செய்திகள்.. ''போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தவன் நான். குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது ரகசிய வாக்கெடுப்பு. எனக்கு நம்பிக்கை இருக்கிறது.'' - பி.ஏ.சங்மா ''தமிழகத்தின் பிரச்னைகள் தீர்க்கப்படாத சூழலில், யார் ஜனாதிபதியாக வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? ஜனாதிபதி தேர்தலில் தே.மு.தி.க. பங்கேற்காமல் இருப்பதே தமிழ்நாட்டுக்குச் செய்யும் நன்மை.'' - விஜயகாந்த் ''தி.மு.க. ஆட்சிக் காலத்தில், இலங்கைக் கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்தபோது வாய்நீளம் காட்டியவர்கள், இன்றைக்கு அதேபோல் நடக்கும்போது வாயே திறக்கவில்லை. கேளாக் காதினராகவும் வாய்மூடிமௌனி களாகவும் மாறிவிட்டார்கள்.'' - கருணாநிதி ''நாடாளுமன்றத்தில் நான் கூச்சலிட மாட்டேன். சபையில் ஏன் ஒருவர் கத்த வேண்டும்? நம்முடைய கருத்துகளை அமைதி யான முறையில் சொன்னாலே போதும்.'' - சச்சின் டெண்டுல்கர் ''நாட்டில் கழிப்பறைகளே இல்லாதபோது அக்னி ஏவுகணைகளால் பலன் இல்லை.'' - ஜெய்ராம் ரமேஷ். . .
எல்லோரும் கத்திக் கொண்டிருக்கும் போது அமைதியாக நீங்கள் சொல்லும் கருத்து உங்களுக்கே கேட்காது சச்சின்...அதை டிவியில் பார்க்கும் போது 'ஒருமாதிரி' நினைத்துக் கொள்ளக்கூடும்...
COMMENT(S): 16
சபையில் ஏன் ஒருவர் கத்த வேண்டும்? - பேச வாய்ப்பு அளிக்காவிட்டால் நீங்கள் கூட கத்துவீர்கள்.
56,000 கோடி ரூபாய் உதவி,இதில் நம் மக்களுக்கு கழிப்பறை வசதி செய்து கொடுத்து இருக்கலாம்....
மஞ்சத்துண்டோட அலம்பல் தாங்கமுடீல ... பெரியவரே .... இலங்கைக்காரனைக் கட்டுப்படுத்த வேண்டிய மத்திய அரசைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பது யாரு நைனா ??
இந்த கோழி ஏன் இப்படி தேவை இல்லாமல் கூவிக்கொண்டே இருக்கிறது? அதான் யாரும் சீந்துவதில்லையே, பேசாம இளைப்பாற வேண்டியதுதானே?
ஜனாதிபதி தேர்தலில் தே.மு.தி.க. பங்கேற்காமல் இருப்பதே தமிழ்நாட்டுக்குச் .''....."விஜய்காந்த் "
நீஙக தமிழநாட்டு தேர்தலில் நிக்கலைன்னா இந்தியாவுக்கே செய்யும் நன்மை...எப்ப்ப்ப்ப்பூடிப்பு
நீங்க சொல்லும் போது மத்தவங்க காது கேக்கனுமே சச்சின் .....
அட போங்கப்பா!!!!
வாய் நீளம் காட்டுவது இப்போது உங்கள் முறை கலைஞரே... வயசாகி விட்டதால் அதிக மறதி போலும்....
எல்லோரும் கத்திக் கொண்டிருக்கும் போது அமைதியாக நீங்கள் சொல்லும் கருத்து உங்களுக்கே கேட்காது சச்சின்...அதை டிவியில் பார்க்கும் போது 'ஒருமாதிரி' நினைத்துக் கொள்ளக்கூடும்...
தமிழக நெடுஞ்சாலையில் சுகமான பயணத்திற்கு லாயக்கான தொலைவு எவ்வளவு?
சச்சின் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் தெரியுமா!?
ஹே ராம்...ஜெய் ராம்...!
இந்த வாரம் எல்லம் சூப்பர். விஜய்காந்த் அவர்கள் இதே கொள்கையை வருங்கால ஜெனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தலிலும் கடைபிடிப்பாராக
பொதுத் தேர்தலுக்கும், ஜனாதிபதித் தேர்தலுக்கும் உரிய வாக்காளர்கள் வேறு வேறு என்பது கூடத் தெரியாத வெள்ளந்தியாக இருக்கிறாரே சங்மா?!
56,000 கோடி ரூபாய் உதவி - அடுத்தவர் போதைக்கு நாம் ஊறுகாய்
இப்படியெல்லாம் தமிழக வாக்காளர்கள் நினைத்தால்...ஹலோ விஜயகாந்த் உங்களைத்தான்...!