பிரிக்ஸில் இருக்குமா இந்தியா?
இந்த உலகில் இப்போது அதிகாரத்தில் இருக்கும் தலைவர்களில் மன்மோகன் சிங் அளவுக்கு பொருளாதார மேதை யாரும் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளும் அரசியல் விமர்சகர்கள்தான், மன்மோகன் அளவுக்கு மோசமாக யாருமே செயல்படவில்லை என்றும் சொல்கிறார்கள். தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பதவி ஏற்றிருக்கும் காங்கிரஸ் அரசு, உருப்படியாக என்ன செய்தது என்றுபார்த்தால், உடனடியாக எதுவுமே நினைவில் வராது. ஒருவேளை நிறுத்தி நிதானமாக யோசித்தால், ஏதாவது கிடைக்கக்கூடும். அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நிறையப் பிரச்னைகள். இதற்குக் காரணம் சூழ்நிலைகளா அல்லது அப்படிப்பட்ட சூழ்நிலைகளை உருவாக்கிய காங்கிரஸ் அரசா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும். ஒரு மசோதா தாக்கல் செய்யவேண்டும் என்றால், பிரதமர் மன்மோகன் சிங் மட்டும் மனது வைத்தால் போதாது. முதலில், சோனியா ஒப்புக்கொள்ள வேண்டும். அடுத்து, மன்மோகனின் அமைச்சரவை சகாக்களிடம். . .