''நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!'' கலைஞருக்கு மீண்டும் ஒரு கடிதம்!

ன்பிற்கும் மதிப்பிற்கும் என்றும் உரிய ஐயா கலைஞர் அவர்களுக்கு... 

வணங்கி மகிழ்கிறேன். உங்களுக்கு நான் வரைந்த இரண்டு கடிதங்களை 'முரசொலி’ இதழின் முதல் பக்கத்தில் வெளியிட்டு 'நன்றி’ மறந்த என்னை நயத்தகு நாகரிகத்துடன் 'வாழ்த்தி’ இருக்கிறீர்கள். பெருந்தலைவர் காமராஜருக்கு நினைவாலயம் எழுப்பிய உங்கள் பெருந்தன்மைக்கு இன்றும் என் நெஞ்சார்ந்த நன்றியைச் சமர்ப்பிக்கிறேன். காமராஜர் பிறந்த நாளை மாநிலம் முழுவதும் அனைத்துக் கல்வி நிலையங்களிலும் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்த தங்கள் அரசியல் பகையற்ற அன்பின் விரிவை என்றும் நினைந்து, நெஞ்சம் நெகிழ்ந்து நன்றி மலர்களை உங்களுக்குக் காணிக்கையாக்குவேன்.

'நான் கேட்காமலே எனக்கு மாநிலத் திட்டக் குழு உறுப்பினர் பதவியும், பாரதி விருதும் மனமுவந்து அளித்து என்னைத் தாங்கள் பெருமைப்படுத்தியதையும், வீடற்ற எனக்கு வீட்டு வசதி வாரியத்தில்

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
'போட்டு'க் கொடுக்காத நண்பர்கள்.. தாயார் நினைவு நாளுக்கு வராத மகன்...
'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்!
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 69
Profile

mHn 3 Years ago

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது தமிழருவி அவர்களே. நீங்கள் மு.க.வை வசைபாடுவதற்கு இந்த ஆதரவு. அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்தான். இதே அளவு விமர்சனத்தை நேர்மையோடு தற்போதைய ஆளுங்கட்சியை பற்றி கூறிப்பாரும். அப்பொழுது புரியும், மு.க.வே பரவாயில்லையே என்று.

 
Profile

Prakash 3 Years ago

சந்துரு சொல்வது உண்மை.அறுபதுகளில் சென்னை கல்லூரிகளில் நிறய இலங்கை தமிழர்கள் படித்துகொண்டிருந்தார்கள்.அவர்களுக்கு எப்பவும் தமிழ்நாடு தமிழர்கள் என்றால் அவ்வளவு இளப்பம்.அவரகளிடம் அப்போதே ரேடியோ பேன் எல்லாம் இருக்கும்.இங்குள்ளவர்களுக்கு அதெல்லாம் அப்போது ஒரு கனவு

 
Profile

vinod 3 Years ago

எனக்கு அடிக்கடி இந்த கவுண்டமணி வசனம் நினைவுக்கு வருகிறது... "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...."

 
Profile

Naval 3 Years ago

Mr Venkatesan, are you alright?

 
Profile

Naval 3 Years ago

Mr Siva, Can you explain for whom we have housing board flats? Are you saying he is not eligible to get a house in housing board for rental? Don’t act too smart Mr Siva.

 
Profile

Naval 3 Years ago

Mr Albert, Mind your words. Have you seen he has got money for giving speech? don't talk

 
Profile

ARU 3 Years ago

மு க விடம் ஒரு கேள்வி பதில்
கர்மவீரருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்,
அவருக்கு மனிமண்டபம் கட்டினேன்,காகம் உக்கார வெயிலில் சிலை வைத்தேன்,
திரு அம்பேத்காருக்கு என்ன செய்தீர்கள்,
அவருக்கும் சிலை வைத்தேன்,மன்டபம் கட்டினேன்,சட்ட கல்லூரிக்கு அவர் பெயர் வைத்தேன்,
அண்ணா ,பெரியார் கொள்கைகலுக்காக என்ன செய்தீர்கள்,
அவர்களுக்கும் சிலை வைத்தேன்,மண்டபம் கட்டினேன்,

அட பாவி,இதுவா அந்த மாபெரும் தலைவர்கள் உஙகளிடம் கேட்டது,
அனைவருக்கும் இலவச பொதுவான தரமான கல்வி,தாழ்த்தபடுத்த பட்ட மக்களுக்கு பொருளாதார முன்னேற்ரம்,நல்ல உடை உணவு,அல்லவா,

ஆனால் நீ (ங்கள் )
உஙக்ளை வரலாறு மன்னிக்காது,
பெரும் தலவர்களின் ஆன்மாவும் மன்னிக்காது,

நாமக்கல் கவி க்கு 50 ரூபாய் கொடுத்ததர்க்கே சொல்லி காட்டிய தலைவன் மு க,

 
Profile

ARU 3 Years ago

யாருக்காவது வெரும் 10 ரூபாய் கொடுத்து விட்டாலே ,மாப்பிள்ளை இவர்தான்,அவர் போட்டு இருக்கும் சட்டை என்னுடயது என்ரு மானம் கெட வைக்கும் மதிகெட்ட மு க விடம் இருந்து பெற்ற வீட்டை அரசிடமே ஒப்படைத்து விட்டு நீங்கள் வேறு ஒரு வாடகை வீட்டிற்கு செல்வதே நல்லது,

 
Profile

Ilango 3 Years ago

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்
பழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்.

இது தமிழ்மகள் அவ்வையாரின் தீர்ப்பு. நல்லவர் நட்பு, இரக்க குணம், கொடை கொடுக்கும் பண்பு பிறவியிலேயே வரவேண்டும். இடையில் வரவழைக்க முடியாது. கருணாநிதிக்கு இந்தப் பிறவிக் குணம் இல்லை. அவரிடம் பழிவாங்கும் போக்குத்தான் அதிகம். தமிழருவி மணியனை அவர் குடியிருந்து வீட்டில் இருந்து துரத்த கருணாநிதி எடுத்த முயற்சிகள் அவரது பழிவாங்கும் குணத்தையே காட்டுகிறது. அவரிடம் இரக்கம் அல்லது கண்ணோட்டம் இல்லை என்பதைக் காட்டுகிறது. இதனால்தான் வள்ளுவர் சொன்னார் "நுண்ணிய நுால்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும்" என்றார். திருக்குறளுக்கு உரை எழுதினாலும் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை எழுப்பினாலும் பிறவிக் குணங்களான தயை, கொடை இல்லாவிட்டால் பயனில்லை. ஈழத்தமிழர் உரிமைக்காக இரண்டு முறை எனது பதவியைத் துறந்து இருக்கிறேன் இன்னொரு முறை பதவி இழக்கத் தயார் இல்லை என தமிழீழம் எரிந்து கொண்டிருக்கும் நேரத்தில் சொன்னார். ஒரு இனத்தின் உரிமைக்காக இத்தனை முறைதான் பதவி துறக்கலாம் என்ற விதி ஏதாவது இருக்கிறதா? இப்போது பதவியும் குடையும் குஞ்சரமும் போய்விட்டதே? அப்போது பதவி துறந்திருந்தால் மீண்டும் பதவிக்கு வர ஒரு வாய்ப்பு இருந்தி்ருக்கும். கருணாநிதி நிறையச் சாதித்திருக்கிறார். ஆனால் அவைவிட நிறையச் செய்யாமலும் விட்டிருக்கிறார். செய்ய வேண்டியதைச் செய்யாமலும் செய்ய வேண்டாதவற்றை செய்தலும் கேடு தரும் என்பது வள்ளுவர் வாக்கு.

 
Profile

DEVARAJ 3 Years ago

This is the time to write letters to JJ not to MK!

 
placeholder
Advertisement
placeholder
10.176.70.11:80