சொல்வனம்நான் உடைத்த செல்போன்கள் கோபத்தில் செல்போன் உடைப்பது என் பழக்கமாகிவருகிறது ஐந்து முறை செல்போன்களையும் நான்கு முறை உடைக்கக் கூடாது என்கிற சபதங்களையும் அதற்குப் பலியாக்கியிருக்கிறேன் யாரிடமும் தீர்க்க முடியாத ஆற்றாமைக்கு எளிதில் கையில் கிடைக்கும் பொருள் செல்போன்தான் கோபத்தில் மற்றவர்களைத் தாக்குவது கொலை. செல்போனை உடைப்பது தற்கொலை ரத்தச் சேதமின்றி என் உறுப்புகளில் ஒன்றை அறுத்தெறிந்து சினம் ஆற்றிக்கொள்வதற்கு ஒப்பானது அது கோபத்தின் வலியையும் அதற்கான விலையையும் உடைந்து சிதறுகிற அதன் பாகங்கள் உணர்த்திவிடக்கூடும் உடையும்போது எழும் சத்தம் அதிலிருக்கும் எண்களுக்குரிய அனைத்து நபர்களின் ஒருமித்த அலறல்போல காதுகொள்ளாமல் ஒலிக்கக்கூடும் உடைந்த பின் உறையும் நிசப்தம் அத்தனை நபர்களின் ஒட்டுமொத்த மௌனத்தின் அழுத்தத்தையும் நிரப்பக்கூடும் அப்போது அழைக்க நேர்பவர்கள் என்னைத் தொடர்புகொள்ள முடியாதபோது நான் மரித்துவிட்டதைப் போல உணரும் ஒரு வெறுமை என்னையே தியாகம் செய்து கோபம் போக்கிக்கொண்டதாய் சற்று மனதை ஆற்றவும்கூடும் ஆயினும் பிரியமானவர்களின் எண்களும் குறுஞ்செய்திகளும் செல்லோடு. . .
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கோபத்தைக் காட்டுகிறார்கள். என் பெரியப்பா ஒருவர், எப்பொழுதும் எதற்கெடுத்தாலும் கத்திக் கொண்டே இருப்பார். அவர் கோபமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர் அருகில் போகவே மாட்டேன். [ஆனால், அதுதான் நார்மலாம்.] ஒரு தடவை, மிக அமைதியாக இருக்கவே, அவரிடம் போய் ஏதோ அசட்டுத்தனமாகக் கேட்டேன். முறைத்துப் பார்த்து விட்டு எழுந்து போய் விட்டார். கோபத்தில் பேசவே மாட்டாராம். அன்று முழுவதும் எல்லோரும் இதைச் சொல்லி சிரித்தே வெறுப்பேற்றினார்கள்!
COMMENT(S): 7
எது எங்கே கவிதை?
தயவுசெய்து கவிதை என்ற பெயரில் வரும் வாசகங்களைத்தவிருங்கள்.
இந்த வாரம் கவிதைகள்.....மன்னிச்சுடுங்க ரசிக்க முடியவில்லை....
உடைந்த உடைத்த செல்போன் உணர்த்துமுண்மைகள் உண்மையானவை. கோவத்தை என்மேல் காட்டேதே என்று.
கட்டுரைகள் கவிதையாகாது
வாயில் போடும் எல்லாம் உணவாகாது.
இதில் எதுவுமே கவிதையில்லை
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கோபத்தைக் காட்டுகிறார்கள். என் பெரியப்பா ஒருவர், எப்பொழுதும் எதற்கெடுத்தாலும் கத்திக் கொண்டே இருப்பார். அவர் கோபமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர் அருகில் போகவே மாட்டேன். [ஆனால், அதுதான் நார்மலாம்.] ஒரு தடவை, மிக அமைதியாக இருக்கவே, அவரிடம் போய் ஏதோ அசட்டுத்தனமாகக் கேட்டேன். முறைத்துப் பார்த்து விட்டு எழுந்து போய் விட்டார். கோபத்தில் பேசவே மாட்டாராம். அன்று முழுவதும் எல்லோரும் இதைச் சொல்லி சிரித்தே வெறுப்பேற்றினார்கள்!
முதலிரண்டு கவிதைகளும் அருமை!