ஸ்டூடன்ட் போலீஸ்! ஸ்டூடன்ட் போலீஸ்... வாவ்! போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, வனப் பாதுகாப்பு, விழாக் காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு என அத்தனை பணிகளையும் காக்கி உடுப்பு அணிந்து பள்ளி மாணவர்களே மேற்கொள்கிறார்கள். அதுவும் ஒரு ரூபாய்கூடச் சம்பளம் பெற்றுக்கொள்ளாமல். இந்தியாவைப் புருவம் உயர்த்தவைத்திருக்கும் இந்தக் காவல் படை... 'ஸ்டூடன்ட் போலீஸ் கேடட் ஆஃப் கேரளா’. பள்ளி மாணவர்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட காவல் படை அணி... சுருக்கமாக எஸ்.பி.சி. இந்தத் திட்டத்துக்கு இது மூன்றாவது ஆண்டு. அந்தச் 'சுட்டி குட்டி’ போலீஸாரின் நடவடிக்கைகளை நேரில் கண்டு வந்தேன். கொச்சின் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் மைதானத்தில் காலை 7 மணிக்கு மஃப்டியில் வந்து இறங்குகிறார்கள் இந்த ஜூனியர் போலீஸார். 10-வது நிமிடத்தில் விசில் சத்தம்... காக்கிச் சீருடை, பெல்ட், தொப்பி, தோள்பட்டைகளில் எஸ்.பி.சி. பேட்ஜ் அணிந்து மைதானத்தில் கம்பீரமாக அணிவகுக்கிறார்கள். 'நேராக நில்... நிமிர்ந்து நில்’ என உரக்கச் சொல்லி அவர்களுக்கு டிரில் பயிற்சி கொடுக்கிறார். . .
அதெல்லாம் ஒரு திட்டத்தையும் தத்தெடுக்கவேண்டிய அவசியமில்லை.
ஏற்கனவே இருக்கும் என்.சி.சி, என்.எஸ்,எஸ் மற்றும், சாரணர் படை இவற்றில் ஏதாவது ஒன்றில் ஒவ்வொரு மாணவரும் (8 முதல் 12ம் வகுப்பு வரை) இருபது கட்டாயம் என்பதை உறுதிப் படுத்தி, இவர்கள் மூலம் பல்வேறு சமூக செயல்களை நிறைவேற்றலாம். இதைச் செய்தாலே போதுமானது. இதன்மூலம் எதிர்கால சந்ததியினரிடம் சமூக ஆர்வமும் ஏற்படுத்த இயலும். நான் 8-ம் வகுப்பிலிருந்து கல்லூரி இறுதி ஆண்டு வரை தொடர்ந்து தேசிய மாணவர் படையில் இருந்திருக்கிறேன். இக்கால கட்டங்களில் கற்றுக் கொண்ட பல்வேறு ஒழுங்கு முறைகள் என்னுள் முற்றிலும் ஊறிப் போய்விட்டது.
சாராயக்கடை, பெரியவர்களை ஏளனம் செய்தல், பெண்களை கேவலப் படுத்துதல், ஊழல், இப்படி விஷயங்களை மட்டுமே தமிழன் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறான். மானமிழந்து மதியிழந்து வெந்தது தின்று விதியற்று மாளும் மாக்கள் நிறைந்த தமிழ்நாட்டில் இதெல்லாம் நடவாது
COMMENT(S): 15
நம்ம ஊர்ல, இருக்கிற போலீஸ் பண்ற அக்கிரமமே தாங்க முடியல...
கேரளா, கேரளா தான். அம்மா இந்த மாதிரி முயற்சி எடுப்பாங்களா!
அட அங்க போலிஸ் உயர் அதிகாரிகள் அவிங்க ஊர்காரர்கள் தானா?
சினிமா கதைய தான் தத்தெடுக்கிறோம்...அரசு நிர்வாகத்தையுமா?
நல்ல விஷயம்.. இது தமிழ்நாட்டிற்கும் வந்தால் இன்னும் நல்லா இருக்கும்.
Well done
இந்தத் திட்டத்தைத் தத்தெடுக்கனும்னா, எவ்வளவு கமிஷன் கிடைக்கும்னு சொல்லுங்க....
அதெல்லாம் ஒரு திட்டத்தையும் தத்தெடுக்கவேண்டிய அவசியமில்லை.
ஏற்கனவே இருக்கும் என்.சி.சி, என்.எஸ்,எஸ் மற்றும், சாரணர் படை இவற்றில் ஏதாவது ஒன்றில் ஒவ்வொரு மாணவரும் (8 முதல் 12ம் வகுப்பு வரை) இருபது கட்டாயம் என்பதை உறுதிப் படுத்தி, இவர்கள் மூலம் பல்வேறு சமூக செயல்களை நிறைவேற்றலாம். இதைச் செய்தாலே போதுமானது. இதன்மூலம் எதிர்கால சந்ததியினரிடம் சமூக ஆர்வமும் ஏற்படுத்த இயலும். நான் 8-ம் வகுப்பிலிருந்து கல்லூரி இறுதி ஆண்டு வரை தொடர்ந்து தேசிய மாணவர் படையில் இருந்திருக்கிறேன். இக்கால கட்டங்களில் கற்றுக் கொண்ட பல்வேறு ஒழுங்கு முறைகள் என்னுள் முற்றிலும் ஊறிப் போய்விட்டது.
அரசு இலவசமா கொடுத்தா வங்கிக்குவம். நாங்க எதையும் இலவசமா அரசுக்கு தர மாட்டோம்!
சாராயக்கடை, பெரியவர்களை ஏளனம் செய்தல், பெண்களை கேவலப் படுத்துதல், ஊழல், இப்படி விஷயங்களை மட்டுமே தமிழன் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறான். மானமிழந்து மதியிழந்து வெந்தது தின்று விதியற்று மாளும் மாக்கள் நிறைந்த தமிழ்நாட்டில் இதெல்லாம் நடவாது
நல்ல வழி - தமிழகத்திலும் வந்தால் மகிழ்ச்ச்ஷியாக இருக்கும்
tamil nasttukku idhu ippo kandippaga thevai...seekiram amal paduthungal...