குட்பை லெனின்! கம்யூனிசத்தைக் குழி தோண்டிப் புதைத்த புதின் அரசாங்கம் இப்போது லெனினையும் புதைக்க முடிவு எடுத்திருக்கிறது. அருங்காட்சியகத்தில் பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த லெனினின் சடலத்தை அடக்கம் செய்ய முடிவெடுத்து இருக்கிறது புதின் நிர்வாகம். 1924-ல் தனது 53-வது வயதில் இறந்தார் லெனின். அன்றைய அதிபர் ஸ்டாலினின் உத்தரவுப்படி, கடந்த 88 ஆண்டுகளாக லெனினின் உடல் அடக்கம் செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டுவந்தது. ''ஒரு சாதாரண மனிதனைப் போலத் தன்னுடைய உடலையும் புதைக்க வேண்டும் என்பதே லெனினின் கடைசி ஆசையாக இருந்தது. ஆனால், அதுகூட இத்தனை ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை'' என்று சொல்லி இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் ரஷ்ய கலாசார அமைச்சர் விளாடிமிர் மெடின்ஸ்கி. இதன் பின்னணியில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், மெரிலாந்து பல்கலைக்கழகத்தில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு கருத்தரங்கம் சுட்டிக்காட்டப்படுகிறது. லெனினின் மரணம் தொடர்பான கருத்தரங்கம் அது. அதில் பேசிய ரஷ்ய வரலாற்று ஆய்வாளர் லெவ் லூரி, லெனின். . .
COMMENT(S): 3
செத்த உடல் மீதும் அரசியல் நடக்கிறதா. கொடுமை.
கம்யூனிஸம் தோற்று பல காலங்கள் கடந்தோடிவிட்டன!
True, you can kill him, you can bury him, but you cannot kill his ideas or bury his ideas. Nice ending for the article.