• கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
20 May, 2013
  • Bookmark
  • Print
’’போரின் தொடக்கம் எங்கள் ஊர்!’’


''கருமேகங்கள் சூழ்ந்து மழைப் பந்தல் போடாதா என்று ஏங்கிக்கிடக்கும் வானம் பார்த்த மானாவாரிப் பூமிதான் எங்கள் ஊரான பரூர்பட்டி. கிழக்கும் வடக்கும் மணல் காடு. அடுத்து செம்மண் பூமி. மேற்கே வயல் காடு. தென்மேற்கே  பாதி கரிசல், பாதி வண்டல். தெற்கிலும் மணல் காடு என்று இயற்கையின் எல்லைகளைக்கொண்டது எங்கள் ஊர்'' என்று தன்னுடைய ஊரின் அறிமுகம் சொல்லி நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் கவிஞர் பட்டி சு.செங்குட்டுவன்.

''முகாசாபரூர், பட்டி, தொட்டி என்று மூன்று ஊரும் அடுத்தடுத்து இருக்கும். முகாசாபரூர்ல வாழ்ந்த ஜமீன்களான பாளையத்துக்காரங்க ஆடு, மாடுன்னு தங்களுடைய கால்நடைகளை அடைத்து வைப்பதற்கு உருவாக்கப்பட்ட இடம்தான் பட்டி. கால்நடைகளை மேய்ப்போர், குடும்பமாக இங்கேயே குடிசைப் போட்டு வாழ்ந்தனர். கால்நடைகள் தண்ணீர் குடிப் பதற்குப் பட்டிக்குச் சற்று தள்ளி ஒரு பெரிய குட்டைப் போன்ற அளவில் தொட்டியை உருவாக்கி இருந்தனர். பின்னாளில் பட்டி, தொட்டி இரண்டு இடங்களிலும் மக்கள் வசிக்கத் தொடங்கி இரண்டு ஊர்கள் உருவெடுத்தன.

எங்கள் ஊரில், 'படை வெட்டி மாரியம்மன் கோயில்’ என்று ஒரு கோயில் உண்டு. சங்க காலத்தில் 'ஆநிரை கவர்தல்’ என்பது போர் தொடுத்தலின் முதல் நிலை. பாளையக்காரர்கள் மீது போர் தொடுக்க வருபவர்கள் முதலில் கால்நடைகளைக் கவரும் பொருட்டு எங்கள் பட்டி மீதுதான் போர் தொடுக்க வருவார்கள். அப்படி வருபவர்களை இந்த மாரியம்மன் கோயிலில் இருந்துதான் விரட்டி அடிப்பார்களாம். அதனால்தான் படை விரட்டி மாரியம்மன் கோயில் எனப் பெயர் வழங்கிப் பின்பு அது திரிந்து, படை வெட்டி மாரியம்மன் கோயில் என ஆனது.

மாலை நேரத்தில் பள்ளி முடித்து வீடு திரும்பும் முன், வழியில் மல்லாட்டைச் செடிகளைப் பிடுங்கிக்கொண்டு ரயில் இருப்புப் பாதையோரம் காத்திருப்போம். நாங்கள் நின்றுகொண்டு இருக்கும் பகுதிச் சற்று மேடாக இருக்கும். ரயில் அந்த இடத்தில் மெதுவாகச் செல்லும். ரயிலில் செல்லும் எங்கள் ஆசிரியர்களை நோக்கி நீளமான குச்சியில் மல்லாட்டைச் செடிகளை வைத்து நீட்டுவோம். ஆசிரி யர்கள் மல்லாட்டைச் செடிகளை எடுத்துக்கொள்வார்கள். அப்புறம்தான் நாங்கள் வீடு திரும்புவோம்.

எங்கள் ஊரில் உள்ள மன்மதன் கோயில் திடலில் அவ்வப்போது நாடகங்கள் நடக்கும். அதில் காங்கிரஸ்காரர்களுக்கும் தி.மு.க-வினருக்கும் பலத்த போட்டி நடக்கும். காங்கிரஸ்காரர்கள் அரிச்சந்திரன் நாடகம், சனி வார விரத நாடகம், சம்பூர்ண ராமாயணம் என்று பக்தி நாடகங்கள் நடத்துவார்கள்.

தி.மு.க-வினர் அவர்களுக்குப் போட்டியாக பல பகுத்தறிவு நாடகங்கள், புரட்சிகரமான நாடகங்களை நடத்திப் பதிலடி கொடுப்பார்கள். இந்தி எதிர்ப்புக் காலகட்டத்தில் கலைஞரின் 'தூக்கு மேடை’ நாடகத்தை 'ரத்தச்சுவடு’ என்று பெயர் மாற்றி நடத்தினார்கள் தி.மு.க-வினர்.

இப்படிச் சங்க காலம் தொட்டு சம காலம் வரை பல வரலாற்று நிகழ்வுகளை மகத்தான நினைவுகளாக மாற்றும் ஆற்றல் எங்கள் ஊருக்கு உண்டு!''

- ரியாஸ்
படங்கள்: ஆ.நந்தகுமார்

COMMENT(S):

Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 11 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook