நம் நாட்டில் வீட்டுக்கு வீடு மரம் நடுகிறோமோ இல்லையோ... வீட்டுக்கு வீடு சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள். டயாபட்டீஸைப் பொறுத்தவரை, உலகிலேயே நாம்தான் முதல் இடத்தில் இருக்கிறோம் என்பது வேதனையான விஷயம். நமது நாட்டில் சுமார் 6.24 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சொல்கிறது. வாழ்க்கைச் சூழலும், உணவுப் பழக்கமும் மாறியதால் வந்த விபரீதம் இது. சிறியவர் - பெரியவர், ஆண் - பெண், ஏழை - பணக்காரர் என்ற எந்தப் பாகுபாடுகளும் இல்லாமல், அனைவரையும் ஆட்டிப்படைக்கும் நோய் இது. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துக் குணப்படுத்தாவிட்டால், கண், கால், இதயம், சிறுநீரகம், நரம்பு மண்டலம் என்று உடலைக் கொஞ்சம் கொஞ்சமாக முடக்கும் ஆபத்தைத் தரும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும், வந்துவிட்டால் அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் இயக்குநர் டாக்டர் வி.மோகன் சொல்லும் ஆலோசனைகள் இங்கே... 01 நல்ல உடல் நலத்துடன். . .