்கிறோம்'' என்று தங்கள் கண்டுபிடிப்புகள் குறித்துப் பேச ஆரம்பித்தார் சுபாஷினி.

''இந்தக் கருவி காரின் பெட்ரோல் அல்லது டீசல் டேங்கரைத் தானாக லாக் செய்வதோடு உரிமையாளருக்கும் தகவல் அனுப்பிவிடும். இதன் மூலமாக கார் உட்பட அனைத்து வாகனங்களையும் குறிப்பிட்ட நபர் மட்டுமே இயக்க முடியும். மற்றவர்கள் இயக்கினால் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்குத் தகவல் அனுப்பிவிடும். மேலும், வாகனம் திருட்டுப் போனால் அது எந்த இடத்தில் இருக்கிறது என்பதையும் ஈஸியாகக் கண்டுபிடிச்சிடலாம்'' என்று முடிக்கிறார்!

- யா.நபீசா
படங்கள்: ரா.ராபின் மார்லர்

COMMENT(S):

Only Subscriber Can Post Comments
ஆனந்த விகடன்
< 27 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook