WWW - வருங்காலத் தொழில்நுட்பம் வாவ்! எதை எழுதுவது, எதை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைப்பது என்ற பதைபதைப்புடன் இந்த வாரக் கட்டுரையை ஆரம்பிக்கிறேன். இந்த வாரத்தின் பிரதானமாக அலசப்படப்போவது கூகுள். எங்களுக்குச் சொந்தமான ஜாவா மென்பொருளை எங்கள் அனுமதியின்றி, ஆரக்கிள் (www.oracle.com) திருட்டுத்தனமாக ஆண்ட்ராயிட் அலை இயங்குபொருளில் பயன்படுத்துகிறது. இதற்குச் சன்மானமாகப் பல நூறு மில்லியன் டாலர்களைக் கொடுக்க வேண்டும் என்று கூகுள் வழக்குத் தொடர்ந்தபோது, பலரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம், டெக் நிறுவனங்கள் அவ்வப்போது ஒருவர் மீது ஒருவர் வழக்கு தொடுத்துக்கொள்வது அத்தனை விசேஷமான செய்தி அல்ல. ஒரு காலத்தில் ஆப்பிளும் மைக்ரோசாஃப்ட்டும், எலியும் பூனையுமாக ஒன்றின் மீது மற்றொன்று வழக்கு தொடர்ந்துகொண்டு இருந்தன. பின்னாளில், அதே ஆப்பிள் நிறுவனத்தில் மைக்ரோசாஃப்ட் முதலீடு செய்த விநோதமும் நடந்தது. ஆக, டெக் உலகில் இதெல்லாம் சாதாரணமப்பா! ஆனால், கூகுள் கேஸ் கொஞ்சம் சீரியஸ் ஆகும்போல இருக்கிறது. ஆண்ட்ராயிட் இன்று பிரபலமான. . .
எங்களுக்குச் சொந்தமான ஜாவா மென்பொருளை எங்கள் அனுமதியின்றி, ஆரக்கிள் திருட்டுத்தனமாக ஆண்ட்ராயிட் அலை இயங்குபொருளில் பயன்படுத்துகிறது என்று கூகுள் வழக்குத் தொடர்ந்தபோது
-----------------------------------------------------------------
தங்களிடம் இருக்கும் ஜாவா சார்பில் இருக்கும் காப்புரிமம் பெறப்பட்ட விஷயங்களை ஆண்ட்ராயிடில் தெரிந்தே பயன்படுத்தி இருக்கிறது கூகுள் என்கிறது ஆரக்கிள்.
COMMENT(S): 6
Oracle has filed a lawsuit on google not the other way
கட்டுரையின் முதல் பாரா தவறாக உள்ளது...இந்த வழக்கு ஓரக்கிள் .கூகிலின் மேல் தொடர்ந்தது....
ஜட்ஜ் ஐயா, யார் மேல யார் கேஸு போட்ருக்காங்கன்னு முதல்ல விளக்கிருங்களேன்..ரொம்ப புண்ணியமா போகும்..
கூகுளுக்கே சோதனையா?
எது சரியானது?