Advertisement
என் டைரி - 269 அப்பா மகன்... ஒரு அபாய ஆட்டம் !

வாசகிகள் பக்கம்

என் மகனுக்கும், கணவருக்குமான ஈகோ பிரச்னையில் நிம்மதி இழந்து நிற்கிறோம் நானும், என் மகளும். மகனுக்கு ஏழு வயது, மகளுக்கு இரண்டு வயது இருந்த சமயம்... வெளிநாட்டு வேலைக்குப் போனார் கணவர். இந்தப் பிரிவு எங்கள் அனைவருக்குமே தாங்க முடியாத துயரமாக இருந்தாலும், அன்றைய குடும்பச் சூழல் அந்த வேலையை ஒதுக்கும் தைரியத்தை எங்களுக்குத் தரவில்லை. ஆண்டுக்கு ஒருமுறை இரண்டு வார விடுமுறையில் வருவார். மற்றபடி, கடிதங்களும், தொலைபேசி அழைப்புகளுமே எங்களுக்குள் பாலமானது.

குடும்பத் தலைவர் வீட்டில் இல்லாமல் வாழும், வளரும் சூழலை நானும் என் பெண்ணும் ஏற்றுக் கொண்டோம், புரிந்து கொண்டோம். ஆனால், என் பையன் வளர வளர, அப்பா மீது அவனுக்கு கோபமும் வளர்ந்தது. ''குடும்பத்தைவிட காசுதான் அவருக்குப் பெருசாயிருக்கா..?'' என்று சூடானவனிடம், ''நம் எதிர்காலத்துக்காகத்தான் அப்பா இந்த தியாகத்தைச் செய்கிறார்'' என்று எவ்வளவோ எடுத்துக்கூறியும் பயனில

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
கேபிள் கலாட்டா !
30 வகை சீஸன் சமையல் !
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 11
Profile

நடராஜன் 3 Years ago

கவலையே படாதீங்க.. இந்த விஷயத்தில் அப்பாவும், பையனும் சேர்ந்து காதலை எதிர்ப்பாங்க.. தமாஷ் இல்லீங்க.. நாளிதழ் போன்ற விஷயங்களை விட்டுத்தள்ளுங்கள். பெரிய பிரச்னை வராதவரை பொறுப்பான இருவரும் சண்டை போடுவாங்க. அதுவும் ஒருவித அன்பு தான். பிரச்னை ஒன்று பெரிதாக வரும்போது இருவரும் ஒன்று சேர்வார்கள். அப்பா, பையன் இருவரும் பொறுப்பானவர்கள் தானே. அப்போ பொண்ணு காதலுக்கு என்ன வழின்னு கேக்கறீங்களா.. நீங்கள் தான் சரியான் முடிவு எடுக்க வேண்டும். நல்ல பையனாக இருந்தால் நீங்களே சரியான முடிவுதான் எடுப்பீர்கள். இந்த காதல் காரணத்தில் அப்பா, மகன் ஒன்று சேர்ந்து திருமணம் கை கூடட்டும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கட்டும்.

 
Profile

usha 3 Years ago

உங்கள் மகனுக்கும்,கணவருக்கும் ஏற்பட்டிருப்பது ஈகோ,போராட்டம் என்பதை விட,பாசபோராட்டம் என்பதுதான் சரி,தந்தையின் அருகாமை கிடைக்க வேண்டிய வயதில் கிடைக்காத கோபத்தின் வெளிப்பாடுதான் உங்கள் மகனின் செயல்,இதில் முழுவதும் மாறவேண்டியவர்,உங்கள் கணவரே,அவர்களுக்குள் இடைவெளி இந்த அளவிற்கு வந்ததிற்கு,நீங்களும் காரணம்,இப்போதும் ஒன்றும் ஆகிவிடவில்லை,உங்கள் கணவரை உங்கள் மகனிடம் மனதில் உள்ள பாசத்தை வெளிபடுத்தி பேச சொல்லுங்கள்,எல்லாம் சரியாகிவிடும்,அன்பை வெளிபடுத்த சொல்லுங்கள்,அன்பு குழந்தைகளிடம் என்றும் தோற்றதில்லை சகோதரி,மாற்றம் உங்கள் கணவரிடம் வேண்டும்,மாறவேண்டியவர் அவரே,முயற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள்.....

 
Profile

Vignesh 3 Years ago

சகோதரி, உங்கள் நிலைமை புரிகிறது. எதுவும் வெளியில் இருந்து ஆலோசனை சொல்லி விடலாம், ஆனால் நிஜத்தில் அதை செய்து பார்க்கும் பொழுதுதான் அதன் வீரியம் புரியும். மாற்றம் உங்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

இவ்வளவு காலம் உங்கள் மகனுக்கும், கணவருக்கும் சரியான பாலத்தை உருவாக்கியிருக்க வேண்டும். அடிக்கடி மகனிடம் உங்கள் கணவரை பற்றின நல்ல அபிப்ராயத்தை உருவாக்கி இருக்க வேண்டும். போகட்டும். இனி உங்கள் கணவர் ஏன் வெளிநாட்டிற்க்கு போனார் என்னும் காரணத்தை உங்கள் மகனிடம் உட்கார்ந்து பேசுங்கள். அவர் அவசொல் பேசும்போதோ, கோவத்தில் திட்டும் பொழுதோ உங்கள் கணவரை ஆதரித்து பேசினால், அது எதிர்மறை எண்ணத்தை உங்கள் மகனிற்க்கு கொடுக்கும். அதற்க்கு பதிலாக கோவிலுக்கு அல்லது பூங்கா போன்ற இடத்திற்க்கு அழைத்து சென்று மனம் விட்டு பேசுங்கள். உங்கள் கணவர் வெளிநாட்டிற்க்கு செல்லும் முன், உங்கள் வீட்டின் பொருளாதார நிலைமை எப்படி இருந்தது. காசிற்க்கு எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் என்பதை உணர்வுபூர்வமாக விளக்குகங்கள்.

உங்கள் குடும்பத்தை வாரத்திற்க்கு ஒரு முறை சினிமா, உணவகத்திற்க்கு அழைத்து சென்று உள்ளார்ந்தபபூர்வமான இணக்கத்தை உருவாக்குங்கள்.

எந்த நேரத்திலும் நீங்களோ அல்லது உங்கள் மகளோ சார்ப்பு நிலை எடுக்காமல், உங்கள் கணவருக்கும் மகனுக்கும் அன்போடு பழகுங்கள்.

அதிகார விஷயத்தில், உங்களின் கணவரின் நிலை புரிந்தாலும், அவர் இனி அவர் வீட்டின் அதிகார மையமாக மாறுவது நியாயமாக இருக்காது. இவ்வளவு காலம் அவர் தன்னை தியாகம் செய்து விட்டு வீட்டிற்க்கு சம்பாதித்து தந்தாலும், உங்கள் மகன் சிறு வயது முதல் முக்கிய முடிவுகளை எடுக்க பக்குவமும், தார்மீக உரிமையும் பெற்றுவிட்டார். சிறு வயது முதல் இந்த அதிகாரம் இருந்து திடிரென்று அது இல்லாமல் போனால் அவரை சமாதான படுத்துவது இயலாது. அதற்க்கு பதிலாக உங்கள் கணவ்ர் இனிமேல் உங்கள் மகன் எடுக்கும் முடிவிற்க்கு வழிகாட்டியாகவும், உறுதுணையாக இருப்பதே உசித்தம். நாளிடைவில் உங்கள் கணவர் விட்டு கொடுக்கும் பாங்கு, வழிக்காட்டும் முறையை புரிந்து கொண்டு, உங்கள் மகன் தானாகவே உங்கள் கணவரை வீட்டின் தலைவனாக முன்னுறுத்துவார்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பிறகு, உங்கள் மகளின் திருமண பேச்சை நீங்கள் ஆரம்பிக்கலாம். உங்களின் சார்ப்புதன்மை இல்லாத உண்மையான அன்பு மட்டுமே இந்த பிரச்சனையை முடிக்கவல்லது. உங்களின் கணவரின் பொருளாதார பங்களிப்பும், உங்கள் மகனின் ஆளுமை பக்குவமும், உங்கள் அன்பும் உங்கள் குடும்பத்தை உயர்ந்த என் வாழ்த்துக்கள்.

 
Profile

usha 3 Years ago

என்னுடைய கருத்து எங்கங்க போச்சு.........

 
Profile

Abuthalib 3 Years ago

உண்மையில் நிம்மதி இழந்து தவிப்பது உஙகள் கணவரும் உஙகள் மகனும்தான்..

உங்கள் கேள்விக்கான நோக்கம் அவர்களின் நிம்மதியை மீட்டெடுப்பதற்காக இல்லை என்கிறபோது வருத்தம்தான் மிஞ்சுகிறது.

இருவரையும் சரியாக புரிந்துவைத்துள்ள நீங்கள் இருவரின் புரிதலுக்கும் ஒரு பாலமாக இருந்திருக்க வேண்டாமா..?

அது உங்கள் கடமையும் கூட..

தந்தையும் மகனும் எந்த ஒரு குறையும் வைக்காமல் உங்களிருவரையும் நன்றாக கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரின் புரிதலின்மையால் உங்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்பதால் கூடுதலான எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளாமல் ஆரம்பகட்ட முயற்சியோடு அமைதியாக இருந்துவிட்டீர்கள் போலும்.

உங்கள் அமைதியின் விபரீதம் தற்போது புரியவர ஆலோசனை கேட்டுள்ளீர்கள்.. அதுவும் உங்கள் மகளின் ஆசைக்கு இவர்களால் பங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக..

அழுது அடம்பிடிக்கிற பிள்ளை கேட்பதெல்லாம் கிடைக்கும். அமைதியாக இருக்கும் பிள்ளை கேட்பவற்றில் வெகுசில மட்டுமே கிடைக்கும். என்கிற நியாயம்தான் உங்கள் கேள்வியிலும்.

உங்கள் கணவரும் மகனும் தனிப்பட்ட முறையில் உங்கள் மீதும் உங்கள் மகள் மீதும் பிரியமாகவுள்ளனர். உங்களை காரணியாக வைத்தே அவர்கள் இருவரையும் மிக எளிதாக ஒற்றுமைப்படுத்திவிடலாம்.

நீங்களும் சரி உங்கள் மகளும் சரி அவர்களிடம் மனம்விட்டு பேசும் பொழுது அவர்களின் ஒற்றுமை மட்டுமே உங்களிருவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் என்பதையும், அவர்களின் புரிதலின்மையால் நீங்கள் அடையும் வேதனையையும் அமைதியின்மையையும் மிக ஆழமாக அவர்களுக்கு புரியவையுங்கள். நன்றாக கவனியுங்கள் உங்கள் மன நிலையை மட்டும் புரியவையுங்கள். அவர்களில் யார் சரி யார் தவறு என்கிற வரையறைக்குள் செல்லாதீர்கள்.

உங்கள் மன நிலையை மிகசரியாக அவர்களுக்கு புரியவைத்துவிட்டால்.. அவர்களின் பகையை உங்கள் முன் காண்பித்துக்கொள்ள மாட்டார்கள். இது அவர்களின் ஒற்றுமையின் முதல்படி. பிறகு அவர்கள் ஒருவரை ஒருவர் அறியாமல் கவனிக்க ஆரம்பிப்பார்கள்.

இப்படி அவர்களை புரிதலுக்கு உள்ளாக்கி அழகுபாருங்கள். பிறகு உங்கள் மகளின் எதிர்காலம் மட்டுமல்ல நீங்களும் மகிழ்ச்சியுடன் மன நிம்மதியோடு வாழ்வீர்கள்...

வாழ்த்துக்கள்..

-அபுதாலிப் மலேசியா

 
Profile

SAR 3 Years ago

Sorry for typing in English. First of all, it is not advisable to allow any unknown person inside the house. In Islam it is said that non mahram male and female should not be alone together(non mahram are those person who can marry between them), because the third person will be Shaitan. Even if no one beleive this doesnt matter, it is not safe and a good choice to allow them inside and ask them sit if we do not know the person. Ask them to stand outside and deal at the door only.

 
Profile

Ram Prasath 3 Years ago

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது பழமொழி. அதைத்தான் குடும்பத் தலைவராக உங்கள் கணவர் செய்திருக்கிறார். குழந்தைகள் படித்து ஆளானதும் அவருடைய பணத்தைக் கொண்டுதானே. வெளிநாட்டில் வேலை என்றால் குடும்பத்தைப் பிரிந்த துயரத்தை அவரும் அனுபவித்துத்தான் இருக்கிறார். அவர் வேறு தவறேதும் செய்யாத நிலையில் உங்கள் மகனின் செயல் அவரின் மனதைப் புண்படுத்தவே செய்யும். தங்களின் மகனுக்கு தக்க கவுன்சிலிங் கொடுத்து தந்தையின் நேர்மையையும் அன்பையும் புரியவையுங்கள். மகளின் காதல் மட்டுமல்ல
ஏற்பாடு செய்யும் திருமணமானாலும் யாராவது ஒருவரின் சம்மதம் கிடைக்கவில்லை என்றாலும் மிகப் பெரிய பிளவை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். தகப்பன் அருகில் இல்லையென்றாலும் தாயின் அருகாமையில் வளர்ந்தவர்தானே; உங்கள் பேச்சை நிச்சயம் உங்கள் மகன் கேட்பார். உங்களின் குடும்ப ஒற்றுமைக்கும் அமைதிக்கும் பிரார்த்திக்கிறேன்.

 
Profile

vinothini 3 Years ago

your son will be around 27.get him married atfirst,let him live and command his own life without a single penny fm ur husband earning.

 
Profile

Ganesh kumar 3 Years ago

This is the impact from cinema. Like this same seen is available in singam puli movie acted by Jeeva. Due to negative cinema scenes boys are misbehaving like this.

 
Profile

stanislas 3 Years ago

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே,நினைக்கட்டுமே,நீ தான் உனக்கு நீதிபதி...எந்த நிலையும் மாறும்.ஆக,இதுவும் மாற வேண்டும்.

 
10.176.68.62:80