ஓசியாக் கொடுக்குறதுதானே, வாங்கிட்டுப் போம்மா!
'தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடியில் அமைந்திருக்கிறது அகமலை என்ற மலைக்கிராமம். முதல்வரின் கனவுத் திட்டமான இலவச ஆடு - மாடு வழங்கும் வழங்கும் திட்டத்தின் கீழ் சமீபத்தில் இங்கு, ஆடுகள் வழங்கப்பட்டன. கொடுத்த இரண்டு நாளிலேயே அவை ஒவ்வொன்றாக இறக்கத் தொடங்கி விட்டன’ என்ற தகவல், ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-42890005) வந்தது. உடனே கிளம்பினோம். கடல் மட்டத்தில் இருந்து 4,000 அடிக்கும் மேற்பட்ட உயரத்தில் அமைந்திருக்கிறது அகமலை கிராமம். பேருந்து கிடையாது. ஜீப்பில்தான் செல்ல வேண்டும். பெரியகுளத்தில் இருந்து சோத்துப்பாறை அணை வழியாக 30 கி.மீ. சென்றால், அகமலை ஊராட்சி. இந்த தூரத்தைக் கடப்பது அத்தனை எளிதல்ல. மிக ஆபத்தான பயணம். ஊர் எல்லையில் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த தேவிகா, ''அகமலை, அண்ணா நகர், ஊரடி,. . .