வாசகிகள் பக்கம் ''காதல் சிறப்பிதழ் தயாராகிக் கொண்டிருக்கும் எனத் தெரியும். காதல் என்பது எல்லோருக்கும் வசந்தத்தை மட்டுமே கொடுத்துவிடாது. அது தரும் ஏமாற்றங்களும், துன்பங்களும் கொடூரமானவை. அதன் நிகழ்கால சாட்சிகளில் நானும் ஒருத்தியாக நிற்கிறேன். விருந்துக்கு நடுவில் வைக்கும் மருந்தைப் போல், இந்த இதழில் மிளிரும் காதல் கொண்டாட்டக் கட்டுரைகளுக்கு நடுவில், தவறான வயதில், தவறான நபரின் மேல், தவறான சூழலில் கைகோக்கும் காதலுக்கு... தோல்வியும், திண்டாட்டமுமே மிஞ்சும் என்று உணர்த்தும் என்னுடைய இந்த எச்சரிக்கை கடிதத்தையும் வையுங்கள்!'' - உரிமையுடன், உருக்கத்துடன் எழுதிஇருந்தார், மதுரையைச் சேர்ந்த 32 வயதான அவள் வாசகி (பெயர் மற்றும் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன). ''நான் ப்ளஸ் டூ படித்தபோது, எதிர்வீட்டில் குடியிருந்தார் கல்லூரி மாணவரான அவர். எங்களுக்குள் காதல் மலர்ந்தது.. . .