டாக்டர்களிடம் போனதுமே முதலில் வரும் அட்வைஸ்... 'சாப்பாட்டுல நிறைய காய்கறியை சேர்த்துக்கோங்க' என்பதுதான். அதற்காக, சீஸன் இல்லாத சமயங்களிலும் விளைந்துவரும் காய்கறிகளை, கிலோ 100 ரூபாய், 200 ரூபாய் என்று கொடுத்து வாங்கி சமைக்கத் தேவையில்லை. சீஸனில் விலை மலிவாக வரும் காய்கறிகளே போதும்! 'இந்த நேரத்தில் உனக்கு இந்த சத்து தேவை. நீ இந்தக் காயைச் சாப்பிட வேண்டும்' என்று இயற்கையே நம்முடைய உடல் நலனில் அக்கறை கொண்டு விளைவிக்கும் காய்கறிகள் அவை! இங்கே உங்களுக்கு உதவுவதற்காக... 30 வகை சீஸன் சமையல் ரெசிபிகளை பரிமாறுகிறார் சமையல்கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார். அந்த ரெசிபிகளுக்கு மகுடம் சூட்டும் விதமாக அழகுற அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி. பனங்கிழங்கு புட்டு தேவையானவை: பனங்கிழங்கு - 3, சின்ன. . .