தலையங்கம் - அமளியே போ... அமைதியே வா! 60 ஆண்டுகளை நிறைவுசெய்யும் இந்திய நாடாளுமன்றத்தில் அமைதி இல்லாமல் போய்விட்டதே என்று ஆதங்கப்பட்டு இருக்கிறார்கள் பிரதமரும் மூத்த உறுப்பினர்களும். அவையின் கண்ணியத்தையும் புனிதத் தன்மையையும் கட்டிக்காத்து, இந்த தேசத்து மக்களுக்கு மேலும் சீரிய சேவை ஆற்றுவதாக உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! அவை நடவடிக்கைகள் பல சமயங்களில் அமளியில் முடிவதும் தகிக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வே இல்லாமல் அவையை முடக்க நேர்வதும் எத்தனை பெரிய சாபம்? அதேசமயம், நியாயமான குற்றச்சாட்டுகளை அவைக்குள் எழுப்ப எதிர்க் கட்சிகளுக்கு உரிய வாய்ப்பு தராமல் வாயடைப்பு செய்வதால்தானே பெரும்பாலும் அமளிகள் அரங்கேறுகின்றன? அலைக்கற்றை முறைகேடு போன்ற தலை போகிற பல பிரச்னைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்பவிடாமல், எதிர்க் கட்சிகளைத் தடுப்பதற்கு ஆளும் கட்சி மேற்கொண்ட பகீரத முயற்சிகளையும் அதையும் மீறி அந்தப் பிரச்னைகளை அம்பலத்துக்குக் கொண்டுவருவதற்கு எதிர்க் கட்சிகள் அரங்கேற்றிய 'அமளி துமளி'களையும் நாம் அறிவோம். ஆக,. . .
பாரளுமன்றம் நடந்தால் என்ன?னடக்காவிட்டால் என்ன?ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை.இப்போது என்ன அரசாங்கமா நடக்கிறது?லஷம் கோடி கொள்ளையடித்தவர்கள் சர்வசாதாரணமாக ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்கள்.எங்கும் ஊழல்,எதிலும் ஊழல்.சமீபத்தில் தங்கநகைக்கடைக்காரர்களது கதவடைப்பு போராட்டம் நடந்தது.எப்படி முடிந்தது?ஆயிரம் கோடி ரூபாய் கைமாறியதாய் பரவலாய் பேசப்படுகிறது.எதற்கும் ஒரு விலை என்றால்,இனி போராட்டமே தேவையில்லை.
ஆளும் கட்சியின் சாமர்த்தியமான சர்வாதிகார ஜனநாயகம்தானே?....ஆமாம் அதனால்தான் வேறு ஒருவர் பிரதமராக இருக்க,இத்தாலி அதிகாராம் செய்ய முடிகிறது,இது புதுமையான ஜனநாயகம்தானே.......
இப்போதெல்லாம் கொஞ்சமாய் கொள்ளையடிப்பவனெல்லாம் சிறையில் இருக்கிறான்,கோடி கோடியாய் கொள்ளையடிப்பவன் பாராளுமன்றத்தில் இருக்கிறான்.அதுதான் இன்றைய ஜனநாயகம்.எடையும் பணம் கொடுத்து வாங்கலாம் என்ற நிலையில் நாடு இருக்கும் போது,தேர்தல் எதற்கு?பாராளுமன்றம் எதற்கு?ஒரு கஸாப்பை,ஒரு அப்ஸலை தூக்கில் போடத்திராணியற்ற முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகளால் நடத்தப்ப்படும் பாராளுமன்றம் உண்மையில் இந்த நாட்டிற்குப் பெருமையில்லை.இன்று பாராளுமன்றம் என்பது கூடிகலைந்து செல்லும் பொழுது போக்கு மையம் ஆகிவிட்டது.இதைத்தவிற உருப்படியாய் எதுவும் நடக்கவில்லை.
அறுபது வருடங்களில் வருடத்துக்கு ஒன்றாக மார்க்குகளை இழந்து இப்போது 40 மார்க் வாங்கும் பாராளுமன்றம் இனி ஐந்து வருடங்களில் ஃபெயில் ஆகிவிடும். பிறகு மக்கள் புரட்சி தவிர்க்க இயலாது.
சங்கரன் குட்டிக்கு மக்கள் இல்லாத போது, பலாக்கொட்டையைத் தத்தெடுத்தான்;சங்கரன் குட்டிக்கு மக்கள் உண்டான போது பலாக்கொட்டையைச் சுட்டுத் தின்றான்...பொழிப்புரை இது!பழமொழி இது.."சங்கரன் குட்டிக்கு மக்கள் இல்லாப் போழ் சக்கைக் குருவைத் தத்தெடுத்து...சங்கரன் குட்டிக்கு மக்கள் உண்டாயப் போழ் சக்கைக் குருவினைச் சுட்டுத் திந்நு"-ஆளுங்கட்சியின் அதிகாரப் போக்கு இப்படி...
தொலைக்காட்சியில் பார்க்கும் போது எத்தனை உறுப்பினர்கள் சீட் காலியாக அவர்களின் ஆஜரின்மையால் இருக்கின்றன என்பது மனதைப் பிசைகிறது.அமளி துமளிகள் சகஜம் ஆனால் ஆஜர் இன்மை கொடிது.
COMMENT(S): 12
திட்டம் போடவும், சட்டம் போடவும்
இவஙகள அனுப்பினா,
இவங்க சத்தம் மட்டுமே போடுறாங்க
அமளி ஒரு பக்கம் இருந்தாலும் சிலதுகள் தூங்கிக்கொண்டு இருப்பதை கவனித்து இருக்கிறீர்களா?
பாரளுமன்றம் நடந்தால் என்ன?னடக்காவிட்டால் என்ன?ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை.இப்போது என்ன அரசாங்கமா நடக்கிறது?லஷம் கோடி கொள்ளையடித்தவர்கள் சர்வசாதாரணமாக ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்கள்.எங்கும் ஊழல்,எதிலும் ஊழல்.சமீபத்தில் தங்கநகைக்கடைக்காரர்களது கதவடைப்பு போராட்டம் நடந்தது.எப்படி முடிந்தது?ஆயிரம் கோடி ரூபாய் கைமாறியதாய் பரவலாய் பேசப்படுகிறது.எதற்கும் ஒரு விலை என்றால்,இனி போராட்டமே தேவையில்லை.
ஆளும் கட்சியின் சாமர்த்தியமான சர்வாதிகார ஜனநாயகம்தானே?....ஆமாம் அதனால்தான் வேறு ஒருவர் பிரதமராக இருக்க,இத்தாலி அதிகாராம் செய்ய முடிகிறது,இது புதுமையான ஜனநாயகம்தானே.......
ஒரு சிலரை தவிர,நாடாளுமன்றத்திற்கு தகுதி இல்லாதவர்களைத்தானே அனுப்புகிறோம்,அவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்....
இப்போதெல்லாம் கொஞ்சமாய் கொள்ளையடிப்பவனெல்லாம் சிறையில் இருக்கிறான்,கோடி கோடியாய் கொள்ளையடிப்பவன் பாராளுமன்றத்தில் இருக்கிறான்.அதுதான் இன்றைய ஜனநாயகம்.எடையும் பணம் கொடுத்து வாங்கலாம் என்ற நிலையில் நாடு இருக்கும் போது,தேர்தல் எதற்கு?பாராளுமன்றம் எதற்கு?ஒரு கஸாப்பை,ஒரு அப்ஸலை தூக்கில் போடத்திராணியற்ற முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகளால் நடத்தப்ப்படும் பாராளுமன்றம் உண்மையில் இந்த நாட்டிற்குப் பெருமையில்லை.இன்று பாராளுமன்றம் என்பது கூடிகலைந்து செல்லும் பொழுது போக்கு மையம் ஆகிவிட்டது.இதைத்தவிற உருப்படியாய் எதுவும் நடக்கவில்லை.
யாரும் மாறப் போவதில்லை
அறுபது வருடங்களில் வருடத்துக்கு ஒன்றாக மார்க்குகளை இழந்து இப்போது 40 மார்க் வாங்கும் பாராளுமன்றம் இனி ஐந்து வருடங்களில் ஃபெயில் ஆகிவிடும். பிறகு மக்கள் புரட்சி தவிர்க்க இயலாது.
ஸ்டானிஸ்லாஸ், மிகச்சரி. தற்போது அதே பழமொழி: எஸ்டேட்டில் வேலை வாங்க தமிழனை தத்தெடுத்து, பின் அந்த வேலை முடிந்ததும், எட்டி உதை.