குரு என்பவர் உடலல்ல, நான் என்பது மனம் அல்ல, புத்தி அல்ல, அவரின் உடம்பு அல்ல என்று பலமுறை சொல்லிக் கொடுக்கப் பட்டிருந்தாலும், அவையெல்லாம் அந்தக் கணம் மேலெழாமல், அவருடைய இழப்பு மட்டுமே பக்தர்களை உலுக்கிக் கொண்டிருந்தது. மெள்ள மெள்ள அவரவர் பக்குவத்துக்கு ஏற்ப, அந்த துக்கத்திலிருந்து மீண்டு எழுந்தார்கள். அட, இது எல்லோருக்கும் நடக்கப் போகிறது. நிச்சயம் ஒவ்வொருவரும் மரணமடையப் போகிறோம். இந்த மாதிரியான ஒரு நேரம் இங்கு உள்ள அனைவருக்கும் உண்டு. தொடர்ந்து இந்த மரணம் ஜனங்களுக்கு ஏற்படத்தான் செய்யும். இந்த மரணம் கண்டு தவிப்பது என்பது தேவையில்லை. 'நான்’ மரணமடையக்கூடிய விஷயமல்ல; 'நான்’ அதைவிடப் பெரியவன். மிகப் பெரிய சக்தி. என் ஆன்ம சக்தி என்பதை நான் பார்த்துவிட்டால் இதெல்லாம் விஷயமே இல்லை. இதைத்தான் எனக்கு என் குரு சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்று மனம் தேறினார்கள். தொடர்ந்து எல்லா வேலைகளும் மளமளவென்று நிறைவேறின. திருவண்ணாமலை மக்கள் சாரி. . .