ஜாலியா இருக்கணும்! உற்சாக உதறலில் இருந்தது மதுரை ஆதீனம். ஹைடெக் மைக்குகள்... லேப்டாப்கள் சகிதம் நித்தியானந்தாவின் சீடர்கள்... ''மைக் ஒன் காலிங் மைக் டூ... அங்கே கூட்டம் ஜாஸ்தியா இருக்கு. கன்ட்ரோல் பண்ணுங்க... ஓவர்!'' என்று உத்தரவுகள் தூள் பறந்துகொண்டு இருக்க... 100 கார்கள் புடைசூழ வந்து இறங்கினார்கள் நித்தியானந்தாவும் மதுரை ஆதீனமும். ''நித்தியானந்தராகிய நான் இன்று முதல், 293-வது குருமஹா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் என்று அழைக்கப்படுவேன்!'' - உச்சந்தலை யில் கீரிடம் மினுங்க, முகம் எல்லாம் புன்னகை பூத்திருக்க... மதுரை ஆதீனத்தின் இளவரசராக முடிசூட்டிக்கொண்டார் நித்தியானந்தா. அருகில் 'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்’ பூரிப்புடன் நின்று நித்தியின் தோளை இறுக்கி நெருக்கி போஸ் கொடுத்துக்கொண்டு இருந்தார் மதுரை ஆதீனம் அருணகிரி. திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழகத்தின் 18 சைவ மடங்களில் மிக மூத்த முதல் மடமான மதுரை ஆதீன குருபீடத்துக்கு இனி நித்தியானந்தாதான். . .
ஈசனே இவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்ற விவாதத்திற்குள் நாங்கள் போகவில்லை. ஆனால் இந்த கேவல பிழைப்பிற்காக உமது பெயரையும், உமையம்மையின் பெயரையும் நாசம் செய்கின்றனரே, அதைக் கண்டாவது நீர் வெகுண்டெழக் கூடாதா? நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த மதி கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்!
இது போன்ற சன்னியாசி போர்வையில் ஒளிந்து கொண்டு இருக்கும் ஜன்மங்களால் தான் இந்து மதத்தின் புனிதம் கெடுகிறது...சுகி சிவம் அவர்கள் இது போன்ற ஜன்மங்களை சாடுகிறார் அவரது சொற்பொழிவுகளில் ..அவருக்கு ஆதரவு கொடுத்து இந்து மதத்தின் புனிதத்தை காப்போம்....
நித்தி இளவரசனாக்கும்??? தானொரு ஆண்மகனே இல்லை என்று நித்தி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு மகளீர் சிறையில் கிடந்ததை அருணகிரி மறந்து விட்டாரோ?? நித்தியோட கிடுக்கு பிடியில் மாட்டியுள்ள அருணகிரியை இனி நண்றியில் சிறந்த நாயும் மதிக்காது...
சிவபெருமான் கணவில் தோண்றி நித்தி பெயரை டிக் செய்தாராக்கும்??? சிவபெருமான் தீராபினியை உம்ம உடலில் அடுத்து கொடுக்க போகிறார், அப்பொழுது தெரியும் சிவபெருமான் எதை டிக் செய்தார் என்பது...
நித்தி மடாதிபதியானால் அம்மா ஆட்சிக்கு ஆகாது என்று யாரவது ஒரு ஜோதிடர் ஒரு அறிக்கை விடட்டும், அப்புறம் இருக்குது நித்திக்கு. ......
அப்புறம் நித்தியும் ஆதினமும்....தினம் தினம் கோர்ட் போக வேண்டியதுதான்
மடம் பாதை மாறிய படலம். ஹை - டெக் இல் கொண்டு வந்து விட்டனர். மடத்தலைவரே, இளம் பெண், குத்தாட்டம் என்றால் சைவ நீதி மருள் படுகிறதே! பொருள் செல்வத்திற்கும் உள்ள சிறப்பே தனி
ஆயிரக்கணக்கான கோடிகளை வைத்துக்கொண்டு இந்த சாமியார்கள் என்ன செய்கிறார்கள்? அதே மதுரையில் கிருஷ்ணன் என்பவர் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு உணவழித்து சேவை செய்து வருகிறார். அதுதானே கடவுளுக்கு செய்யும் உண்மையான சேவை. அவருக்கு இந்த சாமியார்கள் ஒரு சில கோடிகளை கொடுத்தால் இன்னும் நிறையப்பேருக்கு செய்வார் அவர்.
நமக்குக் காமெடியாகக் கமெண்ட் போட செம ஸ்கோப் உள்ள மேட்டர்தான் இது ஆனாலும் சமஸ்ன் கேள்விகளின் நியாயங்கள் சிரிப்புச்சத்தத்தில் அமிழ்ந்துபோய்விடக்கூடாது....... இறைவனால் இறைவனையே காத்துக்கொள்ளமுடியவில்லை... இவர் எப்படி நம்மைக் காப்பார் என மக்கள் சிந்திக்க வேண்டும்!
மழை நீரில் மகளீர் ஆடுவதை பல்லக்கில் இருந்து அருணகிரி ரசித்தாராம்.. அதுவும் அவருக்கு நிரம்ப பிடித்திருந்ததாம்... அங்கே தான் இவருக்கு சறுக்கல் ஆரம்பித்திருக்கிறது... மழைப்பாட்டு எப்படியிருக்கும் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை... உண்மையிலேயே அருணகிரி வழுக்கி விழுந்தவர் தான்....
COMMENT(S): 106

இன்றைக்குப் பல மடங்கள், பழமையின் முடைநாற்றம் அடிக்கும் கோமாளிகளின் கூடாரங்கள்.......Very Well Said.
ஆதீனம் என்னத்த கன்னையாவை போல இருக்கிறார்
வெட்ககேடு.
Oh God please save hinduism
These two will be enough to damage our values and hindu culture. Corruption touched every place in India and religion is no exception.
ஆதீனங்கள் அரசுடமை ஆக்கப்படவேண்டும் என்பதற்குத்தான் இவர்கள் இப்படி செய்கிறார்கள் போலும்.
இந்து மதத்திற்கு வந்த ஆயிரமாயிரம் சோதனைகளில் மேலும் ஒன்று...
நித்தி இளவரசனாக்கும்??? தானொரு ஆண்மகனே இல்லை என்று நித்தி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு மகளீர் சிறையில் கிடந்ததை அருணகிரி மறந்து விட்டாரோ?? நித்தியோட கிடுக்கு பிடியில் மாட்டியுள்ள அருணகிரியை இனி நண்றியில் சிறந்த நாயும் மதிக்காது...
சிவபெருமான் கணவில் தோண்றி நித்தி பெயரை டிக் செய்தாராக்கும்??? சிவபெருமான் தீராபினியை உம்ம உடலில் அடுத்து கொடுக்க போகிறார், அப்பொழுது தெரியும் சிவபெருமான் எதை டிக் செய்தார் என்பது...
நித்தி மடாதிபதியானால் அம்மா ஆட்சிக்கு ஆகாது என்று யாரவது ஒரு ஜோதிடர் ஒரு அறிக்கை விடட்டும், அப்புறம் இருக்குது நித்திக்கு. ......
அப்புறம் நித்தியும் ஆதினமும்....தினம் தினம் கோர்ட் போக வேண்டியதுதான்
மடம் பாதை மாறிய படலம். ஹை - டெக் இல் கொண்டு வந்து விட்டனர். மடத்தலைவரே, இளம் பெண், குத்தாட்டம் என்றால் சைவ நீதி மருள் படுகிறதே! பொருள் செல்வத்திற்கும் உள்ள சிறப்பே தனி
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பக்தகோடி மக்களை என்ன சொல்ல?
ஆயிரக்கணக்கான கோடிகளை வைத்துக்கொண்டு இந்த சாமியார்கள் என்ன செய்கிறார்கள்? அதே மதுரையில் கிருஷ்ணன் என்பவர் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு உணவழித்து சேவை செய்து வருகிறார். அதுதானே கடவுளுக்கு செய்யும் உண்மையான சேவை. அவருக்கு இந்த சாமியார்கள் ஒரு சில கோடிகளை கொடுத்தால் இன்னும் நிறையப்பேருக்கு செய்வார் அவர்.
நமக்குக் காமெடியாகக் கமெண்ட் போட செம ஸ்கோப் உள்ள மேட்டர்தான் இது ஆனாலும் சமஸ்ன் கேள்விகளின் நியாயங்கள் சிரிப்புச்சத்தத்தில் அமிழ்ந்துபோய்விடக்கூடாது....... இறைவனால் இறைவனையே காத்துக்கொள்ளமுடியவில்லை... இவர் எப்படி நம்மைக் காப்பார் என மக்கள் சிந்திக்க வேண்டும்!
இப்போதைக்கு ஆதீனப் பணிகளைக் கவனிப்பதற்காக, பிடதியில் இருந்து 50 சந்நியாசிகளை மதுரைக்கு அனுப்பி இருக்கிறோம். ஜெ. அவர்களே மதுரை மீட்பு பார்ட் - 2 பத்தி யோசிக்க கூடாதா?
இனி திணமும் மதுரை ஆதினத்தில் "குத்தாட்டம்" இருக்குமோ?? ஓ, இப்படி தான் மதத்தை வளர்க்க போகிறார்களோ????
நித்தியானது அப்டேட் செய்யப்பட்ட சாப்டுவேரல்ல, மொத்தமும் வைரஸ்களால் சர்வரையே சர்வ நாசம் செய்யப்பட உருவாகியுள்ள சாப்டுவேரே...
நண்பர் கார்த்திக் சொல்லுவது போல, ஒரு வேளை இந்த நித்தி அருணகிரியோட இரத்த வாரிசாக இருக்குமோ???
ஆடல் வல்லான் நடராஜனின் திருநடணத்தை,போதையில் குத்தாட்டம் போட்டத்தோடு ஒப்பிட்ட அருணகிரியே, உமது அறிவுக்கண்கள் குருடாகி போனது தெளிவாக தெரிகிறது....
மழை நீரில் மகளீர் ஆடுவதை பல்லக்கில் இருந்து அருணகிரி ரசித்தாராம்.. அதுவும் அவருக்கு நிரம்ப பிடித்திருந்ததாம்... அங்கே தான் இவருக்கு சறுக்கல் ஆரம்பித்திருக்கிறது... மழைப்பாட்டு எப்படியிருக்கும் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை... உண்மையிலேயே அருணகிரி வழுக்கி விழுந்தவர் தான்....
அருமை! அற்புதம்!! அட்டகாசம்!!! ஆட்டம் ஆரம்பமாகட்டும்! ஸ்டார்ட்... கேமரா... ஆக்ஷன்!!
கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்கே 2 கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்.
கட்சிக்காரங்க பெட்டிகளை கொடுத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவும் வங்கிகளா இந்த ஆதினங்கள்??