''எட்டு பேருக்குக்கூட வீடு கொடுக்க வக்கில்லை!''
ஜனவரி 25-ம் தேதி... மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்டது. ஈரோடு கூட்டத்துக்கு சிறப்புப் பேச்சாளர் குஷ்பு. ''தமிழ் மொழிக்காகப் போராடி உயிரைத் தியாகம் செஞ்சவங்களுக்கு வீரவணக்கம் செலுத்துற கூட்டத்துல குஷ்புக்கு என்ன வேலைன்னு சில பத்திரிகையாளர்கள் என்கிட்ட கேட்டாங்க. வட மாநிலத்துல பிறந்து வளர்ந்த நான், கடந்த 25 வருஷமா தமிழ்நாட்டுலதான் இருக்கேன். 10 மொழிப் படங்களில் நடிச்சிருக்கேன். எந்த மொழி பேசினாலும் நாக்குக்கும் மூளைக்கும்தான் சம்பந்தம் இருக்கும். ஆனா, தமிழ்மொழி பேசினா மட்டும்தான் நாடிக்கும் நரம்புக்கும் சம்பந்தம் இருக்கிறதாகத் தோணுது. நான் ஹைதராபாத், பெங்களுருன்னு போயிருக்கலாம். ஆனா, தமிழ்மொழி மேல இருக்கிற ஆர்வத்துலதான் இங்கேயே இருக்கேன். ஒரு தமிழனைக் கல்யாணம் பண்ணிக் கிட்டு ரெண்டு தமிழச்சிகளைப் பெத்திருக்கிறேன். தமிழ்நாட்டின் மருமகளாக. . .