இன்பாக்ஸ் சர்வதேச வில் வித்தை அரங்கில் இந்தியாவின் தங்க மங்கை ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நிஷா ராணி தத்தா. இவர் குடும்பத்தில் மிகவும் கஷ்டம். வறுமையின் கொடுமை தாங்காமல் தன்னிடம் இருக்கும் வில் வித்தை உபகரணங்களை விற்றுவிட்டார். செய்தி வெளியான பிறகு பரபரப்பாகி, அவருக்கு உதவிக் கரங்கள் நீள்கின்றன. அப்புறம் ஒலிம்பிக்ல என்ன கிடைக்கும்? அதிகம் சம்பாதிக்கும் கால்பந்து வீரர்கள் பட்டியலில் 213 கோடி டேவிட் பெக்காமைப் பின்னுக்குத் தள்ளி, 224 கோடியுடன் முதல் இடம் பிடித்து இருக்கிறார் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி. 198 கோடியுடன் மூன்றாவது இடம் ரெனால்டோவுக்கு. பார்சிலோனா அணிக்காக 314 போட்டிகளில் விளையாடி, 234 கோல்கள் அடித்து, அதிக கோல்கள் அடித்த வீரர் சாதனையையும் பாக்கெட் செய்திருக்கிறார் மெஸ்ஸி. இன்னும் உற்சாகமா உதைப்பார்! உலகக் காதலர்களுக்குத் தளம் அமைத்துக்கொடுத்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கின் காதல் எப்படி இருக்கும்? காதலி பிரிசில்லா சானுடன் பரபரப்பான சாலைகளில். . .
ஆமாம் இப்படிபட்ட அறிவாளிகள் எல்லாம் நமக்கெதுக்கு.......
வெளினாட்டுக்காரன் நல்ல சம்பளம் தரானா, தாராளமா போகட்டும்.... நம்ம தகுதிக்கு பத்தாவது பெயில் ஆன மந்திரிகளே போதும்....
COMMENT(S): 2
இதே கவாஸ்கர் பேட்டை விற்க வந்திருந்தா மில்லியன் டாலர் கொடுக்க போட்டி போடுவாங்க....
ஆமாம் இப்படிபட்ட அறிவாளிகள் எல்லாம் நமக்கெதுக்கு.......
வெளினாட்டுக்காரன் நல்ல சம்பளம் தரானா, தாராளமா போகட்டும்.... நம்ம தகுதிக்கு பத்தாவது பெயில் ஆன மந்திரிகளே போதும்....