• காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
  • பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
  • குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல்
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து
  • என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
  • மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
  • வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
24 May, 2013
அம்மா ஸ்கூல்... ஆள் பாஸா?
அம்மா ஸ்கூல்... ஆள் பாஸா? அனைத்து அமைச்சர்களும் தமிழக முதல்வருக்குப் பயப்படுகிறார்கள். ஆனால், பயன்படுகிறார்களா?  இந்தக் கேள்விக்கு ஜெயலலிதாவே நெடுநேரம் யோசித்துத்தான் பதில் சொல்ல முடியும். அந்த அளவுக்கு இப்போதைய மந்திரிகள் மர்மமாக இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு 15 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் தத்தமது துறையைப் பற்றி அரைகுறையாகத் தெரிந்து வைத்திருப்பவர்கள்தான் நிறைய. 'ஏதாச்சும் கேட்டா பிரச்னை ஆகிடுமோ’ என்ற பயம் பாதி. 'அதெல்லாம் அம்மா பார்த்துப்பாங்க’ என்ற அலட்சியம் மீதி. எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாகப் பல அமைச்சர்கள் இருப்பது இந்த அமைச்சரவையின் பிரத்யேகக் குணம்போல. ஆனால், வெள்ளாவியில் வைத்து வெளுத்த ஆடைகளுடன் பளிச்சென உலாவுகிறார்கள். கார்களில் படாடோபமாக வலம் வருகிறார்கள். லோக்கல் பந்தா காட்டுகிறார்கள். சக கட்சிக்காரர்களை உதாசீனம் செய்வ தில் போட்டி போடுகிறார்கள். கோஷ்டி சேர்ப்பதில் அலாதி ஆர்வம் இருக்கிறது. இவை அனைத்தும் அவர்களைக் கட்சியில் வளர்த்துக்கொள்ளும் வழியாக இருக்கலாம்.. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 86

ஜூ வி. எஃப்.பீ.ஐ. அளவுக்கு கொளுட்டிப்போட்டு விட்டது. அம்மா பாப்பாங்களோ?

1.ஆறாம் வகுப்பு ஃபெயில். ஆனால், பி.ஏ. பாஸ் செய்ததாகத் தகவல் தந்தார்.
~ஆஹா! ஓஹோ! பேஷ்! உருப்பட்டப்லத்தான்!

maana rosham eduvumey illaya ungalukku ellam...

அது சரி இந்த செக்கூரிட்டி ஆட்கள் துப்பாக்கியை தூக்கி இருப்பவர்கள் இந்த மந்திரிகளை பற்றி என நினைப்பார்கள் ?.

அம்மா ஸ்கூல் ஒருவராவது பாஸா எனக் கேட்டிருக்க வேண்டும். அம்மாவே மைனசில் மார்க் வாங்கும்போது பிறரை என்ன சொல்வது?.

ஆம்மா. ஆம்மா தான்

அம்மா என்றால் பஞ்சம், ஆட்சிக்கு வந்தாலே மழை பொழிவதில்லை, காவிரியிலும் தண்ணீர் வருவதில்லை ... ஏதாவது ஒரு வருடத்தில் மழை பொழிந்து விவசாயம் நடந்தாலும் கதிர் அறுக்கும் முன் புயல் வந்து எல்லாத்தையும் அழித்துவிடும், மொத்தத்தில் அம்மா? என்றால் தமிழக மக்களுக்கு கஷ்டம் தான்

கீழே உள்ள படத்தில் அமைச்சர் வாய்பொத்தி நிற்பது அம்மாவின் நிழலைப்பார்த்தா அல்லது அவரின் கொண்டையைப்பார்த்தா?...
ம்ம்ம்... என்னவோ போங்க, அம்மாவுக்குத்தெரியாத விவரமா?... அதிகாரிகள் எப்பொழுதுமே, ஆட்சிக்குத்தகுந்தமாதிரி விசுவாசமாக இருப்பார்கள்... ஆனால் இந்த அரசியல்வாதிகள் (மந்திரிகள்) அப்படியா?... அவரை எதிர்த்து போட்டியிட்டாலும் இடுவார்கள்... அதனால்தான் இப்படி முன் ஜாக்கிரதையாக அடிமாடுகளை வைத்து மேய்த்துக்கொண்டிருக்கிறார்...

ஆனால், வெள்ளாவியில் வைத்து வெளுத்த ஆடைகளுடன் பளிச்சென உலாவுகிறார்கள்.

அடேயப்பா...இதையாவது பயம் இல்லாமல் செய்கிறார்களே!

23ஆம் புலிகேசிகூட நல்லா ஆட்சி செய்வான்!

மந்திரிப்பதவிக்கு இதில் யாராவது ஒருவராவது தகுதி உடையவரா என்று பார்த்தால்...............

கேவலம் !!!!

(முருகன்)

"எந்த ஃபைல் வந்தாலும் 'முதல்வர் அவர்களின் பரிசீலனைக்கு...’ என்று எழுதிக் கையெழுத்து போடுவது மட்டுமே பலரின் வேலை. "

நெசமாவா? மம்மிய கேட்டா, ஏன் என் கவனத்துக்கு கொண்டுவரலைன்னு கோபப்படுவதால செய்தி வருது. அப்ப ஒருத்தனும் உருப்படியா எந்த வேலையும் செய்யுறது இல்லைன்னு சொல்லுங்க.

JJ should introspect and read this article with all sincerity and honestly The day is not far off or MP election.JJ should also instil confidence on ministers and have a check on PAs.

ஒன்றே சொன்னாலும், நன்றே சொன்னீர்கள்...

"ஒவ்வொருவரையும் தனித்துச் செயல்பட அவர் அனுமதித்திருக்க வேண்டும்" என்று...

டெலிகேட், அதாரிட்டி, இன்டிமென்டட் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். நம்மவர்களுக்கு இதெல்லாம் கொடுத்தால் எல்லா நிலைகளுக்கும் செல்வார்கள். அப்புறம் திமுகவின் நிலைதான், தடியெடுத்தவன் எல்லம் தண்டல்காரன்.அப்புறம் குறுனில மன்னர்களின் தொல்லைகள் எல்லா மீறும். அதிமுகவிற்கு இந்த பார்முலாதான் சரி. அதிகாரிகள் எல்லை மீறினாலும் விதிமுறைகள் என்று உண்டு. அதிகாரிகள் ஒய்வுக்காலம் வரை கறும்புள்ளி இல்லாமல் வண்டியை ஓட்டவே பிரியப்படுவார்கள். அம்மா அப்ப,அப்ப அவங்களுக்கும் ஷாக் கொடுக்கும் வைத்தியம் செய்கிறார்கள். இந்த பயத்திலேயே உருட்டி, மிரட்டி வேலை,வேலை வாங்கிவிடலாம். ஜுவியின் ஆக்சன் செல் இருக்கவே இருக்கு, எதுன்னாலும் உங்ககிட்ட ஓதிடலாம். எனக்கு அதிமுகவின் அமைச்சர்கள் செய்ல்பாடு இப்படியே இருந்தாலே, இத்தனை ஆணி புடுங்கினாலே போதும்.

தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆறாம் வகுப்பு ஃபெயில், நம்ம தலையெழுத்த ஆண்டவனாலும் மாத்த முடியாது.

அம்மா ஸ்கூல்ல, வினாதாளோடு விடைத்தாளையும் சேர்த்து கொடுத்தால்கூட மாணாக்கர்கள் (அமைச்சர்கள்) பாசாக மாட்டார்கள். அவ்ளோ பிரைட்டு.

அந்த மரியாதை படத்தை போட்டுவிட்டு இவர்களை தனித்தன்மையுடன் செயல்பட அனுமதித்தால் என்று எழுதி என்ன பயன். இந்த மாதிரி மரியாதை காட்சி உலகத்தில் வேறு எங்காவது நட்க்குமா? தமிழகம் மாறுவது எப்போது?

அம்மா ஸ்கூல் ஒருவராவது பாஸா எனக் கேட்டிருக்க வேண்டும். அம்மாவே மைனசில் மார்க் வாங்கும்போது பிறரை என்ன சொல்வது?.

ஜெ..சசியிடம்...எமக்கு வாய்த்த அடிமைகள் செம தூள்...என்ன கைதான் அதிகமாக ,நம்மைவிட நீள்கிறது...ம்ம்ம்ம்...அமாவாசைக்கு கவனிச்சுட வேண்டியதுதான்.....

இந்த அடிமைகள் கோட்டையில் தினமும் வரிசையாக நின்று வணக்கம் வைப்பதை இந்தியா முழுவதும் உள்ளவர்கள் சிரிப்பது பத்தாது என்று இப்ப உலகம் முழுவதும் சிரிக்க வைத்து விட்டீர்கள் ஜூ.வி யாரே.

இவர்களுக்கு கொடுத்த ஒரேவேலை கோட்டையிலும், அதிமுக தலைமைச் செயலகத்திலும் தான் செல்லும் போது முதுகை வளைத்து கூழை கும்பிடு போடும் வேலைதான், அதனால் தான் தோட்டக்காரன் வேலை மட்டும் பார்க்கிறார்கள், மந்திரி வேலை பார்ப்பது இல்லை, தெரிந்தால் தானே பார்ப்பதற்கு

தங்கமணி பார்வையாளரா....அதனால் என்னா,,, நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஜால்ரா கோஷ்டியை பொருப்பாளரா போட்டு கம்பெனி நடத்துரார்,,,நல்லத்தான போய்கிட்டு இருக்கு...

Luckily, this article is published in Tamil only, none other than we proud tamils will read it.

fiveyears punishment for the people who voted for them

   Displaying 1 - 25 of 80
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 22 Aug, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook