இன்று... ஒன்று... நன்று!விகடன் வாசகர்களுக்கு வணக்கம்... நான் ச.தமிழ்ச்செல்வன் பேசுறேன்... ஓர் எழுத்தாளரா உங்ககிட்ட எழுத்து மூலமாப் பேசிட்டு இருந்த நான், இப்போ விகடன் மூலமா நேரடியா பேசப்போறேன். உலகத்திலேயே தாம் வாழ்ற நிலப்பரப்பை அதோட தன்மைகளுக்கு ஏத்த மாதிரி அஞ்சு வகையாப் பிரிச்சு, அதுக்கேத்த மாதிரி தொழில், விவசாயம் பண்ற ஒரே இனம்... நம்ம தமிழ் இனம்தான். அந்தப் பெருமையைக் கொஞ்சம் பெருமிதமாப் பேசலாமா? ஹோட்டல், திருமண மண்டபங்கள்ல ஆண்கள் சமைக்க, வீட்டுச் சமையல் அறையில் மட்டும் பெண்கள் அவஸ்தைப்படுவது ஏன்? ஆண்கள் சமைக்க வேண்டிய அவசியத்தையும் சமையலில் இருக்கும் சுவாரஸ்யங்களையும் எடுத்துச் சொல்றேன். காதலிக்கும் இடமாக சமையலறை இருக்கும்கிறது உங்களுக்குத் தெரியுமா? இந்த உலகத்தை ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் நாடுகள்னு பிரிச்சிருக்காங்க. அவங்க எப்படிப் பிரிச்சிருக்காங்க, நாம அதை எப்படிப் பார்க்கணும்னு சொல்றேன். இன்னொரு உண்மையைச் சொல்லணும்னா, நம்ம மனசுல இந்தியாவைப் பத்தி இருக்குற அபிப்ராயம் உண்மையில் ஐரோப்பாக்காரங்களால். . .
COMMENT(S): 1
ம்! நல்ல முன்னுரை