• ராஜ்ய சபா தேர்தல்; ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி - தடதடக்கும் எஸ்.எம்.எஸ். பிரசாரம்
  • அத்வானியுடன் மோடி திடீர் சந்திப்பு
  • முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக கோரி பீகாரில் முழு அடைப்புஆண் - பெண் பாலியல் உறவே சட்டப்பூர்வ திருமணம்: முஸ்லிம் பெண் வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
  • அத்வானிக்கு முக்கியவத்தும் வழங்கினால் கூட்டணி: சொல்கிறார் சரத் யாதவ்
  • உத்தரகாண்ட்டில் தொடர் மழை: பத்ரிநாத் சென்ற சென்னை யாத்ரீகர்கள் 52 பேர் தவிப்பு
18 June, 2013
ஸ்டாலினுக்கு 'தலைவர்' சிக்னல்... அழகிரி விலகுகிறார்?
ஸ்டாலினுக்கு 'தலைவர்' சிக்னல்... அழகிரி விலகுகிறார்? இரண்டு வாரங்களுக்கு முன்னால் சென்னை அம்பத்தூரில் ஒரு கூட்டம் பேசினார் கருணாநிதி. மிக நீண்ட காலத்துக்குப் பிறகு அந்தப் பகுதிக்கு அவர் வருகிறார் என்பதால், கூட்டமும் அலைமோதியது. டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கும் அந்தப் பொதுக் கூட்டத்தில், ஈழத்துப் போராளி அமைப்புகளுக்குள் நடந்த 'சகோதரச் சண்டை’குறித்துப் பேசிய கருணாநிதி, ''இந்த சகோதரச் சண்டைதான் ஈழப் பிரச்னையின் பின்னடைவுக்குக் காரணம்'' என்று சொன்னார். கூட்டம் முடித்துவிட்டு கருணாநிதி வந்த பிறகு, ''அதைப் பத்திப் பேசினால்தான், ஈழ ஆதரவுத் தலைவர்கள் உங்களை விமர்சிக்கிறாங்களே தலைவரே... பிறகு ஏன் அதையே பேசுறீங்க?'' என்று ஒருவர் கேட்டாராம். ''இங்க நடக்கிற சகோதரச் சண்டையைத் தாங்கிக்க முடியாமல்தான் இப்படிப் பேசினேன்'' என்றாராம் கருணாநிதி. இப்படிச் சிலருக்கு மறைமுகமாகத் தகவல் சொல்ல வேண்டிய நிலைமையில் தான் இப்போது கருணாநிதி இருக்கிறார்.  ஆட்சியைப் பறிகொடுத்ததுகூட கருணாநிதிக்கு அதிகக் கவலை ஏற்படுத்தவில்லை. ஆனால், குடும்பத்துக்குள் ஸ்டாலின். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 55

ஸ்டாலின், அழகிரி ஒன்று சேர நினைத்தாலும் விகடனார் சிண்டு முடிந்துவிட்டு பிரித்து விடுவார் போல இருக்கே?

அரசியல் சூழ்ச்சியால், மு.க தலைவரானார், கட்சியை வளர்த்தார்.அதைவிட அதிகமாக குடும்பத்தை வளர்த்தார். அவரது சூழ்ச்சியின் எதிர்வினை இப்பொழுது அவரது குடும்பத்திக்குள்ளேயே கும்மியடிக்கிறது. "வினை விதைத்தவன் வினை அறுப்பான்"

அவர்கள் தலையில் அவர்கள் மண் அள்ளிப் போட்டுக் கொண்டு அழியும் காலம் வந்து விட்டதோ?

சத்தியமேவ ஜயதே

இளைஞர் அணித்தலைவரின் வயசு 61, தமிழ் நாடு முன்னேறிருச்சுங்கோவ்!

"தேர்தலுக்கு முன்பாக ஸ்டாலினுக்கு மகுடம் சூட்டப்படலாம். அப்படிச் செய்தால், அழகிரி எடுக்கப்போகும் ராஜினாமா அஸ்திரம் வலுவானதாக அமையுமா என்பதே தி.மு.க-வின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் முக்கியமான விஷயம்."

-அப்படியெல்லாம் ஒன்னும் நடந்துடாது.. கருணா முரசொலி மாறன் ஸ்டைலில் மாநில மத்திய விவகாரங்க்ள் ஸ்டாலின் அழகிரி யால் பார்த்துகொள்ளப்படும். அடிமைகள் அடிமைகளாக அடுத்த தலமுறைக்கும் தொடர வேண்டியதுதான் வேர வழியே இல்ல....

அய்யா வைகோ அவர்களே, மாபி, உபி ல இருந்தாலும் இங்கேயும் ஒரு கண் வைங்க. பழம் நழுவுது பால் சோம்பை தயாரா வைங்க.

காலம் தாழ்த்தாமல், இப்பொழுதாவது ஒரு நல்ல முடிவை எடுத்து பங்காளி சண்டைகளை ஒரு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது தி.மு.க வின் வளர்ச்சிக்கு நல்ல அடையாளம். அதே வேளையில், பதவி ருசி கண்ட அழகிரி சும்மா இருக்கமாட்டாரே?

பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு.எப்படா ஒருத்தனை ஒருத்தன் காட்டி குடுப்பான்னு நான் ரொம்ப ஏங்குறேன். சீக்கிரம் ஆரம்பிங்கடா!!!

வைகோ அவர்களை திட்டம் போட்டு ஓரம் கட்டியதற்கான பலனை இந்தக் குடும்பம் கண்டிப்பாக அனுபவிக்கும்!!!!!

இங்கே நடக்கிற சகோதரச் சண்டையை தங்கிக்க முடியாமல் தான் இப்படிப் பேசினேன் -கருணாநிதி . அன்றைக்கு எம்.ஜி.ஆரை தடுக்க மு.க.முத்து,ஸ்டாலினுக்கு போட்டி கூடாது என்று
வைகோ மீது கொலைப்பழி சுமத்தி விரட்டியடிப்பு . வினை விதைத்தார் அறுவடை செய்கிறார் - "செய்த பாவம் தீருதடா சிவகுருநாதா"

ஸ்டாலின் : உன்னை ஒன்று கேட்பேன் (தலைவர் பதவி) உண்மை சொல்ல வேண்டும் ( எனக்கா ,அழகிரிக்கா)

இது சராசரி தமிழனின் மூளை வளர்ச்சியின்மையால் ஏற்படும் விளைவு. தமிழர்கள் ஒரு கேளிக்கை வந்தால் தங்கள் அத்தியாவசிய பிரச்சனைகளை மறந்துவிடுவர். இது ஆட்சியாளர்களுக்கு மிகவும் நல்லது. இதை எதிர்கட்சியினரும் அறிவர். ஒவ்வொரு பிரச்சினையும் மறுபடி நினைவுபடுத்த இங்கு போராட்டங்கள் தேவை. ஸ்டாலின் , அழகிரி "சன்டை' அந்த இருவரையும் வளர்க்கும். ஒரு நாள் ஸ்டாலின் முதல்வராகவும், அழகிரி எதிர்கட்சி தலைவராகவும் வந்தால், தமிழினம் தனது பையிலுள்ள பணம் கொள்ளைபோவது அறியாமல் இந்த தெருக்கூத்திற்கு கை தட்டும்.
சராசரி ஆப்பிர்க்க கறுப்பினருக்கும் இதே மூளை வளர்சிதான்.

தாத்தா அன்பழகன் கூட்டாலேயே அம்மாவை ஒன்றும் செய்ய முடியவில்லை.ஸ்டாலின் அழகிரி சேர்ந்தாலும் அம்மாவுக்கு எதிராக ஒன்றும் அரசியல் செய்ய முடியாது.

துண்டை மட்டும் உருவினால் பரவாஇல்லை.

திமுகவினர் விருப்பம் ஸ்டாலின். மதுரையில் அழகிரியின் பிடி தளர ஆரம்பித்துவிட்டது. மேலும் அழகிரியே மகன் கைது விவகாரத்தால் தளர்ந்திருக்கிறார். ஸ்டாலின் மகுடாபிஷேகத்திற்கு இதுவே சரியான தருணம். இதற்கு பலிக்கடாவாக அழகிரிக்கான அவமதிப்பு விவகாரங்கள். ஸ்டாலின் தலைவராவதை அழகிரியால் தடுக்கமுடியாது. அழகிரியின் எதிர்ப்பும் எடுபடாது. தொண்டர்கள் பலன் கிடைக்கும் இடத்தில்த்தான் இருப்பார்கள். ஆகவே அழகிரி மதுரையில் கட்சியின் பிடியை முழுமையாக இழந்து விடுவார். அழகிரி பல்பிடுங்கிய பாம்புதான். அமைச்சர் பதவியையும் இழக்க நேரிடலாம். அவர் மீது தேர்தல் வழக்கு. பையன் மீது கிரைனைட் வழக்கு. ஆக அழகிரிக்கு இது கெட்ட நேரம் போலவே தெரிகிறது. இப்போதைக்கு இணைந்து பணியாற்றி பொறுமை காப்பதுதான் அழகிரிக்கு நல்லது. கனிமொழிக்கு ஒரு குறிப்பிட்ட சாதியின் ஆதரவு பக்கபலம். கட்சியில் செல்வாக்கு குறைவு. அவரும் இப்போதைக்கு ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்றுவதுதான் அவருக்கு நல்லது. கருணாநிதியால் குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தவே முடியாது. அவர் ஸ்டாலின் பக்கம் நிற்பதே கட்சிக்கும்,குடும்பத்திற்கும், அவருக்கும் நல்லது.

பகுத்தறிவுவாதிக்கு ஏன் பரம்பரை ஆட்சியில் மோகம்? ஜன நாயகத்தில் நல்ல தன்னலமற்ற தலைவர்களுக்கு பஞ்சம்.

இந்த ரெண்டு முட்டையும் கூமுட்டை! ரெண்டுமே உதவாது. மூணாவது முட்டை ஏற்கனவே கெட்டுப்போனது. திமுக இனி "திரும்ப முன்னேறமுடியாத கழகம்"

பெரிசுக்கு இன்னும் நாற்காலிய விட மனசில்ல.

ஸ்டாலின் பொறுப்பேற்கும் காலம் வந்துவிட்டது என்று 2 நாட்களுக்கு முன் கூறியிருந்தேன், இபொழுது விகடனும் அதையே எழுதியுள்ளனர்

ஸ்டாலின் தலைவரானால் கட்சியில் நிச்சயம் ஒரு பிளவு இருக்கும். அதை அழகாக பயன்படுத்திக்கொள்ள வேண்டிய வைகோ சிலோன் பிரச்சினையை பிடித்து தொங்கி கொண்டு இருக்கிறார். திமுக அதாவது திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி குடும்ப கம்பெனி பிரைவேட் லிமிடெட் மூடு விழா நடத்தும் பாக்கியம் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போகிறது.

>>'தனக்குப் பிறகு எது வேண்டுமானாலும் நடக்கட்டும் என்று தலைவர் நினைக்கிறார்<< ஒரு சரியான தலைவர், தனக்கு பிறகு தன் அணிக்கு யார் சரியானவர் என்பதை அவரின் அனுபவத்தில் கண்டறிந்து அவரை அந்த அணிக்கு தலைமை ஏற்கும் பொறுப்பை கொடுக்க வேண்டும். அந்த அணியின் மற்றவர்கள் அதை முழு மனதோடு ஏற்க வேண்டும். இல்லை என்றால் தலைமையும், தொண்டர்களும் சரியில்லை என்பதே அர்த்தம். திமுகவின் காலம் நெருங்கி விட்டது. அதிமுகவின் அடுத்த தலைமை என்று வரும்போது அடுத்த கூத்து ஆரம்பிக்கும்.

மொத்தமா கட்சிய கலச்சுட்டு கிரானைட், 2ஜி பணத்த வெச்சு வெளினாட்டுல செட்டில் ஆயிடுங்கப்பு மொத்த குடும்பமும்!! தமிழ்னாடு பொழச்சுக்கும்.!!

தில்லானா மோஹனாம்பா படத்துலே சிவாஜி பின்னாலே ஈஷின்டுவருவாரே பாலைய்யா அதுபோல ஸ்டாலின் முகவோட வரச்ச எனக்கு தோன்ரும் , எப்படியோ தலைமக்கு வந்தாஆஆஆஆச்சு

அப்டீனா அன்பழகன்,தலைவர் ஆகமுடியாதா,ஆமாம் கழகம் அவங்க வீட்டு சொத்து,அதை பிரிச்சுக்கிறாங்க...ஆனாலும் இவர்களுக்கு வாய்த்த அடிமைகள் மிக...மிகக்க்க்க்க்க்க்க்க்க் பணிவானர்கள் .....

  Displaying 1 - 25 of 51
Only Subscriber Can Post Comments
ஆனந்த விகடன்
< 26 Sep, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook