• கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
  • காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? சீமான் கேள்வி
  • சீனாவில் அதிகளவில் முதலீடு செய்ய இந்தியர்களுக்கு பிரதமர் கெகியாங் அழைப்பு
  • கடல் சீற்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஊர் திரும்புவதில் தாமதம்
  • தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பு: கர்நாடக காங். தலைவருக்கு, திருமாவளவன் கண்டனம்
  • குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு சென்னை டிராவல்ஸ் அதிபர் தற்கொலை
  • லஞ்சம் வாங்கியதற்காக அம்பத்தூர் தாசில்தார் டி.எல்.நாகேஸ்வரராவ் கைது
  • கிரிக்கெட் சூதாட்ட முக்கிய குற்றவாளி பிரசாந்த் சரண்
21 May, 2013
  • Bookmark
  • Print
’’புதுச்சேரி என்பது அரசியல் பூமி!’’

''ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிகள் தமிழகத்தையும், ஏனைய இந்திய துணைக் கண்டத்து சமஸ்தானங்களையும் கைப்பற்றியதைப் போலவே, பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம் பெனிகள் புதுச்சேரி, காரைக்கால், மாஹி, யானம் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றி வைத்து இருந் தன.

1917- களில் ரஷ்யப் புரட்சி தோற்றுவித்த எழுச்சி, புதுச்சேரியிலும் பரவியது. அப்போது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக இருந்த வ.சுப்பையா தலைமையில், விடுதலை வேண்டி பல  போராட்டங்கள் நடைபெற்றன. அந்தளவுக்கு கம்யூனிசப் பிடிப்புடன் இருந்த புதுச்சேரி, பிற்காலத்தில் காங்கிரசின் கோட்டையாக மாறிப் போனது வியப்பானது'' என்ற வரலாற்றுத் தகவல் களோடு தன் ஊர் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார் 'தமிழர் கண்ணோட்டம்’ ஆசிரியர் குழுவினைச் சேர்ந்த க.அருணபாரதி.

''தமிழகத்தில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் இங்கும் எதிரொலிக்கும். இந்தி எதிர்ப்புப் போரின்போது கடலூரிலிருந்து புதுச் சேரிக்கு 22 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்ட இராணுவத்தினர், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 15 பேரை சுட்டுக் கொன்றனர். எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது, புதுச்சேரியிலும் சேர்த்தே வெற்றிகண்டார். ஆனால், புதுச்சேரியைத் தமிழகத்துடன் இணைப்பது குறித்து அ.தி.மு.க. அரசு பேசியது, அவர்களுக்கே ஆபத்தாக முடிந்தது.

தமிழகத்துடன் இணைக்கப்பட்டால் புதுச்சேரிக்கு இந்திய அரசால் வழங்கப்படும் சலுகைகள் நிறுத்தப்பட்டு விடும் என்ற அச்சத்தின் காரணமாக மக்கள் அந்த முடிவைக் கடுமையாக எதிர்த்தனர். அ.தி.மு.க. அரசு விரைவிலேயே டிஸ்மிஸ் ஆகும் அளவுக்கு மக்கள் போராட்டம் வீரியத்துடன் நடைபெற்றது. அதன் பின், இன்றுவரை புதுச்சேரியில் அ.தி.மு.க. செல்வாக்குப் பெற்றக் கட்சியாக வளர முடியவில்லை.

காலனிய ஆட்சியின் போது, பிரெஞ்சு, வெள்ளை இனமக்கள் தனியாகவும் மண்ணின் மக்களான தமிழர்களைக் 'கருப்பின’ மக்களாகவும் கருதி அவர்களைத் தனியாக பிரித்து வைக்கும் வகையில் புதுச்சேரி நகரத்தை பிரெஞ்சு அரசு வடிவமைத்தது. காலனிய ஆட்சிமுறை முடிந்து விட்ட நிலையிலும், இந்த நகர வடிவமைப்பு  இன்று வரை அப்படியே தொடர்கின்றது.  

இன்றைக்கு நாங்கள் சிறுபிராயத்தில் விளையாடி மகிழ்ந்த ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் மகிழுந்தும், இதர மோட்டார் வாகனங்களும், நாங்கள் விளையாடிய இடங்களை அடைத்துக்கொண்டு நிற்கின்றன. பல காலமாக பூட்டிக் கிடந்த பழைய வீடுகளின் திண்ணைகளில் புதிய வண்ணங்களில் கடைகளின் பெயர்ப் பலகைகள் தொங்குகின்றன. கேரம் போர்டும்,  செஸ்ஸும்  விளையாடிய திண்ணைகள் இடிக்கப்பட்டு, அவை கார் நிறுத்தும் இடமாகவும், புதிய கடைகள் வைக்கவும் உருமாற்றப்பட்டு விட்டன.

கிரிக்கெட் விளையாடி தெருவிளக்கை உடைத்து காவல்துறை வரை சென்ற அந்தத் தெருவின் பத்தாண்டுகளுக்கு முன்னான 'வரலாற்று’ நிகழ்வுகள் எல்லாம், இந்தத் தெருவில் இப்போது வசிக்கும் சிறுவர் சிறுமியர்களுக்குத் தெரியாது. இப்போது, அவர்களில் பெரும்பாலோர், பெற்றோர்களின் எதிர்காலம் குறித்த அறிவுரையின் காரணமாக, டியூஷன்களிலும் பயிற்சி வகுப்புகளிலும் மூழ்கிவிட்டனர்!''

- படங்கள்: முத்துக்குமார், ஆ.நந்தகுமார்

COMMENT(S):

Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 25 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook