WWW - வருங்காலத் தொழில்நுட்பம் ஒவ்வொரு வருடமும் 'ஐ/ஓ கான்ஃபரன்ஸ்’ என்ற பெயரில் மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கான மாநாடு ஒன்றை கூகுள் நடத்துகிறது. அதில் தாங்கள் செய்துகொண்டு இருக்கும் புராஜெக்ட்டுகளில் ஒன்றிரண்டை முன்னோட்டமாகக் காட்டுவது உண்டு. அப்படிக் காட்டப்பட்டவை அனைத்தும் முடிக்கப்பட்டு பயனீட்டுக்குக் கொடுக்கப் படும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை என்றாலும், கூகுள் என்னென்ன துறைகளில் தனது சக்திகளைச் செலவழித்தபடி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள இந்த அறிவிப்புகள் உதவும். (இந்த விஷயத்தில் ஆப்பிள் ஒரு தந்திர நரி. அவர்களது புராஜெக்ட்டுகள் கடைசி நேரம் வரை ரகசியமாக வைக்கப்படும். இந்த ரகசியக் கட்டுக்கோப்புதான் ஆப்பிளின் பயனீட்டாளர்களிடையே எக்கச்சக்க எதிர்பார்ப்பை உருவாக்கி வணிகத்தை அதிகரிக்கிறது என்பதும் உண்மை.) சென்ற வருட மாநாட்டில், ஆண்ட்ராய்ட் @ ஹோம் என்ற பெயரில் முன்மாதிரி (Prototype) சாதனம் ஒன்றைக் காட்டியது கூகுள். இதைப் பயன்படுத்தி உங்கள் வீட்டின் வயர்லெஸ் இணைய இணைப்பின் மூலம் மியூஸிக் கேட்கலாம். இது அத்தனை. . .
COMMENT(S): 1
நானும் தான் வாலு