• பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!
  • மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார்
  • பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு
  • நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம்
  • நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த்
  • 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி'
22 May, 2013
விகடன் மேடை - ஷங்கர்
விகடன் மேடை - ஷங்கர் டி.குமரேஸ்வரன், தென்காசி.  ''எழுத்தாளர் சுஜாதாவுடன் நீங்கள் படத்துக்கு வசனம் அமைக்கும் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்களேன். சில சிரமமான சீன்களுக்கு சுஜாதா சார் பளிச் என்று நச் வசனம் பிடித்த உதாரணம் ஏதேனும்? அப்படி சுஜாதா சார் எழுதிய வசனங்களில் உங்களுக்குப் பிடித்தது எது?''  ''நாங்க வெளியூருக்கு கதை டிஸ்கஷன் போறதுக்கு முன்னாடி, 'கதை ஃபுல் லைன் ரெடியா இருக்கா, சுபம் போடற வரைக்கும்?’னு கேட்டுக்குவார். டிஸ்கஷன் ஆரம்பிச்சதும் அவர் அமைதியாக் கவனிப்பார். எந்த வசனமோ, கதையோ, காட்சிகளோ, சொல்ல மாட்டார். கதைப் போக்குல, காட்சிகள்ல ஏதாவது சிக்கல் வந்து முக்கி நிக்கிறப்போ மட்டும், எதனால சிக்கல்னு தெளிவுபடுத்தி, 'இந்த ரூட்ல யோசிங்க’ம்பார். அப்பப்போ சில படங்களையும் சில காட்சிகளையும் ரெஃபரன்ஸுக்கு சுட்டிக்காட்டுவார். தீர்க்க முடியாத பிரச்னை ஏதும் வந்தா, மறுநாள் 'Syd Field, Robert Mckee, இவங்க எல்லாம் ஸ்க்ரீன் ரைட்டிங்ல இந்தந்தப் பிரச்னை வந்தா, இந்தந்த. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 75

நண்பர் ஹரிஹரன்..அடுத்தவருக்காக பிரார்த்தனை செய்வதையும் இஸ்லாத்தில் சொல்லப்பட்ட முறைப்படி இறைவனிடம் மட்டும்தான் செய்ய வேண்டும்.! தகடு, தாயத்து முதலியவைகள் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.!

நண்பர் இக்பால்: அடுத்தவருக்காக பிராத்தனை செய்வது இஸ்லாமில் இருக்கிறது அல்லவா? அதுதான் முக்கியம். அதை யார் வேண்டுமானமும் எந்த முறையிலும் செய்யலாம். தாயத்து உட்பட.

ஏன்... ஷ்ங்கரின் கவிதை திறன்.... காதலன் படத்தில் வரும்..... செவ்வாய் பேட்ட....பாட்டில் நன்கு புலப்படுமே....

"ஞானப்பழமே..... ஞானப்பழமே"

கடைசி வாரம் என்பதாலோ என்னவோ ஷங்கரின் பதில்கள் நன்றாகவே இருக்கிறது. சுஜாதாவின் வசனங்கள் படிக்கும் போதே படம் முழுவதும் மனத்திரையில் ஓடி மறைகிறது. குழந்தைகள் இருபர்வர்களுக்கு கண்டிப்பாக கடைசி பதில் புரியும். ஐஸ்வர்யா மட்டும் அல்ல நாட்டின் பிரதமராக இருந்தாலும் குழம்பு கரண்டி எடுத்தால்தான் நம் மக்கள் பரிபூர்ண பெண்ணாக ஏற்றுக்கொள்வர்கள் .

ஷங்கர் சார் நம்பிக்கை தேவை, ஆனால் மூடநம்பிக்கை கூடாது, நீங்கள் அந்த தர்ஹாவிற்கு போகாவிட்டாலும் தங்கள் மகனுக்கு சரியாகியிருக்கும்,

அவர் எழுதினதுல எனக்குப் பிடிச்சது 'இந்தியன்’ தாத்தா பேசற, 'மத்த நாடுகள்ல எல்லாம் லஞ்சம் இருக்கு... அங்க எல்லாம் கடமையை மீறுறதுக்குத்தான் லஞ்சம்... இங்கதான் கடமையைச் செய்றதுக்கே லஞ்சம்’கிற வசனம்தான் -----> அதை கமல் தன் பாணியில் செய்ததனால் இன்றும் அந்த சீன் நமக்கு மறக்காது! யோசித்துப் பாருங்கள்! ரஜினி தன் கன்னட ஆக்ஸென்டில் வேகவேகமாக அந்த வசனங்களை பேசியிருந்தால் படத்தின் கருவே கெட்டிருக்கும்! நல்லவேளை ரஜினி இந்தியனில் நடிக்கவில்லை!

சுஜாதா இல்லாத ஷங்கர் அவ்வளாவு பவர்ஃபுல்லாக ஷைன் செய்ய முடியாது. எந்திரன் டைட்டிலில் அவருக்குத் தகுந்த மரியாதை செய்யவில்லை. தமிழ்நாடும் அவரின் நினைவுக்குத் தகுந்த மரியாதை செய்யவில்லை. இங்கு அவர் பிறந்தது அவருக்கு சாபக்கேடு!

ரகுவரனின் அந்த கடைசி இங்கிலிஷ் வசனம் அந்த கேரக்டருக்கு பொருத்தமில்லாதது. தமிழ் பற்றாளராய், படம் முழுவதும் நல்ல தமிழ் பேசும் , வக்கீல்களிடம்கூட தமிழ்ல சொல்லு என்று அதட்டும் அந்த முதல்வர், கடைசியில் தமிழில் சொல்லியிருக்க வேண்டும். முரண்பாடு.

i like this answers now i know the power of Prathanai club

Great interview Shankarji. You are a man of humility, hard work and dedication. May God bless you always.

"பையனை அழைச்சுக்கிட்டு மவுன்ட் ரோடு தர்ஹாவுக்கு வரச் சொல்லுங்க’.. ..ஆச்சர்யமான ஆச்சர்யம்! ரெண்டு மூணு நாள்லயே என் மகனுக்கு இருந்த எல்லாத் தொல்லைகளும் நீங்கி நல்லபடி ஆகிட்டான். "---------> திராவிடப் பகுத்தறிவுக் கூட்டம் இதை மூட நம்பிக்கை என்று சொல்லுமா? அதற்குத் திராணி உண்டா?

shashi, i think gentleman movie dialogue is written by balakumaran. It has become common to associate shankar with sujatha. sujatha has written for mani ratnam, kamal and others as well.

எல்லா புக்ழும் இறைவனுக்கே !

KAVITHAI SUPER THAILAVA

ஷங்கர் சார், மறைக்காம உண்மையைச் சொல்லுங்க! ஜென்டில்மெனில் முறுக்கு விற்க ஐயர் என்று பொய் சொல்லும் சிறுவன், பாய்ஸில் மணிகண்டன் கேரக்டர், சிவாஜியில் "டேய் என் கேபிடேஷன் ஃபீஸ் கிடைச்சுரும் போல" என்று கடைசி சீனில் குதித்துக்கொண்டே சுமனின் தொண்டையில் கால்வைக்கும் கேரக்டர்.... இதெல்லாம் உங்க "டைப் காஸ்டிங்" தானே?

"That was a good interview" - இந்த வசனம் வில்லனை புத்திசாலிப்போல் காட்டும் உத்தி. ஜேம்ஸ் பான்ட் படங்களில் இந்த மாதிரி வசனக்களை கேக்கலாம்.

Its true, It happen to me personally same like our Shankar. They prey for others well being and dedicate that prayer to them. you will get better with that kind of prayer. Haven't you heard of 'Prarthanai club' people do pray for somebody's wellbeing. Rat race is going on nobody is thinking for neighbours suffering. Selfish world no one understand this part Shankar sir. I liked all the answers. Hope to see good movies like 'Indian and Mudhalvan'

"இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை" இறைவனிடம் மட்டுமே கையேந்தவேண்டும். அவனால் படைக்கப்பட்டவைகளில் அல்ல (மனிதன் உட்பட)... இதை ரஹ்மானிடம் யாராவது எடுத்து இயம்பவேண்டும். - அப்படியென்றால் உங்களுக்கு உடல்நிலை சரியில்லையென்றால் மருத்துவரிடம் செல்லமாட்டீர்களா ? கடவுள் எப்போதும் மனித உருவத்தில் வந்துதான் உதவுவான், சங்கர் விஷயத்தில் அது ரஹ்மான் ரூபத்தில்...

ரஹ்மான் இன்னும் இஸ்லாத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாத நிலையில்தான் இருக்கின்றார்.! காக்காய் உட்காரப் பனம் பழம் விழுந்தது போல் நடக்கின்ற தர்கா சம்பவங்கள், இஸ்லாத்தின் வணக்க வழிபாட்டிற்கு சம்பந்தமே இல்லாதவைகள்.!

சுஜாதா வசனத்தில் பிடத்தது, ஜென்டில்மேன்ல், "வாழ்க்கைக்கும் ஒரு ரெநின்ட் புட்டொன் இருந்தா இப்படி இருக்கும்?" - Greatman - Miss you Sujatha.

முதல்வன் இன்ட்ர்வ்யூ வசனம் முழுக்க அர்ஜூனோ, ரகுவரனோ,ஷங்கரோ தெரிய வில்லை.. சுஜாதா மட்டுமே தெரிந்தார்.

முரண்பாடா இருக்கே ஷங்கர், ப்ளாக் மேஜிக் நம்புற ரஹ்மான், ப்ராபபிள் கோஇன்சிடன்ஸ் ந்னு சொல்ற சுஜாதா .. ரெண்டு பேர் கூடவும் வேலை செஞ்சிருகீங்க.. ஆனா, கடைசில அறிவியலை க்காட்டிலும் எமோஷனத்தான் நம்புறீங்க..

உண்மையிலே நீங்கதான் 'எந்திரன்' டைரக்டரா?

'ஜீன்ஸ்’ அவங்களுக்குக் கிட்டத்தட்ட முதல் படம்தான்.

எங்கேயோ இடிக்குதே.. இருவர் தானே ஐஸ்வர்யாராய் யோட முதல் படம்.? அதுவுமில்லாம.. வட இந்தியா மீடியாக்கள்ல, மணிரத்னம் தான் என்னோட டீச்சர்ன்னு சொல்றதா கேள்வி..

பாய்ஸ் படத்துல வருமே ..ஒரு வார்த்தையில் ஒரு கவிதை உன் பெயர்..ஒரு எழுத்தில் ஒரு கவிதை .. நீ

அந்த மாதிரி இருக்கே ஷங்கர் உங்க கவிதை..

இது அதே தான், ..ஸ்வீட் ஸ்டாலே.......

சிவாஜியில்..... "பாஸ் கத்தி குத்தெல்லாம் வாங்கி இருக்கேன்.... அந்த பெட்டியை வைச்சுட்டு போகலாமே" என நக்கல் தெறிக்க அரசியல்வாதிகளை சாடும் வசனமும் ...

சாகும் தருவாயில் கூட மாறாத அரசியல்வாதிகளை தோலுரித்து கட்டியது....என்பதை மறுக்க இயலாது...

  Displaying 1 - 25 of 71
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 07 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook