அளவு முக்கியமா? அழகும் ஆரோக்கியமும் நிறைந்த 25 வயது வாலிபன் அவன். ஒரு சுப தினத்தில் அவனுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத் தேதி நெருங்க நெருங்க மனதின் உச்சியில் நின்று யாரோ உடுக்கை அடிப்பதுபோல் இருந்தது. அந்த பயத்துக்குக் காரணம் ஒரு 'சின்ன’ விஷயம்தான். தன்னுடைய ஆண் உறுப்பு அளவில் சிறியதாக இருப்பதாக அவனுக்குள் ஒரு வேதனையான நினைப்பு. திருமணம் நெருங்க நெருங்க அந்தச் சின்ன விஷயம் பெரிய வேதனையாக மாறி மனதை அலைக்கழிக்கத் தொடங்கியது. ஊரே வேடிக்கைப் பார்ப்பது மாதிரியான குற்றத்தைச் செய்தவன்போல் தடுமாறித் தவித்தான். பயத்தில், திருமணத்துக்கு முதல் நாள் யாரிடமும் சொல்லாமல் மண்டபத்தில் இருந்து கிளம்பிவிட்டான். அந்த இளைஞனுடைய பயமும் சந்தேகமும் சரிதானா? ஆண் உறுப்பைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளாததுதான் அந்த இளைஞனுடைய பயத்துக்கு முதல் காரணம். ஆணின் பிறப்பு உறுப்பு ஒரு உருளை (Cylindrical shape)போன்று இருக்கும். பெண்ணின் உறுப்புக்குள் இயல்பாக நுழைவதற்காகத்தான் இயற்கை அப்படி. . .