108 முறை வலம் வந்தால்... ஐஸ்வரிய பாக்கியம்!
காசி க்ஷேத்திரத்திலிருந்து சிவலிங்கத் திருமேனியை எடுத்து வந்து தென்னகத்தில் பிரதிஷ்டை செய்த தலங்கள் பல உண்டு. அவற்றில், பொறையார் ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வநாதர் ஆலயமும் ஒன்று! நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பொறையார். அழகிய இந்தக் கிராமத்தில், சுமார் 800 வருடப் பழைமை வாய்ந்த திருக்கோயிலில் இருந்தபடி, தன்னை நாடி வரும் அடியவர்களுக்கெல்லாம் அருளிக் கொண்டிருக்கிறார் சிவனார். காசியம்பதியில், கங்கை நதியில் இருந்து கிடைத்த சிவலிங்க மூர்த்தம் இது. எனவே, ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீவிஸ்வநாதர் என்றும், அம்பாளின் திருநாமம் ஸ்ரீவிசாலாட்சி என்றும் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். கோயிலின் ஸ்தல விருட்சம் - பவளமல்லி. ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீஅய்யனார், ஸ்ரீதுர்கை. ஸ்ரீசரஸ்வதிதேவி ஆகியோர் தனிச் சந்நிதிகளில் இருந்தபடி அருள்பாலிக்கின்றனர்.. . .