• காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
  • பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
  • குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல்
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து
  • என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
  • மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
  • வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
25 May, 2013
செய்திகள்...
செய்திகள்... ''தமிழகத்துக்கு, ஒரு சொட்டு காவிரி நீர்கூட விடவில்லை. கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து, தண்ணீர் அதிகரிக்கும் வரை தமிழகத்துக்கு தண்ணீர் விடும் திட்டமே இல்லை.''  - கர்நாடக முதல்வர் சதானந்த கௌடா ''நாங்கள் யாரையும் வற்புறுத்தி வீட்டை வாங்கவில்லை என்பதை எங்களால் நிரூபிக்க முடியும். கமல்ஹாசன் உட்பட பலர் பங்கேற்ற, பொது ஏலத்துக்கு வந்த வீட்டைத்தான் நாங்கள் வாங்கினோம்!'' - மு.க.ஸ்டாலின் ''இந்திய எம்.பி-க்கள் குழுவிடம் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது தொடர்பாக எந்த உறுதியும் தர வில்லை!'' - ராஜபக்ஷே ''மது விற்பனையின் மூலம் மக்களுக்குச் சிறுநீரகம், ஈரல் பாதிக்கப்படுவதற்கு மறைமுகக் காரணமாக இருக்கிறது 'டாஸ்மாக்’ நிறுவனம்!'' - நீதிபதி சந்துரு ''ரேகா அழகானவர். ஆனால், அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கிய காங்கிரஸின் அரசியல் அசிங்கமானது.'' - பால்தாக்கரே. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 23

பால்தாக்கரே அவர்களே...
தங்கள் மகன் உத்தவ் தாக்கரே கூட அழகானவர்தான் ஆனால் ராஜ்தாக்கரேவுக்கு கல்தா கொடுத்துவிட்டு தங்கள் மகனைத் தலைவராக்கிய தங்கள் அரசியல் கூடத்தான் அசிங்கமானது.....

''இந்திய எம்.பி-க்கள் குழுவிடம் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது தொடர்பாக எந்த உறுதியும் தர வில்லை!''

நாங்களும் அதை கேட்க வரலிங்க,சிலோன் பரோட்டா நல்லா இருக்கும்னாங்க,அதுவும் உங்க கையாள போட்டு கொடுப்பீங்கன்னு சொன்னாங்க அதான் வந்தோம்யா........

ரேகாவை எம்பியாக்கியாதை விமர்சிக்கும் பால்சாஹிப் தாக்கரே சச்சினைப் பற்றி பேசியிருக்கமாட்டாரே!!! சச்சின் மாராட்டியர் ஆச்சே அவர் அதற்காகப் பெரிதாக அலட்டிக்கொள்ளாவிட்டாலும் கூட!!!

பதவியில் உட்கார வைத்த எடியூரப்பாவிற்கே திருப்பி முதுகில் குத்திய சதாணந்த கவுடாவிடம் காவேரி நீர் பங்கீட்டு விஷயத்தில் நியாய தர்மத்தை எதிர்பார்க்க கூடாது....

''ரேகா அழகானவர். ஆனால், அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கிய காங்கிரஸின் அரசியல் அசிங்கமானது.''.......அதான் உங்களின் யுவசேனாவின் ஆண்டு விழா விடியோக்களை பார்க்கும் போது தெரிகிறதே ....

கர்நாடகாவில் மழைஇல்லாமல் கடும் வறட்சி. குடிக்க கூட பல இடங்களில் தண்ணீர் இல்லை.

ராஜிய சபாவில் ஜெய பச்சன் இருக்கும் ரோவிலே பக்கத்தில் ரேகாவிர்க்கு சீட்டு ஒதுக்கி உள்ளார்கள். இது பிடிக்காத ஜெய , தன் சீட்டை மாற்றினாராம். அமிதாப் .... இந்தவயதிலும் ...கொடுத்து வைத்தவர்.

ஒரு வருடத்தில் 1747 கொலைகள்?? இதில் 1700 கொலைகளுக்கு டாஸ்மார்க்கே பொறுப்பு.. ஜெயலலிதா டாஸ்மார்க்குகளை உடணடியாக மூடி, மதுஒழிப்பு சட்டத்தை அமுல்படுத்துவாரா????

240 காவல் நிலையங்களை நக்ஸல்கள் தாக்கியிருக்கிறார்கள்... அத்தனை மன்னின் மைந்தர்களை எதிரிகளாக உருவாக்கியிருக்கிறது விவகாரமான சோனியா காங்கிரஸ்... உள்நாட்டிலுள்ள சொந்த பிள்ளைகளை பகைத்து கொண்டு, வெளிநாட்டு எதிரிகளோடு எப்படி மோதி வெற்றி பெற போகிறது பாரத ராணுவம்????

சென்னை சென்ட்ரலுக்கு 140 வயதா?? ஏதோ நேற்று கட்டியது போலவே இன்றும் புதுமையாகவே காட்சியளிக்கிறது... வெள்ளைக்காரன் கட்டியதாச்சே, நம்ம கொள்ளைக்கார அரசியல்வாதிகள் காண்ட்ராக்ட் எடுத்து கட்டியிருந்தால் எப்பொழுதோ பயனிகள் தலையில் இடிந்து விழுந்திருக்கும்..

21 கோடியில் மின்னனு ரேஷன் அட்டை தருவது இருக்கட்டும்... ரேஷன் கடையில் ஒழுங்கான முறையில் பொருட்கள் விற்பது எப்போது...

திமுக ஆட்சியில் இல்லாததால், காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை வைத்து சுமார் இரண்டு லட்சம் வழக்குகள் வரை பதிவு செய்திருக்கிறார்கள்.. திமுக ஆட்சியில் இருந்த போது, அமைச்சர் என்றால் அவரே ஏ.டி.ஜி.பி, எம்.எல்.ஏ. என்றால் அவர் தான் எஸ்.பி., மாவட்ட செயலாளர் என்றால் அவர் தான் டி.எஸ்.பி, நகர செயலாளர் என்றால் அவர் தான் இன்ஸ்பெக்டர், புறநகர செயலாளர் என்றால் அவர் தான் சப்-இன்ஸ்பெக்டர், கவுன்சிலர் என்றால் அவர் தான் ஏட்டய்யா, வட்ட செயலாளர் என்றால் அவர் தான் ரெண்டு கோடு, ஒரு கோடு தொப்பை போலீசு... இது போக கருணாநிதி குடும்பத்தினரே மாவட்ட கமிஷணர்கள்... ஜெயா ஆட்சியில் போலிஸார் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது...

சோனியா காங்கிரஸோட அரசியல் அசிங்கமானது மட்டுமல்ல, மிக ஆபத்தானது.. நாட்டுக்கும் மக்களுக்கும் மாணிட சமுதாயத்திற்கும் பெருங்கேடினை விளைவிக்கவல்லது...

சோனியா காங்கிரஸின் அரசியல் அசிங்கமானது மட்டுமல்ல, அதை வித பல லட்சம் மடங்கு ஆபத்தானது....

இந்தியாவில் இருந்து சிங்கள விருந்துக்கு போன எம்.பி.க்களை விட தான் ரொம்ப யோக்கியன் என்று பொருள் பட சொல்றார் நேர்மையான ராஜபக்ஷே...

வற்புறுத்தி வாங்கலை, மிரட்டி உருட்டி தான் வாங்கினோம்... மிரட்டலும், உருட்டலும் கூட வற்புறுத்தலே தான் என்பதை நையிணா கருணாநிதி கொடுக்கு ஸ்டாலினுக்கு சொல்லி தரவில்லையா???

கமல்ஹாசன் உட்பட பலர் பங்கேற்ற, பொது ஏலத்துக்கு வந்த வீட்டைத்தான் நாங்கள் வாங்கினோம்!''

- முதல்ல வீட்டை வாங்கவே இல்லைன்னு சொன்னிங்க... இப்போ ஏலத்துலதான் வாங்கினோம்னு சொல்றீங்க... எப்போ அடிச்சுப் புடிச்சுதான் வாங்கினோம்னு உண்மையை சொல்வீங்க???

தாக்கரே, ரொம்பத் தாக்கரே!

'மது விற்பனையின் மூலம் மக்களுக்குச் சிறுநீரகம், ஈரல் பாதிக்கப்படுவதற்கு மறைமுகக் காரணமாக இருக்கிறது 'டாஸ்மாக்’ நிறுவனம்!''

- நீதிபதி சந்துரு

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த புதிய உபாயம் கிடைத்துவிட்டது, மக்களின் ஏகோபித்த ஆதரவுடன்!

''இந்திய எம்.பி-க்கள் குழுவிடம் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது தொடர்பாக எந்த உறுதியும் தர வில்லை!''

- ராஜபக்ஷே

வாய்க்கு ருசியா ஏதாவது குடுத்தீங்கல்ல, அது போதும்!

Displaying 1 - 20 of 20
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 09 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook