தெருவுக்கு வருகிறது சினிமாச் சண்டை!
பெப்ஸியை இரண் டாக உடைக்க லாம் என்று, சினிமா தயாரிப்பாளர்கள் நினைக்க... அவர் களது அமைப்பே இரண்டுபடும் அளவுக்கு நிலைமை சிக்கலாகிறது. ஊதிய உயர்வு கேட்டு பெப்ஸி அமைப்பினர் ஸ்டிரைக் செய்து வருகிறார்கள். அவர்கள் கேட்கும் ஊதிய உயர்வைத் தயாரிப்பாளர்கள் தர மறுப்பதால், கடந்த சில நாட்களாக சினிமா படப்பிடிப்புகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 'தொழிலாளர்கள் கேட்கும் ஊதியத்தைக் கொடுத்தால் என்ன?’ என்று இயக்குநர் அமீர் அந்தப் பக்கம் சாய ஆரம்பித்தார். உடனே, 'அமீர் மீது உரிய நடவடிக்கை எடுப்போம்’ என்று இயக்குநர் சங்கச் செயலாளர் சேரன் கொந்தளித்தார். அதற்குப் பதிலடியாக, 'பெப்ஸி அமைப்பின் ஊதியக் குழுத் தலைவர் அமீர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய சேரனை வன்மையாகக் கண்டிக்கிறோம். பெப்ஸி மட்டும். . .