வந்து கலக்கிய வின்ஃப்ரே... வராமல் கலக்கிய ரஷ்டி!
'சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம் பரைச் சொத்து’ என்பது சாட்சாத் சிவபெருமானுக்காக 'திருவிளையாடல்’ திரைப்படத்தில் எழுதப்பட்ட வசனம். உலகில் ஒரு கோடிக் கடிகாரங்கள் ஒரே நேரத்தைக் காட்டக்கூடும்... இரண்டு எழுத்தாளர்கள் ஒரே கருத்தில் உடன்பட மாட்டார்கள் என்பது இலக்கியவாதிகள் குறித்த தற்கால தமாஷ். அந்த விதத்தில் உலகம் எங்கும் இருந்து 262 எழுத்தாளர்களைச் சங்கமிக்கவைத்த ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சம் இருக்காமல் போகுமா? ஜனவரி 20 முதல் 25 வரை நடைபெற்ற இந்த விழாவுக்கு, தமிழகத்தில் இருந்து அழைக்கப்பட்டிருந்த எழுத்தாளர்கள் இரண்டு பேர். ஒருவர், சாரு நிவேதிதா. இன்னொருவர் பாமா. விழாக் களேபரங்கள் முடிந்து சென்னைக்குத் திரும்ப ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் காத்திருந்த சாரு நிவேதிதாவிடம் பேசினோம். ''ஜெய்ப்பூரின் டிஜி அரண்மனையில் நடந்த விழாவை இலக்கியக். . .