• தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம்
  • நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்
  • தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன்
  • திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
  • நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள்
  • ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
  • மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார்
  • பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு
  • சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல்
  • கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை
  • இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே
  • தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
24 May, 2013
"மனிதப் பூச்சிகள் பூமியைத் தின்றுவிடக்கூடாது!"
"மனிதப் பூச்சிகள் பூமியைத் தின்றுவிடக்கூடாது!" ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து உலகம் முழுக்கத் தமிழர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் 'மூன்றாம் உலகப் போர்’ நூல் வெளியீட்டு விழா! கலைஞர் கருணாநிதி, ஜெயகாந்தன், கமல்ஹாசன் - இந்த முப்பெரும் நாயகர்கள்தான் விழா நாயகர்கள். விழா தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரே காமராஜர் அரங்கம் நிரம்பி வழியத் தொடங்கியது. விழா நாயகர்களுக்கு இயற்கை உரத்தில் விளைந்த ரோஜாச் செடிகள் வழங்கும் நிகழ்ச்சியோடு விழா தொடங்கியது. 'ஒவ்வொருவருக்குப் பிரத்யேக நிறத்தில் ரோஜாச் செடி’ என்ற அறிவிப்புக்குப் பிறகு கருணாநிதிக்கு மஞ்சள் ரோஜாச் செடி வழங்கப்பட்டது. 'பல காலம் சண்டை போட்டு இப்போது சமாதானக் கொடி பிடித்து இருப்பதால் ஜெயகாந்தனுக்கு வெள்ளை ரோஜா’ என்றது அறிவிப்பு. 'கலைஞானி கமல்ஹாசனுக்கு எந்த ரோஜா செடி வழங்க வேண்டும்?’ என்ற கேள்வி பார்வையாளர்களிடம் ஆரவாரத்தைத் தூண்ட, சிவப்பு ரோஜாக்கள் செடியைப் பெற்றுக்கொண்டார் கமல். 'மூன்றாம் உலகப். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 9

வைரமுத்துவின் தலையெழுத்து அவரது புத்தகத்தை கருணாநிதி வெளியிட்டுருக்கிறார். இயற்க்கையை மனிதன் கெடுப்பதில் இந்த அரசியல்வாதிகளின் பங்கு மிக அதிகம். புவி வெப்பமயமாவதை தடுக்கப் போடும் சட்டத்தை இவர்களே மதிப்பதில்லை. ஒரு கருணாநிதி ரோட்டில் சென்றால் 100 கைத்தடிகள் 100 கார்களில் அணிவகுப்பார்கள். எங்கே கருணாநிதியை நிறுத்த சொல்லுங்கள் பார்க்கலாம். அனைவருக்கும் இந்த வெட்டி பந்தாவை கற்றுக்கொடுத்ததே இவர் தான்.

எங்களைப்போன்ற ஆசிரியர்கள் இருபது வருடங்களாக காட்டுக் கத்தலாய் கத்திக்கொண்டுதான் இருக்கிறோம் எரிபொருள் சேமிப்பது பற்றியும் புவி வெப்பமயமாதல் பற்றியும். ஆனால் மனித குலமே பொறுப்பற்றுதான் நடந்து கொள்கிறது. வைரமுத்து அழகிய தமிழில் அலங்காரம் செய்து எழுதி இருப்பதை என்றோ அல் கோர் (Al Gore)
எழுதி விட்டார். தேடிப்படிக்கவும்.

கூண்டு நேரடியா கால்லீரல்லயா இறங்குச்சு? அதைக் கல்லாக்கிக் கொண்ட பின் இரும்புக் கூண்டு பொடிப் பொடியா சிதறுச்சு என்று ஒரேயடியாக அடிச்சு விட வேண்டியதுதானே டைமண்டு சார்?

சிறந்த மொழி விற்பன்னர்........

தமிழை வச்சு நல்ல அறுவடைப்பா!

கடவுளின் கையெனில் விசத்தையும் அருந்தலாம். சாத்தானின் கையெனில் அமுதத்தையும் அருந்தமுடியாது. உங்களின் படைப்பு அமுதமெனினும் அர்த்தமிழக்கிறது வழங்கிய கைகளினால். பாடப்புத்தகத்தில் சுயதுதியும், கவிதாயினி கவியின் படைப்புகளும் இடம் பெற்றபோது எங்கு சென்றீர் கவிஞரே? ஆன்மாவிலிருந்து வருவது படைப்பு இசைபோல. உமது வரிகள் அகங்காரத்தின் பிரதிகள் அதனால்தான் அழ்காக படைக்கப்படுகின்றன. தூய்மையில்லா மனம் உமக்கு அதனால்தான் துதிபாட விழைகிறது.

ஒருவர் பேச்சு திறமை, ஒருவர் கவி எழதும் திறமை , ஒருவர் நடிப்பு திறமை , மூவர்க்கும் உள்ள ஒட்ற்றுமை தமிழனை எப்படி ஏமாற்றுவது என்று .

இதற்க்கு ஏன் பாராட்டுக்கள் வரவில்லை.. அட்லீஸ்ட் திட்டியாவது கூட வரவில்லையென்று நாலாம் உலகப்போர் வந்து விடக்கூடாது!

"....ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடப் புத்தகங்களிலேயே புவி வெப்பமயமாதல் பற்றிய பாடத்தை வையுங்கள்''. நல்லதுதான்... அதே மாதிரி "தீண்டாமை பாவம்" என்று கூட அச்சிடிகிறார்கள்தான். ஆனால், அதை படிக்கிற மாணவர்களே பின்னாளில் சாதி வெறியை வளர்த்தெடுக்கிறார்களே...என்ன செய்யலாம் ?

Displaying 1 - 9 of 9
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 25 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook