நானும் விகடனும்!பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்! ''என் அப்பா ஒரு தமிழாசிரியர். தீவிரமான திராவிடர் கழகத்துக்காரர். செய்தித்தாள்கள், புத்தகங்களுக்குத்தான் அதிகம் செலவு செய்வார். 'புத்தகங் கள், அறிவுக்கான முதலீடு’ என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர். பெரியாரின் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்ட ஒருவருடைய வீட்டில் 'விடுதலை’ நாளிதழ் இருப்பதில் எந்த ஆச்சயமும் இல்லை. ஆனால், விகடனும் வாராவாரம் வந்துவிடும். எங்கள் வீட்டில் விகடன் வாங்கிப் படிப்பது குறித்து எப்போது விவாதம் வந்தாலும் அப்பா விகடனை வாசிப்பதற்கான நியாயங்களை அடுக்குவார். சிறு வயதிலேயே அரசியல்மயப்படுத்தப்பட்ட எனக்கு, விகடன் அதன் சமூக அரசியலோடுதான் அறிமுகமானது. விகடனின் கார்ட்டூன்கள் எப்போதும் சிரிப்பு மூட்டும்... சிந்திக்கத் தூண்டும். அப்போது 'பொன்மகள் பூமா’ என்கிற கார்ட்டூன் தொடர் எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. அது போலவே விகடனின் வருகைக்காக ஏங்கவைத்த பகுதிகளான விகடன் தொடர்கதைகள், சிறுகதைகள் எப்போதுமே எனக்கு ஏக இஷ்டம். எழுத்தாளர்கள் சிவசங்கரி, இந்துமதி, சுஜாதா போன்றவர்களின் தொடர்கதைகளை விகடனில். . .
COMMENT(S): 1
ஜெ. தைரியமான பெண்.
அவரை எதிர்த்து எழுதினால் மிகவும் தைரியம் உடையவர் என மற்றவர்கள் நினைப்பார்கள் என முயல்பவர்களில் இவரும் ஒருவர்.